பா.ஜ.க செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடித்தளம் போட்டதே காங்கிரஸ்தான்
SP Muthu

காங்கிரசும் பா.ஜ.கவும் ஒன்றா என்றால் இப்போது பா.ஜ.க செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடித்தளம் போட்டதே காங்கிரஸ் தான் அந்த விதத்தில் கிட்டத்தட்ட ஒன்று தான்.
மாநில அதிகாரபட்டியலில் இருந்து கல்வி பொதுபட்டியலுக்கு போனதன் விளைவுகள் தான் புதிய கல்வி கொள்கையும் நீட் தேர்வுகளும்.
தடா பொடா போன்ற சட்டங்களின் தொடர்ச்சி தான் UAPA
காங்கிரஸ் இந்திய உளவு அமைப்பான ரா வை எப்படி பயன்படுத்தியதோ? அதே போல்தான் NIA மற்றும் வருமான வரித்துறையை பா.ஜ.க பயன்படுத்துகிறது.
ஆளுநர்களின் அத்துமீறல்கள் ஆட்சி கவிழ்ப்புகள் கவர்னர் ஆட்சிகள் MLA MPக்களை விலைக்கு வாங்குதல் போன்ற செயல்களை பா.ஜ.கவிற்கு முன் திறம்பட செய்தவர்கள் காங்கிரசினர்தான்.
இந்திய ராணுவத்தை காஷ்மீரில் குவித்து அந்த மாநில மக்களின் மீது அத்துமீறலை தொடங்கியதும் காங்கிரஸ்தான்.
தண்டாகாருண்யா காடுகளை கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கனிம வளக்கொள்ளைக்காக திறந்து விட்டதும் அதை எதிர்த்த பழங்குடி மக்கள் மீது எல்லை பாதுகாப்பு படையை கொண்டு ஒடுக்கியதும் இதே காங்கிரஸ்தான்
மாவோயிஸ்ட்களை வேட்டையாடுகிறேன் என்ற பெயரில் அப்பாவி பழங்குடி மக்களை சுட்டு கொன்றது இதே காங்கிரஸ் கட்சிதான்.
இப்படி பெருமுதலாளிகளின் சேவையில் பா.ஜ.கவின் முதாதையர்களாக இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதான்.
இப்படி ஒரு ரத்த வெறி கொண்ட ஓநாயான காங்கிரசை பா.ஜ.கவுக்கு மாற்றாக நான் ஒரு போதும் அங்கிகரிக்க மாட்டேன்.
இன்று வலுவிழந்து வீழ்ந்து கிடப்பதால் காங்கிரஸ் ஏதோ தங்களை
ஜனநாயகவாதிகள் போல காட்டிக்கொள்கிறார்கள் நாளையே அதிகார கட்டிலில் அமர்ந்து விட்டால் பா.ஜ.க செய்யும் அத்துணை செயல்களையும் இவர்களும் செய்யத்தான் போகிறார்கள்.அப்படி இருக்க ஐந்து வருடத்திற்கு ஒருமுறை காங்கிரசுக்கு ஓட்டு கேட்பது கம்யூனிஸ்ட்டுகளுடைய வேலை கிடையாது நமது வேலை மக்களை வர்க்க ரீதியாக ஒன்று திரட்டி புரட்சி செய்வது அதற்கான வேலைகளில் தான் நாம் ஈடுபட வேண்டும் அதை செய்வோம்.
ஒரு வேளை நாளையே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து இதே வேலைகளை செய்தால் கூட பாசிச பூச்சாண்டி காட்டி எப்படி திராவிட ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கிறார்களோ அதே போல் காங்கிரசிற்கும் முட்டுக் கொடுக்க சொல்வார்கள் இந்த இழி செயலை செய்யும் எவரும் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது.
- SP Muthu
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு