திருப்பரங்குன்ற பொய் சித்திரமும் இந்துத்துவ அமைப்புகளின் சதியும்

துரை. சண்முகம்

திருப்பரங்குன்ற பொய் சித்திரமும்  இந்துத்துவ அமைப்புகளின் சதியும்

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தை வைத்துக்கொண்டு இந்துத்துவ அனைத்து கிளை அமைப்புகளும் அரசியல் பிரச்சாரத்தை வெகுவாக செய்கின்றன.

சமூக ஊடகங்களில் இந்து முன்னணி போன்றவை செய்கிற பிரச்சாரங்களை பார்த்தால் ஏதோ கார்த்திகைக்கு திருப்பரங்குன்றத்தில் தீபமே ஏற்றக்கூடாது என தடுப்பது போல ஒரு பொய் சித்திரத்தை கட்டவிழ்த்து விடுகிறது. 

உண்மையில் 

வழக்கம்போல வழக்கமான இடத்தில் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற எந்தத் தடையும் இல்லை. அளவைக்கல்லை பிடித்துக் கொண்டு இந்து வானரங்கள் ஆட்டுவதுதான் பிரச்சனை.

இந்த விவகாரத்தில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்படும் எனும் நிலைப்பாட்டில் இருக்கும் அரசு வழக்கு மன்றம் தவிர மக்கள் மன்றத்திலும் அரசு நிறுவனங்களின் வழி அதிகாரப்பூர்வமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்பதை அறிவிக்க வேண்டும். 

இந்துத்துவ சக்திகள் வெளியில் பரப்பும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் எப்போதும் போல் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது என்பதையும் செய்தியாக அறிவிக்க வேண்டாமா? 

சாதாரண கருத்து பிரச்சாரம் ஒருவர் செய்தாலே இதை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் ஊடகங்களில் அறிவிக்கும் போது திட்டமிட்டு இந்துத்துவ பயங்கரவாதிகளால் ஏதோ தீபமே ஏற்றப்படாமல் தடுக்கப்படுகிறது என்பது போலவும் இதற்கு பள்ளிவாசல் தரப்பு காரணமாக இருக்கிறது என இஸ்லாமிய வெறுப்பு அரசியலை பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் கட்டாயம் மாவட்ட நிர்வாகம் அரசு தரப்பு இந்து வழிபாட்டுக்கு எந்த தடையும் இல்லாத வழக்கமான சூழல் நிலவுவதையும் இதை சீர்குலைக்கும் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்துவது சட்டப்படியான கடமையும் கூட. 

சமூக ஊடகங்களில் வலுவாக எதிர் தரப்பை கேலி கிண்டல் செய்யும் தவெக கட்சி இந்த விவகாரத்தில் ஊனமுற்ற நிலையில் இருப்பது அரசியல் செயல் இன்மையின் வெளிப்பாடும் கூட. 

போலி புத்தகங்கள் நூலக விவகாரங்களை வைத்து பெருநம் சமூக ஊடகப் பிரச்சாரம் செய்யும் தவெக அரசியல் அணி இந்த போலி கார்த்திகை தீப பேர்வழிகளை அம்பலப்படுத்தாமல் அடங்கிக் கிடப்பது அரசியல் வெட்கக்கேடு.

இந்து அறநிலையத்துறை சார்பாக இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டையும் திருப்பரங்குன்றத்தில் வழக்கமான முறையில் கார்த்திகை தீபம் நிகழ்ச்சி எதுவும் தடை செய்யப்படவில்லை என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 

ஏனென்றால் வெளியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் பிரச்சாரம் இந்து வழிபாட்டுக்கு நெருக்கடி வந்துவிட்டது போல திரிக்கப்படுகிறது. இதன் எதிரியாக இஸ்லாமிய மக்களின் மீது குறிவைக்கும் அரசியலும் துளிர்  விடுகிறது.

முளையிலேயே இது கிள்ளி எறியப்பட வேண்டும். 

தீபத்தை வழிபடுவது மத நம்பிக்கையாக இருக்கலாம் 

ஆனால்

கொள்ளிக்கட்டையை அனுமதிக்க கூடாது!

- துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1180023668037761/?rdid=DUlLwR9CunewSab2

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு