திருப்பூரின் பின்னலாடை துறையை அழிக்கும் திமுக அரசு!
தருமர்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பற்றி அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.!!
திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் உரிமையாளர்களும் ஆஹா...இன்னும் 3-4 மாதத்தில் திருப்பூர் பனியன் தொழில் ரெக்கை கட்டி பறக்கப் போகுது என ஏதேதோ கனவில் அறிக்கை விடுகிறார்கள்(?!)
MSME தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் ஒதுக்கீடு ₹1557/- கோடி தானாம்...!!
ஏனுங்க நிதி அமைச்சரே திருப்பூர்,கோவை *மாநகராட்சிகளின்* பட்ஜெட் தொகையே சுமார் ₹4500/- கோடிங்கோ(?!) அதில் உண்மையில் வரி செலுத்தும் துறையே சிறுகுறு தொழில்துறையினர் தான்.மேலும் கடந்த ஆறு மாதங்களாக மின்கட்டணத்தை சீர் செய்யுங்கள்,
சிறு நிறுவனங்களுக்கு கடன் கொடுங்கள்,
கடன் தவணை கட்ட கால அவகாசம் கொடுங்கள்,
வெளி நாடுகளிடம் வரியில்லா ஒப்பந்தம் போடுங்கள்,
ஏற்றுமதி மானியத்தை அதிகப்படுத்துங்கள்,
சீனா-பங்களாதேஷ் நாடுகளிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதியுங்கள் என தொழிற்துறையினர் கரடியாக கத்திப் பார்த்தும் மாமி நிர்மலாவும் கண்டுகொள்ளவில்லை,தற்போது உடன்பிறப்பு தங்கம் தென்னரசும் சிறுகுறு, நடுத்தர தொழில்களை கண்டு கொள்ளாமல் கார்ப்பரேட் சேவையே எங்களின் தலையாய பணி என பட்ஜெட் மூலம் தெரியப்படுத்தி விட்டனர்.
திருப்பூர் பின்னலாடை நகர் என்ற பெருமையை இனி இழக்கும்(!?)
அடுத்து பருத்தி தொடர்பான நூற்பாலை, பின்னலாடை, சாயப்பட்டறைகள் மூடப்படும். அதற்குப் பதிலாக டாஸ்மாக் பார்கள் பெருகுவதைப்போல வடமாநில,சீனா, பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலீயஸ்டர் துணிக்கடைகள் ( குடோன்கள்) பெருகிக் கொண்டேயுள்ளது.
வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆர்டர்களை குறைவான ரேட்டுக்கு தங்களுக்கு ஆர்டர் கிடைத்தால் போதும் என்ற சுயநலத்தோடு அடிமாட்டு விலைக்கு ஆர்டர்களைப் பெற்று தொழில் செய்யும் பெருநிறுவனங்களால் (நூல் மில் முதல் பனியன் ஆடை தயாரிக்கத் தேவையான இயந்திரங்கள் வைத்துள்ளவர்கள்) தொழிலாளிகளின் ரத்தத்தை உறுஞ்சுவதோடு சிறுகுறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் பாடை கட்டுகிறார்கள்.
அழுகிப் போன ஏதோ ஒன்று என ஆசான் சொல்வதை *முதலாளித்துவத்தின் லாப வெறி* இருக்கிறது என நாம் புரிந்து கொள்ளலாம்.
- தருமர்
(முகநூலில்)
https://www.facebook.com/share/p/wweJCikitUMuxf7U/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு