பேரறிவாளன் எப்படி வக்கீல் ஆகலாம் என பொங்குபவர்களுக்கு...
சிவப்பிரியன் செம்பியன்
அண்ணன் பேரறிவாளன் வழக்குரைஞராக பதிவு செய்ததை வைத்து கடந்த இரண்டு நாட்களாக விளம்பரத்திற்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறார் மயிலாடுதுறை MP சுதா.
அஃறிணைகளுக்கு அளிக்கும் மரியாதையைக்கூட இவர்களுக்கு வழங்க கூடாது...?
அரசியலில் எதற்கு எடுத்தாலும் வெறி பிடித்த நாய் போல கத்திக்கொண்டே இருந்து காலாவதியாகி, காணாமல் போன வேலூர் ஞானசேகரனின் இடத்தை தன்னை ஈட்டு நிரப்ப விரும்புகிறார் போல சுதா...
அண்ணன் பேரறிவாளன் அவர்களை தீவிரவாதி, பயங்கரவாதி என நீங்கள் காட்டுக்கூச்சலிட்டு கத்துவதை எல்லாம் உண்மையென நம்புவதற்கு இது பழைய தமிழ்நாடு அல்ல... 2009ஐ பார்த்து வளர்ந்த தமிழர்கள் இங்கே அரசியலை கவனித்து வருகிறார்கள்.
இன அழிப்புக் குற்றவாளி - சர்வதேச போர்க்குற்றவாளி இராஜூவ் காந்தி IPKF மூலம் ஈழத்தில் நடத்திய படுகொலைகளை, காங்கிரஸ் காடையர்களை வைத்து நடத்திய சீக்கிய படுகொலைகளை அறிந்தவர்கள். போபால் விஷவாயு குற்றவாளி ஆண்டர்சனை தப்ப வைத்த கார்ப்பரேட் கைக்கூலியின் பிணத்தை வைத்து, அரசியலில் பிழைக்க இன்னும் எத்தனை காலத்திற்கு மாரடிப்பிடீர்கள் என இளந்தலைமுறை காரி உமிழ்கிறது தமிழ்நாட்டில்...
ஜெயின் கமிஷன் அறிக்கை முதல் SIT அதிகாரிகளின் வாழ்க்கை வரலாறு நூல்கள் வரை இந்த வழக்கின் ஆவணங்களை, சுனா சாமி - சனா சாமி போன்றோரது தடயங்களை, வெளிவந்த நூல்களை இன்ச் விடாமல் படித்து சலித்து போன நம்மைப் போன்ற ஆயிரக்கணக்கான பேர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறோம்.
பேரறிவாளன் எப்படி வக்கீல் ஆகலாம் என்று பொங்கல் வைக்கும் அன்னை சோனியாவுக்கு பிறந்தவர்களுக்கு கிஞ்சிற்று மூளை இருந்தாலும் இப்படியெல்லாம் கேட்பற்கு வெட்கப்படுவர். அவர்கள் பிறப்பிலேயே அறிவு குறைபாடு உடையவர்கள் என்பதால் அத்தகையவர்களுக்கு புரியும்படி பதில் சொல்ல வேண்டுமில்லையா? அதற்காக தான் இந்த பதிவு!
ஞான சூன்யங்களே! குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதுகிறீர்களே... இந்த விவகாரத்தில் அவருக்கு என்ன அதிகாரமுள்ளது. இரண்டாவது அண்ணன் பேரறிவாளனுக்கு ஒவ்வொருமுறையும் நிவாரணம் அளித்தது நீதிமன்றங்கள் தானே ஒழிய வேறெந்த தனிநபர்கள் அல்ல. சட்டப்படியான உரிமைகளையே அவர் பெற்றார்.
அவரை வழக்குரைஞராக பதிவு செய்தது எந்த பார்கவுன்சில் விதிக்கு விரோதமானது? இன்னும் கேட்டால் அரசமைப்பு சட்டப்படி 2029 தேர்தலில் நின்று வெற்றிபெற்று குடியரசுத்தலைவர் பதவிக்குத் கூட போட்டிதடையில்லை தடையில்லை என்கிறார்கள் சட்ட படித்து அதே சட்டத்தை வைத்து தீர்ப்புரைத்த மாண்பமை நீதியரசர்கள் பலர்.
இது நிற்க...
பேரறிவாளன் நிரபராதியா? என கேட்டால் ஆம், அவர் நிரபராதிதான் என நாங்கள் சொல்லுவோம். அதற்கு பல காரணங்களை எங்களால் சொல்ல முடியும்.
1. அண்ணன் பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த சிபிஐ விசாரணை SP தியாகராஜன் 2013 இல் சொன்ன வாக்குமூலம் - "எதற்காக பேட்டரி வாங்கினார் என்று பேரறிவாளனுக்கு தெரியாது. ஆனால், அதை நான் வாக்குமூலத்தில் எழுதினால் வாக்குமூலம் வலுவாக இருக்காது என்பதால் திட்டமிட்டு எழுதாமல் விட்டேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
2. ராஜீவ் கொலை விசாரணையை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவின் தலைவரான கார்த்திகேயன் பிற்காலத்தில் தனது Triumph of Truth எனும் சுய சரிதையில் ராஜீவின் உயிரைப் பறித்த வெடி*குண்டின் பேட்டரி "Soldering" செய்யப்பட்டது. அதாவது அது இந்தியாவுக்கு வெளியே தயாரித்த இடத்திலேயே "பற்ற வைக்கப்பட்டு" இங்கே கொண்டு வந்தது. அதனால், டி.வி ரிமோட் பேட்டரி மாதிரி கடையில் வாங்கி மாட்ட முடியாது என்பது புலனாகும். எனவே, பேரறிவாளன் எவ்வழியில் இந்த கொ*லைக்கு காரணம் என்பதே இங்கே பெரிய சந்தேகம்.
3. இது போல வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குமூலம் என்று எழுதிக்கொள்ளும் ஜனநாயக விரோத #தடா சட்டத்தின்படி பெறப்பட்டவை தான் அனைத்து வாக்குமூலங்களும்.. ஆனால், பிற்காலத்தில் நீதிமன்றம் தடா சட்டமே பொருந்தாது என்று நிராகரித்துவிட்டது. பிறகு IPC எனும் இந்திய தண்டனை சட்டப்படி அந்த ஆதாரமற்ற வாக்குமூலங்கள் எதுவுமே செல்லாதவை. ஆனால், IPC இக்கு பொருந்தாத சட்டப்பிரிவில் பெற்ற வாக்குமூலங்களை வைத்து IPC இல் தண்டனை தந்த ஒரு வினோதமான வழக்கு அது.
4. சுப்ரமணிய சாமி & சந்திரா சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டுமென்று ஜெயின் கமிஷன் சொன்னது. ஆனால், அவரை கடைசிவரை ஏன் கணவனை இழந்த சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சிபிஐ கூட விசாரிக்கவில்லை.
5. ராஜீவ் கடைசி நிகழ்ச்சியின் முழு வீடியோ IB வசம் தான் இருந்தது, கொலையாளிகளும் அதில் தெளிவாக பதிவாகி இருந்தார்கள். ஆனால், IB தலைவர் MK நாராயணன் அந்த ஆதாரங்களை SIT வசம் தர முடியாது என்று மறுத்துவிட்டதாக மற்றொரு விசாரணை அதிகாரியான ரகோத்தமன் கூறியிருக்கிறார். இதில் முக்கிய ஆவணங்கள் லண்டன் விமான நிலையத்தில் தொலைந்துவிட்டது என்றெல்லாம் பால்வாடி பள்ளிக்கூட பசங்க போல விளக்கம் சொல்லிய கதை இங்கே நடந்திருக்கிறது. இதில் உலகளாவிய நெட்வொர்க் இருந்தால் கண்டுபிடிக்க பட்டிருக்கும் என்று அதே ரகோத்தமன் சொல்லியுள்ளார். மறைக்கப்பட்ட முக்கிய ஆதாரங்கள் பற்றி ஏன் காங்கிரஸ் மானஸ்தர்கள் பேசுவதே இல்லை.
6. இதை விசாரித்த நீதிபதி தாமஸ் அவர்கள், "40 லட்சம் பணம் பிடிபட்டதாக சொன்னீர்கள். அது எங்கிருந்து வந்தது என்று ஏன் விசாரிக்கவில்லை?" என்று கடுமையாக எச்சரித்தாரே. அது என்ன கதை ?
7. MDMA எனப்படும் பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் இவ்வழக்கில் 20 ஆண்டுகளாக ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருந்ததே ஏன் என்று தெரியுமா?
8. ராஜீவ் மரணத்தில் முதல் பயனாளி சோனியா தான்; அதனால், சோனியாவை விசாரிக்க வேண்டும் என்று சொன்ன சுப்ரமணியன் சாமி மீது இந்த மாதிரி நீங்கள் பாய்ந்து, சட்டையை உலுக்கி கேள்வி கேட்க வேண்டும். செய்வீர்களா?
இது மட்டும் அல்ல... இராஜீவ் வழக்கு சம்பந்தமாக 1000 கேள்விகளை, குளறுபடிகளை, ஏமாற்று வேலைகளை பட்டியலிட தமிழர்கள் தயார். பதில் சொல்ல காங்கிரஸார் தயாரா?
கேட்க நாதியற்ற இனத்தில், தமிழராக பிறந்து, தமிழினத்திற்காக பற்றோடு பணியாற்றி காரணத்திற்காகவே கைது செய்து சிறையில் அடித்து துன்புறுத்தி அவர்களின் வாழ்க்கையையே இல்லாமல் செய்த உண்மை குற்றவாளிகள் எல்லாம் சுதந்திரமாக சுற்றி திருந்தும், சிலர் பரலோகம் போயும் விட்ட காலத்தில் ஏன் இந்த வன்மம் உங்களுக்கு?
அந்த துன்பியல் சம்பவத்தில் ஏதொரு நேரடி தொடர்பும் இல்லாத அல்லது ஏதொரு தொடர்புமே அற்ற அப்பாவிகளை அவர்கள் செய்யாத குற்றத்திற்காக ஏற்காத பாத்திரத்திற்காக கூட்டு மனசாட்சியின் கோர பசியைத் தீர்க்க போதுமான அதற்கும் அதிகமான அளவில் தண்டித்து விட்டப் பின்னரும் எஞ்சிய அவர்களின் வாழ்வை சிதைக்க துடிப்பவர்களை மனிதர்களாக நாம் பார்க்க முடியாது.
அதிலும் அண்ணன் பேரறிவாளன் வெறும் 18 வயது சிறுவன். செய்யாத குற்றத்துக்காக கால் நூற்றாண்டுக்கும் மேலாக, அதீதமாக தண்டனையை அனுபவித்து விட்டு, வாழ்வின் பெரும்பகுதியை இழந்துவிட்டு, மற்ற குடிமக்களைப் போல வாழ எடுக்கும் முயற்சிக்குக் கூட இடைஞ்சல் செய்யும் கோரிக்கையில் என்ன நியாயம் இருக்க இயலும்?
தமிழ்நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பது கூட புரிந்து கொள்ளாத அறிக்கை. சிறையிலிருந்தவர்களின் விடுதலைக்கான உச்ச நீதிமன்ற உத்தரவு கூட தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த மனநிலையை புரிந்து கொண்டதால்தான் என்பதைக் கூட அறியாத அக்மார்க் தற்குறிகளை கொண்ட தமிழ்நாட்டு காங்கிரஸார் கமிட்டி.
அனாதைப் பிணத்தை தூக்கக்கூட நாலு பேர் வரும் தமிழ்நாட்டில், இதன் காரணமாகவே ஒருவர்கூட சீண்டாத கட்சியாக கதர் மாறி நிற்கிறது.
பாஜகவுக்கு ஆட்களை சப்ளை செய்யும் ஏஜெண்ட் தான் காங்கிரஸ். வடக்கில் வழக்கொழிந்த இந்த கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் சீட்டும் நோட்டும் கொடுப்பவர்களையும், தேர்தல் வேலைகளை செய்பவர்களையும் சொல்ல வேண்டும்.
பதவிக்காக சத்தியமூர்த்தி பவனிலும், சீட்டுக்காக கோபாலபுரத்திலும் சண்டமாருதம் செய்யும் இந்த பேர்வழிகள்
இதுவரை தமிழக மக்களின் ஒரு வாழ்வாதார பிரச்னையில் காங்கிரஸ்காரர்களை தெருவில் பார்த்ததில்லை. இந்த கட்சி தமிழ்நாட்டிற்கு கேடு - தமிழர்களுக்கு கேடு!
பாசிசத்திற்கு எதிரான முகாமாக ஜனநாயக பாதுகாவலராக காங்கிரஸ் கமிட்மியை காட்டி, வாக்கு கேட்ட இழிவான முகவர்களுக்கு உரிய வழியில் மரியாதை செய்துவிட்டு, பிறகு இத்தகைய கழிவுகளை நாம் கையாள வேண்டும்.
சிவப்பிரியன் செம்பியன்
https://www.facebook.com/share/1X2oEaewqK/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு