உயிருக்கே உத்தரவாதமில்லாத அபாய சூழலில் கிக் (Gig) தொழிலாளர்கள்

Raghul Baskar

உயிருக்கே உத்தரவாதமில்லாத அபாய சூழலில் கிக் (Gig) தொழிலாளர்கள்

ரிஸ்வான் என்கிற 23 வயது இளைஞர் உணவு டெலிவரி செய்ய சென்ற போது உணவை ஆர்டர் செய்தவரின் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அவரை தாக்க முயற்சிக்கிறது, அதில் அவர் எதிர்பாராத விதமாக மூன்றாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது.பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்.

வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களை பற்றிய விவாதங்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மற்றொரு‌‌ புறம் Swiggy நிறுவனம்‌ இந்த நபருக்கு humanity ground இல் எதாவது செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஏன் Swiggy நிறுவனம் humanity ground இல் அந்த delivery executive க்கு‌ எதாவது இழப்பீடு‌ வழங்க வேண்டும். Swiggy நிறுவனத்திற்கு அந்த obligation இருக்கிறதா‌ இல்லையா?

கடந்த 11 ஆம் தேதி இந்த விபத்து சம்பவம் நடந்திருக்கிறது, நேற்று‌ விபத்திற்குள்ளான நபர் இறந்திருக்கிறார். இந்த நொடிவரை Swiggy நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கங்கள் இந்த இறப்பை பற்றி எதையுமே பதிவு செய்யவில்லை. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் அந்த 23‌ வயது இளைஞரின் உயிரை காவு‌ வாங்கியது வாடிக்கையாளர்களின் வீட்டு வாசல் வரை சென்று உணவை‌ தரவேண்டும் என்கிற doorstep delivery policy தான். அதை enforce செய்தது‌ Swiggy நிறுவனம்.தன்னுடைய delivery partner என்ன‌ உடை அணிய‌ வேண்டும், என்ன தொப்பி‌ அணிய வேண்டும், எவ்வளவு நேரத்தில் உணவை பிக் செய்ய வேண்டும், எவ்வளவு நேரத்தில்‌ உணவை டெலிவரி செய்ய‌ வேண்டும், கஸ்டமரிடம்‌ எப்படி பேச‌ வேண்டும் என அத்தனை அசைவுகளையும் Swiggy நிறுவனம் ஒரு கங்காணியை போல கட்டுப்படுத்துகிறது. ஆனால் விபத்து ஏற்படும் பட்சத்தில் அவர் ஒரு delivery executive சுயவிருப்பத்தின் பேரில் இந்த தொழிலில் ஈடுபடுபவர் என கூறி ஒரு employer க்கு‌ இருக்கும்‌ அத்தனை பொறுப்புகளிலிருந்தும் தப்பித்துக்கொள்கிறது.

வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு முழுக்க முழுக்க‌ employer தான் பொறுப்பு என employees compensation act சொல்கிறது.இந்த சட்டத்தின் அடிப்படையில் ரிஸ்வான் குடும்பத்தினருக்கு Swiggy, 25லட்சம் வரை இழப்பீடு கொடுக்க‌ வேண்டும்.

ஆனால் Swiggy இதுவரை வாய்திறக்கவில்லை. எதாவது கேள்விகள் எழும் பட்சத்தில் ரிஸ்வான் ஒரு gig worker, Swiggy யின்‌ ஊழியர் கிடையாது என்று சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று அந்த நிறுவனத்திற்கு‌ நன்றாக தெரியும்.

Raghul Baskar 

(முகநூலில்)

https://www.facebook.com/100008051373984/posts/pfbid0Y3db8fhkbDyPK4g9cKbsC3YfdZ34ph14fHvV4HtHPgx9prkqCCgrKqkXuwTJeWF6l/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு