அசுரன் சினிமாவாவில் காட்டப்படுவதை விட கொடூரமான கொலை

எவிடென்ஸ் கதிர்

அசுரன் சினிமாவாவில் காட்டப்படுவதை விட கொடூரமான கொலை

அழகேந்திரனின் தலை தனியாக துண்டிக்கப்பட்டு முண்டமாக கிடந்த அந்த உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டு இருந்தன.

இது போன்ற ஒரு கொடூரமான ஆணவ கொலையை என் 30 வருட கள பணியில் பார்த்தது இல்லை.

பட்டியல் சாதிக்குள் நடந்த ஆணவ கொலை என்பதினால் இது ஆணவ கொலை இல்லை என்கிற வாதம் கொடுமையானது. இந்த கொடூர படுகொலை  இந்திய அளவில் பேசி இருக்க வேண்டும். ஆனால் அனைவரும் கள்ள மவுனம் காப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல. அழகேந்திரன் என்கிற அருந்ததியர் இளைஞர் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். எப்படி எல்லாம் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பார்? அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகன் தலை தனியாக முடம் தனியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பார். அதைவிட கொடுமையானது இந்த படுகொலை.

தமிழ் புலிகள் கட்சி இல்லை என்றால் இந்த சம்பவம் வெளியே தெரிந்து இருக்காது. அவர்கள்தான் மக்களை திரட்டி போராட்டத்தை சனநாயக ரீதியாவும் சட்ட ரீதியாகவும் கொண்டு செல்லுகின்றனர். தமிழ் புலிகள் கட்சியோடு இணைந்து அழகேந்திரன் நீதிக்காக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.விரிவான அறிக்கை விரைவில் எழுதுகிறேன்.

https://www.facebook.com/story.php?story_fbid=7540738942722432&id=100003592026417&mibextid=oFDknk&rdid=a2UaeJsT2zWQCs8J

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு