ரூ.37 ஆயிரம் கோடி தீபாவளி

கே.என். சிவராமன்

ரூ.37 ஆயிரம் கோடி தீபாவளி

ரூ.37 ஆயிரம் கோடி - இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் விற்பனையான உடைகள் / பட்டாசுகளின் விற்பனைத் தொகை.

இதில், தீபாவளிக்கு முந்தைய தினம் - ஞாயிறு - மட்டும் தமிழகத்தில் பல கிளைகளைக் கொண்ட மூன்று ஜவுளிக் கடைகளில் தலா ரூ.5 + கோடிகள் அளவுக்கு விற்பனையாகி உள்ளன. இதில் ஒரு நிறுவனத்தில் ரூ.10 கோடிக்கு சேல்ஸ் நடந்திருக்கிறது.

நடைப்பாதை கடைகளின் விற்பனை இதில் சேராது. அது தனி.

கவனிக்க இந்த ரூ.37 ஆயிரம் கோடி என்பது கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ள தொகை மட்டுமே.

இன்னும் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பலகாரங்கள் -

டாஸ்மாக் விற்பனை -

காய்கறிகள் / பழங்கள் / இறைச்சிகளின் சேல்ஸ் -

திரைப்பட வசூல் / திரையரங்க பார்க்கிங் - கேண்டீன் விற்பனை -

ரயில் / ஆம்னி பஸ் / அரசுப் போக்குவரத்துக் கழக வருமானம் / சொந்தக் கார் - டூ வீலர் - cab ஆகியவற்றில் சொந்த ஊர்களுக்கு பயணபட்டது / பெட்ரோல் டீசல் நிரப்பியது / டோல்கேட் கட்டணங்கள்...

சேர்க்கப்படவில்லை.

போலவே உணவகங்கள், ஆன்லைன் வழியாக உணவு ஆர்டர், ஹோம் அப்ளையன்ஸ் - நகைக்கடைகள் விற்பனை...  

உள்ளிட்டவற்றின் தீபாவளி டர்ன் ஓவர் தெரியவில்லை.

அடுத்து -

லிக்விட் கேஷ் ஆக எவ்வளவு, யுபிஐ / டெபிட் கார்ட் வழியாக எவ்வளவு செலுத்தப்பட்டது...

கிரெடிட் கார்டில் எவ்வளவு ஸ்வைப் ஆனது...

குறுகியகால மைக்ரோ ஃபைனான்ஸில் - ஆன்லைன் app / தனிநபரிடம் வட்டியில்லா கடன் / வட்டிக்கு கடன்... 

எத்தனை பேர் எவ்வளவுக்கு வாங்கினார்கள் என்ற விவரமும் கிடைக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் வழியாக பர்சேஸ் செய்யப்பட்ட தொகை(கள்) விவரமும் கண்ணில் படவில்லை.

இவற்றில் -

தமிழகத்தில் வாழும் மற்ற மாநிலத்தவர்களின் பங்கையும் அறுதியிட முடியவில்லை.

முக்கியமான விஷயம் -

தீபாவளியை ஒட்டி பங்கு வணிகத்தில் எவ்வளவு முதலீடு தமிழ்நாட்டில் இருந்து செய்யப்பட்டது என்ற விவரத்தையும் எடுக்க முடியவில்லை.

இங்கே பட்டியலிடப்பட்டவை தமிழ்நாட்டின் கணக்கு மட்டுமே.

இதிலும் மாவட்ட வாரியாக புள்ளிவிபரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

இதில் தேசிய முதலாளிகள் / பன்னாட்டு முதலாளிகள் / பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் தரகர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சதவிகித லாபம் கிடைத்திருக்கும்? 

நோ ஐடியா.

ஒரு பண்டிகை -

அதனைச்சுற்றி நடக்கும் உற்பத்தி / விற்பனை / உறவுகளை துல்லியமாக கணக்கிட்டால், ஆராய்ந்தால் ஓரளவு இன்றைய தமிழ்நாட்டின் சமுதாயப் பொருளாதார படிவத்தை வரையறுக்க இயலும். 

கவனத்தில் கொள்ள வேண்டியது -

இதுவரை சொல்லப்பட்டவை / செலவு செய்யப்பட்ட தொகை - அனைத்தும் நுகர்வு கலாசாரத்துக்குள் அடங்கும் என்பதுதான்.

இதில் தீபாவளிக்கு செலவு செய்ய முடியாத நிலையில் இருந்த தமிழ்நாட்டு மக்களின் சதவிகிதம் எவ்வளவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த 2025ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூபாய் ஒரு லட்சம் கோடி தீபாவளி என்றப் புள்ளியைச் சுற்றி அதிகப்பட்சம் 10 நாட்களில் நம் தமிழ்நாட்டில் டர்ன் ஓவர் ஆகியிருக்கிறது.

இதை எப்படி புரிந்து கொள்வது? 

தமிழகத்துக்கான இன்றைய அரசியல் திசைவழியை எப்படி வரையறுப்பது?

- கே.என். சிவராமன்

https://www.facebook.com/share/1TCJEZjXo6/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு