மனுஸ்மிருதி: இந்துராஷ்டிரத்தின் அரசமைப்புச் சட்டம்
சாவர்க்கர்
சாவர்க்கர் மனுஸ்மிருதி(Manusmriti) அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று விரும்பினார்.
இந்துத்துவாவின் தத்துவவாதியாகவும் அதன் வழிகாட்டியாகவும் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நபருமான அவர் (சாவர்க்கர்) எவ்விதமான குழப்பத்திற்கும் இடமின்றிக் கூறிவந்ததாவது:
மனுஸ்மிருதி(Manusmriti) நம் இந்துதேசத்திற்காக வேதங்களுக்குப் பின்னர் மிகவும் வழிபடத்தக்கத் திருமறையாகும். இது புராதனக் காலத்திலிருந்தே நம்முடைய கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் சிந்தனை மற்றும் நடைமுறையின் அடிப்படையாக மாறியிருக்கிறது. இந்தப் புத்தகம் பல நூற்றாண்டுகளாக நம் தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்விக மார்க்கத்திற்கான விதிகளை முறைப்படுத்தி இருக்கிறது. இன்றைக்கும்கூட மனுஸ்மிருதியின் அடிப்படை விதிகள் கோடிக்கணக்கான இந்துக்களால் தங்கள் வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பின்பற்றப்படுகிறது. இன்றையதினம் மனுஸ்மிருதி இந்துச் சட்டமாகும். அது அடிப்படையாக இருக்கிறது. 5.
இவ்வாறு மனுவின் சட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சாவர்க்கரின் கனவுகள் நிறைவேறுமானால் அது நிச்சயமாக இந்தியாவில் தலித்துகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான பாதைக்கு முடிவுகட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதே மிகவும் பரிதாபகரமான முறையிலும் மனிதத்தன்மையற்ற முறையிலும் இருந்துவரும் அவர்களின் அந்தஸ்து மேலும் மோசமான முறைக்குச் சென்றுவிடும் என்பதை மனுவின் சட்டங்கள் குறித்து இவர்கள் கூறியிருப்பனவற்றைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். 6.
அடிக்குறிப்புகள்:---
5. VD Savarkar, ' Women in Manusmriti ' in Savarkar Samagar ( collection of Savarkar 's writings in Hindi), Prabhat, Delhi, vol.4, p.203.
6. All laws the verbatim reproduction from F.Max Muller (ed.), The laws of Manu, ( Delhi: Low price publication, 1996). This edition is the reproduction of the first edition published in 1886. The bracket after every code carries chapter and code number respectively. For instance(1/31) means chapter 1 and code number 31 of Manusmriti.
இருப்பு : முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்
பக்கங்கள்: 151--152.
இயற்றியவர் : சம்சுல் இஸ்லாம்
தமிழில் : ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
புத்தகம்
தொலைபேசி: 044--24332424.
- முகநூல் பார்வை
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு