தவெக தலைவர் விஜய் தலைமயில் கடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் அவர் திமுகவை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்கும், அதிகாரப் பகிர்வு என்கிற அறிவிப்பிற்க்கு இடது சாரிகட்சி தலைமை பதில் தரவேண்டிய அவசியமென்ன..?
விஜயின் அறிவிப்பால் அதிகாரப் பகிர்வு என்கிற முழக்கம் உண்டாக்கிய கட்சிகளுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை நாம் ஏன் பகிர்ந்து கொள்ள வேண்டும்...?
திமுக உள்ளிட்ட கட்சிகளோடு தேர்தல் கூட்டணியே தவிர நாம் கொள்கை கூட்டணி கிடையாது என்பதில் தெளிவிண்மையா அல்லது திமுக நம்மை கரைத்து விட்டதா..?
மாநிலத்தில் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி மேலோங்கி நிற்க்கிறது என்கிறார் செகரெட்டரி.
மல நாற்றமெடுத்த தண்னீரின் வீச்சமும்...
தலித்துகளை மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காத கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் கோவிலை பூட்டிய சமூகநிதியும்...
மாநிலமெங்கும் பரவிய ஆணவ கொலைகளை கொண்ட சகோதரத்துவமுமே மேலோங்கி நிற்க்கிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.
இந்திய அரசியலமைப்பு வழங்கிய நியாமான சங்க உரிமையை கேட்ட சாம்சங் உழியர்களின் சங்கத்தை பதிவு செய்யாமல் காலம் கடத்தி பின் அவர்களது போராட்டத்தை காயடித்து, மடை மாற்றி தரகு வேலை பார்த்த கார்ப்பரேட் நல பாசிச அரசு திமுக அரசு என்பதை கவனத்தில் கொள்வோம்.
மத்தியில் ஆளுகின்ற பாஜக சர்க்காரின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கை முடிவுகளை மாநிலத்தில் அமல்படுத்துகிற பாசிச வேட்டை நாய் தான் திமுக என்பதை கவனத்தில் கொள்வோம்.
"இத்துத்துவ கருத்தியலுக்கு எதிராக இயங்குகிற தமிழ்நாடு" என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செக்கரெட்டரி சொல்கிற போது அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.
அர்ஜூன் சம்பத்தை வைத்து முருக வழிபாடு மாநாடு நடத்தியதை செக்கரெட்டரி தோழர்
R Mutharasan அவர்கள் எப்படி பார்க்கிறார் என்பதை அவர் பார்வைக்கே விடக் கடவது.
மருத்துவ துறை மேம்பாடு என்பது சென்ற அதிமுக ஆட்சிகாலத்தில் கட்டமைக்கபட்ட உட்கடமைப்பு.
விஜயின் பேச்சும் அவரது அறிவிப்புகளும் தெளிவில்லாதது என்பதில் ஐய்யப்பாடு இல்லை.
விஜய் இடது சாரிகளையோ அல்லது அவர்களது கொள்கை முடிவுகளையோ விமர்சிக்காத பட்சத்தில் இப்படி திமுக ஆதரவு அறிக்கை என்பது ராஜ விசுவாச நடவடிக்கையாக சான்றோர் பார்வையில் மாறும்.
காஞ்சிபுரம் சிப்காட் விரிவாக்கத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் மீது பிசிஆர் கேஸ் கொடுத்தும், அவர்கள் மீது குண்டாஸ் வழக்கை பதிவு செய்தது பாசிச திமுக சர்க்கார்...
அதே காஞ்சிபுரம் அருகில் விமான நிலைய விரிவாக்கத்திற்க்கு விவசாயிகளின் நிலத்தை பறித்து அவர்களுக்கு ஒழுங்காக சேர வேண்டிய இழப்பீட்டு தொகையை இது வரை வழங்க நடவடிக்கை எடுக்காத பாசிச சர்க்கார் திமுக சர்க்கார்...
அதானியின் துறைமுக விரிவாக்கத்திற்க்காக நாகூர் மீனவ கிராமங்களை சூறையாட துனை போகிற தரகு முதலாளிய பாசிச சர்க்கார் திமுக சர்க்கார்...
இங்கு பாசிசத்தை மதத்தோடும், உத்திரப்பிரதேச புல்டோசர் இடிப்புகளோடும், மணிப்பூர் பெண்களின் நிர்வாண ஊர்வலங்களோடும் நிறுத்தி கொள்கிறோம்.
அதை விட மிகவும் ஆபத்தான கார்ப்பரேட் பாசிசத்தின் கோர முகம் திமுக என்பதை நினைவில் கொள்வோம்.
- சத்திய நாராயணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு