கவிதை: ஜந்தர் மந்தர்- நாடே பற்றி எரியுது நாம் என்ன செய்கிறோம்
அந்தாதி - செந்தளம்
நாடே பற்றி எரிகிறது
நாளும் செய்தி வருகிறது
நாம் என்ன செய்கிறோம்
நமத்து போன பட்டாசாய்
வீட்டில் முடங்கி கிடக்கிறோம்
அடிப்படை உரிமை எனும் வாக்குரிமைக்கு
வாய்க்கரிசி போட்ட பின்னே
வாழுமா இன்னும் ஜனநாயகம்
அரைகுறை விடுதலை தந்த
அரசியல் சாசனத்தை
ஆளும் வர்க்கத்தின் அக்குளுக்குள்
அடகு வைத்துவிட்டு
அரிதாரங்களுக்கு முன்னே
அலையலையாய் நம் கூட்டம்
அடுக்குமா ??
நாட்டை ஆள ஒருகும்பல் நாட்டையே
திருத்துறான் வாழ்வுரிமை வாக்குரிமை
பறித்து நடுரோட்டில் நிறுத்துறான்
அதிகாரப் பசி தீர நம்மை சாதி மத பங்கு
போட்டு பலியாடாக்குறான்
எஸ் .ஐ .ஆர், சி. சி. ஏ
என்னென்னமோ சட்டம் போட்டு
சதிராட்டம் ஆடுறான்
அவன் சங்கறுக்க சிங்கக் கூட்டம்
தில்லியில திரளுறான்
அதிகார வர்க்கத்தின்
ஆணவத்தைஅடக்கிடவே
ஆசாத் பெயரிலே
அலையலையாய் அணிவகுப்பு
உழைக்கும் வர்க்கமெல்லாம்
ஒன்று கூடி நிக்குதங்கே
ஊருக்குள்ளே சாதிப் பெருமை பேசுவதால்
உனக்கென்ன நன்மை நடக்குதிங்கே
உடனே நீயும் புறப்படு
வீறு கொண்டு எழுந்திடு
உலகு வியக்க உன் பங்கை
போராட்டத்தில் செய்திடு
நாடே பற்றி எரியுது
நாம் என்ன செய்கிறோம்
அந்தாதி
செந்தளம்