அகவிலைப்படி உயர்வு: போராடி பெற்ற உரிமைகளை மறுக்கும் திமுக அரசு

சேரன் வாஞ்சிநாதன்

அகவிலைப்படி உயர்வு: போராடி பெற்ற உரிமைகளை மறுக்கும் திமுக அரசு

பத்திரிகை செய்தி

______________________________________

*தீபாவளி கருப்பு பண்டிகையாக மாறும் அவலம்.., தமிழக அரசே பண்டிகை முன்பணம், அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடன் வழங்க உரிய நடவடிக்கை எடுத்திடுக.*

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

*தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து வெளியிடும் பத்திரிக்கை செய்தி*

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

சாமி வரம் கொடுத்தும்...         பூசாரி வரம் கொடுக்காத நிலை...

கருவூல கணக்குத் துறை ஆணையரின் எதேச்சதிகார போக்கால்அ கவிலைப்படியினை நான்கு சதவீதம், 01.07.2023 முதல் உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தும், நிலுவைத் தொகையை, தீபாவளி பண்டிகைக்கு முன்பு பெற முடியாத அவல நிலை நிலவுகிறது. 

அதே போல பண்டிகை கால முன்பணமான கடனையும், தீபாவளிக்கு முன்பு பெற முடியாத அவல நிலையில் தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், உள்ளனர்.

IFHRMS என்ற அரைவேக்காட்டு சாப்ட்வேரை கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, அதை செயல்படுத்த இயலாத நிலையில் கருவூலத்துறை சிக்கிக் கொண்டுள்ளபடியால் அனைத்து துறை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளிக்கு இன்னமும் நான்கு வேளை நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையையும், பண்டிகை முன்பண கடனையும் பெற்றுத்தர, IFHRMS பிரச்சனைகாரணமாக சம்பளம் வழங்கும் அலுவலர்கள் போராடிக் கொண்டுள்ளனர்.

கருவூலத்துறை ஆணையரகம் மாவட்டத்திற்கு, மாவட்டம்.. IFHRMS மென்பொருளை இயக்க நேர ஒதுக்கீடு செய்துள்ளதே, இந்த மென்பொருள் மூலம் பட்டியல் தயாரித்து பணப்பலன் பெறுவதில் உள்ள அவலத்தை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

சூழல் மேற்கண்டவாறு இருக்க, ஆய்வு கூட்டம் என்ற பெயரில் பட்டியல்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்கவில்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கருவூல கணக்குத்துறை ஆணையாளரும், பிற உயர் அலுவலர்களும், கருவூலத்துறை ஊதியர்களை மிரட்டி வருகின்றனர்.

முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டியது

செயல்படாத சாப்ட்வேரை விலை கொடுத்து வாங்கிக் கொடுத்த அரசின் மீதும், அதற்குத் துணை போன நிதித் துறை மீதும், மற்றும் கரூவூல கணக்குத்துறை ஆணையாளர் மீதும் தானே ஒழிய ஊழியர்கள் மீதல்ல ...

எளியோனை வலியோன் மிரட்டும் இத்தகைய போக்கு ஏற்புடையதல்ல. கருவூல கணக்குத்துறை ஆணையாளரின் இத்தகைய போக்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

போராடிப் பெற்ற நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை பெற முடியாமல் தவிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உடனடியாக  IFHRMS மென்பொருளில் மட்டுமே பணப்பலன அனுமதிக்கும் நடைமுறையை மாற்றி கடந்த கால நடைமுறைப்படி, மேனுவலாக பணப் பலன் சார்ந்த பட்டியல்களை உடன் அனுமதிக்க வேண்டும்... அதற்கான உத்தரவை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.

இல்லையெனில்  இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை கருப்பு தீபாவளியாக மாறுவது தவிர்க்க இயலாததாகும்.

------------------------------------------------------

சு.தமிழ்ச்செல்வி

*மாநிலத் தலைவர்*

ஜெ.லட்சுமி நாராயணன்

*பொது செயலாளர்

---------------------

சேரன் வாஞ்சிநாதன் 

(முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு