திருவண்ணாமலையில் பழங்குடியைச் சார்ந்தவர் படுகொலை

இன்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை குற்றப்பரம்பரையினராக அணுகும் சமூகம்

திருவண்ணாமலையில் பழங்குடியைச் சார்ந்தவர் படுகொலை

#இருளர்_இன_பழனி அடித்தே_படுகொலை 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் சாத்தனூர் அணை அருகில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பழனி கடந்த 15.9.22 வீட்டுக்கு  பக்கமா செல்லும் ஆத்துக்கு வழக்கமா சென்றுள்ளார். அப்போது சுமார்  காலை 11 மணிக்கு  அங்கு வந்த டேம் மீன் குத்தகைதாரர் கார்த்தி அவருடைய கூலியாள் திவாகரை கூப்பிட்டு அந்த "இருளன் மீன் திருடத் தான் வந்திருக்கான் இவங்களுக்கு இதே வேலையா போச்சி அவன அடிச்சு தூக்கி போடுங்கடா" என சொல்லி உள்ளார். உடனே திவாகர் ஓடி  பழனியை பிடித்துக் கொண்டு இடது அல்லை வலது அல்லையில ஓங்கி குத்தியுள்ளார் அதனால் கீழே விழுந்துள்ளார். 

உடனே கீழே விழுந்தவரை  தூக்கி மீன் வண்டியில் போட்டுள்ளனர் அப்போது அவர்களுடன்  வந்திருந்த சுப்புராயன் "டேய் செத்துடப்போறன்டா கொலை கேசு  நம்ம மேல வந்துடும்னு" சொல்லி அங்கேயே கீழே தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு உதவி மேலாளர் சித்ரா உள்பட பத்துக்கு மேற்பட்ட பெயர் தெரியாத நபர்கள் இருந்துள்ளனர்.  பிறகு சிறிது மயக்கம் தெளிந்து  சுமார் மதியம் 12.00 மணிக்கு  வீட்டுக்கு வந்துள்ளார் அவரது மகன் தேவேந்திரன்  பழனியின் அப்பா ராமனும் ஏன்பா என்னாச்சு என கேட்டுள்ளனர். பிறகு அவருடைய சட்டையை கழட்டி உடம்ப பார்த்தபோது இடது அல்லை கீழே பெரிய அளவுக்கு வீங்கியும். வலது அல்லை கீழே கன்னிப்போன காயத் தழும்பு இருந்துள்ளது.  மருத்துவமனைக்கு வேணாம்பா போலீசு கேசுனு போன உங்கள உயிரோடு விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.

எனவே மருத்துவமனைக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே நாட்டு வைத்தியம் பார்த்துள்ளனர், புகாரும் கொடுக்கவில்லை இந்நிலையில் 18.9.2022 விடியற்காலை 3 மணிக்கு  எப்படி இருக்கார்னு அவரது மகன் போய் பார்த்துள்ளார் அப்போது மரணமடைந்துள்ளார் மூக்குல காதல, வாயில ரத்தம் வந்துள்ளது. மேலும் மேலே குறிப்பிட்டுள்ள  நபர்களால் தொடர்ந்து பல முறை பழங்குடி மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். சமாதானம் பேசி போலீஸ் கேசு வாபஸ் வாங்க வைத்துள்ளனர். 

கொலையுண்ட பழனியின் தந்தை ராமனுக்கு கடப்பன் குட்டையில் 7.5 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்நிலம் ஆதிக்க சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பஞ்சமி  நிலத்தை மீட்டுக் கொடுப்பதற்கான தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். வருவாய் துறை காலம் கடத்தி வருகிறது. இந் நிலையில் படுகொலை நடந்துள்ளது. எனவே அய்யா அவர்கள் இருளர் பழனியை அடித்தே கொலை செய்த நபர்கள் மீது உரிய கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருவண்ணாமலை மாவட்ட குழு வலியுறுத்துகிறது... 

Selvan Cpmselvan 

மாநில துணைப் பொதுச்செயலாளர்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

- வெற்றி சங்கமித்ரா

(முகநூல் பக்கத்திலிருந்து)

பதிவரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

வெற்றி சங்கமித்ரா முகநூல் பக்கம்

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு