காவியின் காலடியில் கலவர காடாய் மணிப்பூர் - நமது துயில் கலைவதற்கு கூட பெண்களின் துகில் களைய வேண்டுமா
சமரன் - அட்டைப்பட கவிதைகள்

காவியின் காலடியில்
கலவர காடாய் மணிப்பூர்
கண்கள் சிவந்து
இதயம் வெடிக்கிறது!
குக்கிகளின் குரல்வளையை
குதறி குருதி குடிக்கும்
பாசிச பாஜக பேயின்
பயங்கர கோமுகம்!
பாலூட்டும் பெண்மனியின்
தலை பிளந்து உடல் சரிய
பால் நின்று இரத்தம் வடியும் தாயின்
உடல் தடவி பதறி அழும் பிஞ்சின் முகம்!
கும்பல் வன்புணர்ந்து
குக்கி பெண்களின் ஆடை அவிழ்த்து
அம்மன ஊர்வல்ம் நடத்தும்
அக்கிரமத்தின் அதி உச்சம்!
கடல் பிரித்த சொற்ப தொலைவில்
இதயம் பிளந்த ஈழத்து கொடுமைகள்
வடகிழக்கில் நடக்கிறதே - அய்யகோ
மணிப்பூர் மயானகாடாய் எரிகிறதே...
அங்கே! சிங்கள புத்த பித்தர்கள்
இங்கே! காவி ராம பக்தர்கள்
குஜராத்தின் கொடூர முகம்
இதோ அப்படியே குக்கிகள் மீதும்...
கார்ப்பரேட்டு காமுகன்கள்
காட்டு வளத்தை கொள்ளையிட
குடிசைகளை கொளுத்திவிட்டு
குக்கிகளை விரட்டுவதோ?
வடகிழக்கின் வளங்கள் சுரண்ட - அன்று
கிழக்கு நோக்கிய கதரின் கொள்கை - இன்று
காவி கும்பலின் கிழக்கு நோக்கிய கொடுஞ்செயலில்
மணிப்பூரின் தேகம் பற்றி எரிகிறது!
வனப்பாதுகாப்பு சட்டமாம்..!
இனி வனமும் வளமும்
அந்நிய ஏகபோக கும்பலுக்கு சொந்தம்
அம்பானி அதானிகளுக்கு சொந்தம்
இனி வனவாசிகளுக்கு அதில் ஏது பந்தம்?
இதோ கிழக்கில் செயல்படுகிறது
மணிப்பூரிகளின் மண்டை ஓடுகளை
மாலையாய் அணிந்து
இந்துத்துவ அகோரி கும்பல்!
நாட்டைக் கொல்லும் பாசிசத்தின்
பயங்கரத்தை பாடைகட்ட
வடகிழக்கின் உரிமை குரலுக்கு
தெற்கிலிருந்து கரங்கள் கோர்ப்போம்!
=========================================================================================
நமது துயில் கலைவதற்கு கூட
பெண்களின் துகில் களைய வேண்டுமா
நமது முகம் சிவப்பதற்கு கூட
அவர்களின் குடில் எரிய வேண்டுமா
கூட்டுப் பாலியல் வன்முறை
தன் இனத்தின் மீதே நிகழ்த்த
அந்த நாய்கள் கூட அஞ்சும்
காவி கும்பல் அதை மிஞ்சும்
பரந்த நிலத்தின் பழங்குடிகளை
வந்தேறிகள் என வம்பளப்பர்
வளத்தை கொள்ளை கொள்ள
வளர்ச்சி என கதையளப்பர்
நம்மை அடிமைக் கொள்ளும்
கிழக்கில் செயல்படும் திட்டம்
நம் வளத்தை அள்ளிச் செல்லும்
குவாட் கூட்டணி திட்டம்
நமது இயற்கை வளத்தை
அந்நியன் காலில் வைத்து
நக்கிப் பிழைக்கத் தெரியும் - அந்த
அதிகாரம் எப்போது ஒழியும்
இன்று குக்கி நாளை மெய்தி
நேற்று தகர்த்த காஷ்மீரம் போல்
அவர்கள் அமிழ்தை விழுங்க
நமக்கோ ஆலகால விஷம்
மணிப்பூர் எரிவைதைக் கண்டு
மதவெறியில் பூரிப்பு கொண்டு
மணிப்பூரை முழுதாய் விழுங்க
மரண ஓலத்தில் களி கொண்டார்கள்
நெஞ்சு பொறுக்குதில்லையே
பாசிச பகைக் கூட்டம் கண்டு
இனி அஞ்சுவதற்கு ஏதுமில்லை
இழப்பதற்கு ஆடைகளும் இல்லை
மனித இனத்தில் சேரா
இந்த பாசிச் பகைக் கூட்டம்
இனியும் விட்டு வைத்தால்
இந் நாடு கெட்டு அழியும்
குக்கி பழங்குடி காட்டு மனிதர்களை
எதையும் விடாமல் வேட்டையாடும்
அந்நிய அடிமை காட்டுமிராண்டிகளை
விட்டுவிடாமல் வேட்டையாடுவோம்
- சமரன்
(ஜூலை -ஆகஸ்ட் இதழில்)