அதானி எமது ஆட்சியின் கூட்டாளி - கேரள சிபிஎம்

Sidhambaram Voc

அதானி எமது ஆட்சியின் கூட்டாளி - கேரள சிபிஎம்

கேரள CPM அரசின்  அமைச்சர் வாசவன்,  விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவில்...

 " அதானி எமது ஆட்சியின் கூட்டாளி  ( Partner )  " 

என திருவாய் மலர்ந்துள்ளார். 

அதற்கு மோடி " ஒரு இடதுசாரி அரசு அதானியை கூட்டாளி என்று சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளீர்களா ? இது CPM இன் U Turn  " என புகழ்ந்து  பாராட்டியுள்ளார். 

திமுக ஆட்சியில் ..காட்டுப்பள்ளி துறைமுகம் உள்ளிட்டு  அதானி பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து வருகிறார். 

அதானியின் பங்காளியான மு.க.ஸ்டாலின் ,  அதானியின் கேரளத்து கூட்டாளியான  CPM இன் மேடைகளை அலங்கரிக்கிறார். 

அதானியின் இலங்கை கூட்டாளியான ஜெ.வி.பி ஆட்சியை இடதுசாரி ஆட்சி என புகழ்கிறது CPM. 

முன்னதாக மோடி ஜெ.வி.பி ஆட்சியுடன், அமெரிக்க,  அதானி அம்பானி ஆதிக்கத்துக்கான ஒப்பந்தங்களை போட்டுவிட்டு வந்தார். அதன் பிறகு CPM அங்கு சென்று அந்த  ஆட்சியைப் பாராட்டுகிறது. 

திராவிட மாடல், கேரள மாடல், இலங்கையின் இடது சாரி மாடல், குஜராத் மாடல் என எல்லா மாடல்களுக்கும் அம்பானி-  அதானியின் மூலதனமும்,  அமெரிக்க மூலதனமும்  தலைமை தாங்குகிறது. 

இலங்கையில் நடந்த  மே தின கூட்டத்தில் CPM JVP இரு கட்சிகளும் இன்குலாம் ஜிந்தாபாத் என முழங்குகின்றன. 

இங்கு மு.க.ஸ்டாலினோ.. மே நாளில்...தனது தந்தையைப் போலவே  தானும் ஒரு கம்யூனிஸ்ட் என்கிறார். திராவிடர் என்றால்  தொழிலாளர்கள், திராவிட இயக்கம் தொழிலாளர் இயக்கம் என்கிறார் வெட்கமே இல்லாமல். 

திராவிடமே கம்யூனிசம் என்றாகிவிட்ட பிறகு...கேரளாவின் இடது மாடல் முதலாளித்துவத்தை ஏற்பதில் சிக்கல் இல்லைதானே !;?? 

 சாரத்தில் .." 21ம் நூற்றாண்டு சோசலிசம் என்பது  அம்பானி-அதானி- அமெரிக்க மூலதனத்தின் காலை நக்குவதே "  என்கிறார்கள்  இவர்கள். 

பாசிசத்தின் வர்க்க அடிப்படைகளை பேசாமல்.... தீவிர பாசிசம், பார்ப்பனிய பாசிசம், நவ பாசிசம் என  இடதுசாரிகள் உருண்டு புரள்வதன் பின்னணி இதுதானோ !!??  

இன்குலாப்  அதானி ஜிந்தாபாத்! இன்குலாப் அம்பானி ஜிந்தாபாத் !!  இன்குலாப் அமெரிக்கா ஜிந்தாபாத் ! இன்குலாப் நவ பாசிசம் ஜிந்தாபாத் ! 

முதலாளித்துவ சோசலிசம் வாழ்க ! பாட்டாளி வர்க்க சோசலிசம் ஒழிக !! 

- Sidhambaram Voc

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0zrbjmvirjgxX2x7tZShQqehG7kZgHZJvdtCAf11oE1d2eMLky89mR7jy8Fviaktvl&id=100094068112061&sfnsn=wiwspwa&mibextid=RUbZ1f&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு