வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை

துரை. சண்முகம்

வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட   தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை

இத்தனை நாள் அழுத்தங்கள்! போராட்டம்! அடி உதை! உயிரிழப்பு! காயங்கள் இத்தனையையும் தாண்டி கரப்பான் பூச்சி போராடுகிறது!

இந்த நோக்கில் அரசியலை வளர்த்தெடுக்க இயலாத அவலம் இங்கே நீடிக்கிறது.

நீட்  வினாத்தாள் கசிவு நீட் மரணங்கள் என்பவை எரியும் சருகின் ஒரு பகுதிதான். எங்களை அசைக்கவோ! ஆட்டவோ முடியாது! என இறுமாந்து இருந்த பாஜகவை

அலற வைத்திருக்கிறது நாடு முழுக்க இந்தப் போராட்டத்தின் வீச்சு. 

இது எதிரிகளுக்கு புரிகிறது. 

இங்குள்ள வாய்ச்சவடால் கட்சிகளுக்கு பாஜக எதிர்ப்பை விட 

தங்களது சட்டவாத கையாளாகாத தனத்தின் மீது தற்பெருமை தாங்கவில்லை. 

நீட்டை ஒழுங்குபடுத்துவது என்று வடக்கு சொல்கிறது. தமிழ்நாடு நீட்டே வேண்டாம் என்று வழிகாட்டுகிறது! என்று பெருமை பேசுகிறார்கள். என்ன வழியை காட்டி இருக்கிறது என்பது சொல்பவர்களுக்கே வெளிச்சம்.

ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் சட்டவாத நடைமுறைகள் அடையாள ஆர்ப்பாட்டங்களை தாண்டி இப்படி ஒரு போராட்டத்திற்கு தமிழகத்தை வழிநடத்த எந்த அடிப்படையும் இல்லாமல் வெத்துப் பேச்சு! 

எதிர்க்கட்சியாக இருக்கும் இப்போதும் கூட பாலன் இல்லத்தில் போய் சவடால். 

ஏன் அறிவாலயமும் பெரியார் திடலும் நந்தனை வழிமறித்த நந்தியாய் மூடி கிடக்கிறது. தமிழக இளைஞர்களே வாருங்கள் நீட் எதிர்ப்பு போராட்டத்தை செய்வோம் என்று அழைக்க வேண்டியதுதானே! இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாசிச பாஜகவை எதிர்க்க வீறு கொண்டு வேலை செய்ய எது தடுக்கிறது?

ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக இளைஞர்களை நீட்டுக்கு எதிராக திரட்டி இப்படி ஒரு போராட்டத்தை எந்த வகையிலும் நடத்தாமல் இந்த லட்சணத்தில் வழிகாட்டுகிறார்களாம். 

தி.க. மதிவதனி அவர்கள் ஒரு படி மேலே போய்  தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் என்ன? அடுத்து இதை விட பெரிய சங்கி வரப்போகிறார்! 

என்று கோரிக்கையை நக்கல் அடித்து வேறு உரை.

இது தேர்தல் அரசியலுக்கும் பொருந்தும் தானே! தவெக போய்விட்டால் சோசலிச ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா வரப்போகிறது?  எனவே அதுவே நீடிக்கட்டும் என்பதை ஏற்பீர்களா? 

இல்லை, முதலாளித்துவ ஆட்சிகள் ஒழியும் வரை இடைக்கட்ட தீர்வுகளையே ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று முடிவு எடுப்பீர்களா? இந்த தேர்தல் அரசியலே பிராடு என பெரியாரைப் போல இதில் பேச 

வாய் வரவில்லையே!

இதுவெல்லாம் ஒரு புரட்சியா? 

நீங்கள் ஒரே அடியாக நீட்டை தூக்கி எறிய இந்திய அளவில் இறங்குவதற்கு என்ன திட்டம் உள்ளது? தடியடி கண்ணீர் புகை குண்டுகள் எதற்கும் கலையாமல் காயம் பட்டு மாதக்கணக்கில் இப்படி ஒரு போராட்டத்தை யோசிக்கவாவது உங்களால் முடியுமா? 

இரண்டு சீட்டு மூணு சீட்டு என்று இணையத்தில் திராவிட அன்பர்களால் கேலி செய்யப்பட்ட தோழர்கள்தான் தமிழ்நாடு முழுக்க போலீஸிடம் அடி வாங்கி போராடி களத்தில் இருக்கிறார்கள். பெரிய கட்சி படைகள் எங்கே?

இவர்களின் குறி தவெக வாக

இருக்கிறது. பாஜக வாக அல்ல.

ஆட்சி இல்லாத தருணத்திலும் பாஜகவுக்கு சவால் விட்டு இறங்கி வேலை செய்ய எண்ணமில்லை.

இன்னொரு பக்கம்,

இந்த நேரத்தில் கொள்கை எதிரியை எதிர்க்க வேண்டிய தவெக , ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க ஒன்றிய அரசுக்கு பணிந்து கிடக்கிறது. நடுங்கி நிற்கிறது.

அரசு என்பதின் அடக்குமுறை முகத்தை காட்டுகிறது. 

இதன் கூடவே தேர்தல்தான் மக்களது எல்லா நலன்களையும் தீர்மானிக்கிறது எனும் ஒப்பனைகள் கலைகிறது!

கம்யூனிஸ்டுகள் இந்த காட்சிகளில் இருந்து உணர்த்த வேண்டிய உண்மையும் இதுதான்!

- துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1070280062345456/?rdid=m3lFUK66m6p8vL3s

==============

2

அரசியலற்ற போராட்டம் என்று எதுவும் இல்லை. ஆனால் அது பாலன் இல்லத்தில் இடதுசாரி அரசியலுக்கான குவி மையமாக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறதா?  என்றால்!
முன்னேற்றகரமாக இல்லை. 

ஜனநாயகப்பூர்வமாக தங்களுடைய அமைப்பு இடத்தை கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்திற்கு துணையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தளத்தை திமுகவின் அரசியலுக்கு ஆதரவுத்தளமாக மாற்றுவது என்பது இரண்டு மூன்று நாட்களாகவே வளர்ந்து வருகிறது. 

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வேறு வடிவத்தில் நீட் மசோதாவை கொண்டு வந்த திமுக நபர்கள் மேடையில் ஏறி எதிர்ப்பு வீரர்களாக பேச முடிகிறது.

நீட் பற்றி நடக்கும் ஒரு பண்மை வெளியில் தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக வின் தவறுகள் பகிரங்கமாக பேசப்படும் போது, இதை மசோதாவாக கொண்டு வந்தத காங்கிரஸ் திமுகவின் வரலாறையும் பேச வேண்டும்.
அப்படியெல்லாம் பேசுவது மைய நோக்கமான பாஜக எதிர்ப்பை சிதைத்து விடும் ! என்று மழுப்பக் கூடாது.

சனம் செட்டி என்பவரின் பேச்சில் கூட்டத்தை ஆத்திரமூட்டும் முத்திரையிடும் விஜய் ஆதரவு போக்கு வெளிப்படையாக தெரிந்தது. இந்தக் கோணத்திலிருந்து அரசியல் அஜெண்டா ஒன்று இங்கே இருக்கிறது என பேசி உள்ளார். 
அவர் பேசிய விதம் அல்லது அவருக்கு வேறு நோக்கம் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவர் குறிப்பிட்டது உண்மைதான்! 

முன்பு நடந்த மாணவர்கள் இடையான பேச்சு முத்தரசன் ஆளூர் ஷாநவாவாஸ் போன்றவர்கள் பேசிய பேச்சு பழைய கூட்டணிக்கான அஜெண்டாவை தழுவியதுதான்.
அப்படி ஒரு அரசியல் முன்னெடுக்கப்படும்போது வேறு அரசியலும் வரத்தான் செய்யும். 
அரசியலே கூடாது என்று சொல்லிவிட்டார்! என்பதை மட்டும் ஹைலைட் செய்கிறார்கள். 

அதே கருத்தை நுட்பமாக இயக்குனர் வெற்றிமாறன் பேசியபோது எதிர்ப்பு இல்லையே ஏன்? " உங்கள் போராட்டத்தை யாரும் ஹைஜாக் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! மாணவர் போராட்டம் மாணவர் போராட்டமாகவே இருக்கட்டும்!" என்று பேசியதற்கு என்ன பொருள்? அவர் நேரடியாக திமுக அஜெண்டாவை தாக்கவில்லை என்பதால் தப்பித்தார். ஆனால் அதிலும் மறைபொருள் உண்டு. 

நீட் போராட்டத்தில் அரசியல் பேசப்பட வேண்டும். நீட்டை சுற்றி இருக்கும் அத்தனை அரசியலையும் பேச வேண்டும். அதில் ஆட்சியில் இருந்த கட்சிகளின்தவறுகளையும் பின்னணியும் கூட மாணவர்களிடத்தில் பேசப்பட வேண்டும். யார் வந்தும் இதையெல்லாம் பேசக்கூடாது! நோக்கம் சிதறிவிடும் என்று மழுப்புவது! தாங்களும் பேச மாட்டோம்! என்பதெல்லாம் கூட 
ஹைஜாக் அரசியல்தான்.

ஒன்றிய அரசின் உத்தரவுக்கு ஏற்ப தவெக அரசு அடக்குமுறை செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பு வீதியில் இறங்கி இதை எதிர்கொள்கிறது. ஜனநாயகத்திற்காக இதை முறியடிக்க எங்கே திமுக? உண்மையில் விஜய் அரசை எதிர்ப்பது என்பதை களத்தில் காட்டாமல், பாலன் இல்லத்தை பழைய கூட்டணிக்கான அடித்தளம் ஆக்க பயன்படுத்துவது அரசியல் அஜென்டா இல்லையா? இதுவா நீட் எதிர்ப்பில் மாணவர்களின் திசை வழி!

அதிமுக திமுக போன்ற இரு பெரும் கட்சிகளின் தனியார் கல்வி முதலைகளைப் பற்றி பேசாமல் 
நீட் கோச்சிங் சென்டர்களின் பின்னால் இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி எல்லாம் பேசாமல் , முக்கியமாக பாஜக அரசை எப்படி வீழ்த்துவது என கள அரசியலைப் பற்றி பேசாமல் எப்படியாவது இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும்!
என்று மட்டும் சிந்திக்கும் அஜெண்டா இதற்குள் இருக்கிறது என்பதும் உண்மைதான். 

நீ  இந்த சூழலில் ஜனநாயகம் படம் முக்கியமா என்று பேசினால்! 

அவன் தூய்மை பணியாளர் போராடும் போது கூலி படம் பார்க்கப் போகவில்லையா என்று கேட்கிறான்!

ஜனநாயகன்படத்திற்கு அமைச்சர்கள் போய் அழுகிறார்கள் என்று நக்கல் அடித்தால், 

"இட்லி கடைக்கு" டிக்கெட் போட்டு கட்டவுட் வைத்தவர்கள்தானே நீங்கள் என எடுத்து போடுகிறான்.

இந்த இரு துருவ அரசியலுக்குப் பின்னே மாணவர்களை பங்கு போட அனுமதிக்க கூடாது.

தமிழகத்தின் அரசியல் தவெக வா?
திமுக வா ? என்று படம் காட்டுவது அல்ல. 
முதலாளிகளா? தொழிலாளிகளா? 
முதலாளித்துவமா? கம்யூனிசமா? 

எனும் திசையில் வளர்த்தெடுக்கும் அரசியலுக்கு நீட் எதிர்ப்பு போராட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

https://www.facebook.com/share/1Db9NLcKKJ/

=============================================================

3

ஜந்தர் மந்தர் இளைஞர்களின் போராட்ட வெற்றி பாஜகவை மட்டுமல்ல தேர்தல் மூலமாக அதிகாரத்தை பங்கு போட்டு தெனாவட்டாக அலையும் எல்லா கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை. 

மோடி எனும் ஊதிப் பெருக்கப்பட்ட பலூனை தங்களது ஆட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய,  மக்கள் ஆற்றல்களை முழுதும் பயன்படுத்தி வீழ்த்துவதற்கு லாயக்கில்லாத கட்சிகளாகத்தான் இவர்கள் இருந்தார்கள். 

ஒரு வகையில் மோடியை ஊதிப் பெருக்கியது பாஜக ஆர் எஸ் எஸ் கும்பல் மட்டுமல்ல.  எதிர் வரிசையில் நின்ற பல கட்சிகளில்

சிலவும் கூட.

பாசிசத்தை வீழ்த்த எங்களுக்கு ஓட்டு போடுங்கள்! இல்லையேல் அவ்வளவுதான்! என்றெல்லாம் டூப் அடித்து விட்டு ஒரு தேர்தல் அதிகார இழப்புக்கே பாசிச நேர்முக மற்றும் மறைமுக கூட்டாளிகளுடன் பங்கு போட அலைந்தவர்கள்தான்.

தேர்தல் அரசியலுக்கு வெளியே அதாவது மக்களின் போராட்ட வீச்சுகளால் மட்டுமே மோடியை அசைக்க முடியும் என்பதை மாணவர் போராட்டம் ஒரு வகையில் உணர்த்தி நிற்கிறது. 

அதன் அரசியல் எல்லைக்கு உட்பட்டு இதை பிரம்மாண்டமாக அது சாதித்திருக்கிறது. 

இன்னும் நிறைய பரிமாணங்களை பிறகு எழுத வேண்டும். 

தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்பது அசைக்க முடியாத பணியாத மோடிக்கு எதிரான ஒரு அரசியல் வெற்றி என்ற வகையில் கொண்டாடப்படக்கூடியதுதான். 

இதை தொலைக்காட்சியில் நேர்மையாக வெளிப்படுத்தினார் வி.சி.க.  எம்பி ரவிக்குமார் அவர்கள். அவரோடு அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் வெளிப்படுத்திய  கருத்து வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. " அசைக்கவே முடியாது என்று உருவாக்கப்பட்டு இருந்த மோடி அரசுக்கு எதிராக மிகக் கடினமாக போராடி சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் இளைஞர்கள்! இதற்கு வெளியிலும் மோடியை வீழ்த்த முடியும் எனும் உற்சாகத்தை பிறருக்கு வழங்குவதாக இருக்கிறது!" என்றார். 

ஆனால் அறிவாளர் திருவாளர் ஜென்ராம் அவர்கள் , " வெற்றி தான் என்ன இருந்தாலும் இது நீட்டையே விலக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு இடையூறாக இதுவே வெற்றி என முடிந்து விடுமோ என கருத்துக்கள் வருகிறது, இந்த அளவுக்கு இந்த போராட்டம் இந்த கட்சி குறுகிய காலத்தில் வெற்றி பெற்றதன் பின்னே வேறு என்ன இருக்கும் என்பதெல்லாம் ஆராயத்தக்கது, 

அரசு பணிந்தது ஏன்? என்பதெல்லாம் டெல்லியில் இருப்பவர்கள் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது..

என்று இப்படியே போகறது பேச்சு! இவ்வளவு சீக்கிரம் எங்க குறுக்கு சால்ல மண்ணள்ளி போட்டுட்டீங்களேடா என்னும் தொனியில் முடிந்தது. 

தர்மேந்திர பிரதானே," நாட்டின் இந்த சூழலை தேசவிரோத சக்திகள் கைப்பற்றி கொள்வதற்கு எதிராக ராஜினாமா செய்கிறேன்" என்று சொன்னது கேட்கவில்லையா?

ஆமாம் இவருக்கு தர்மேந்திர பிரதான் விலகலை விட தவெக விலகலுக்கு இதை நகர்த்த முடியுமா என்பதாக கருத்து வருகிறது என்று நாமும் சொல்லலாம்.

மேற்கொண்டு நீட் எதிர்ப்பு என்பது நடக்குமா? போராடியவர்கள் அதை நோக்கி செல்வார்களா? என்றெல்லாம் அளக்கிறார்.

ஏன் நீங்கள் ஆதரிக்கும் திமுக போராட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேச வேண்டியதுதானே! இந்த வார்த்தை ஏன் தொண்டைக் குழியை தாண்ட மறுக்கிறது! 

சுயமாக தலைமை தாங்கி ஒரு போராட்டத்தை திமுக நீட் என்பதில் தொடங்கி பாசிச எதிர்ப்பு என்பது வரை வீரமிக்க இளைஞர் படையை கட்ட வேண்டும் என்று பேச வேண்டிய நேரத்தில்,  போராடியவர்களின் அங்க மச்ச அடையாளங்களை தேடுகிறார்.

இதோ நாங்கள் இருக்கிறோம் இளைஞர்களே வாருங்கள்! தமிழகம் வழிகாட்டுகிறது என்று பேசுங்கள் திருவாளர்களே! 

கரப்பான் பூச்சி யார்? அதன் அரசியல் பின்னணி என்ன? 

என்பதெல்லாம் மதிப்பிடுவது என்பது அவர்கள் பின்னால் திரண்டு இருக்கும் இளைஞர்களை மாற்று அரசியலுக்கு வழிகாட்டும் மாற்று அரசியலோடும் தொடர்புடையது.

ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததையே திருவிழா போல கொண்டாடும் மனநிலை கொண்டவர்கள் நாட்டில், 

ஒரு அரசிடம் போராடி ஒரு முதல் கட்ட முன்னகர்வை ஏற்படுத்தும்

இந்த வெற்றியை இளைஞர்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்!

https://www.facebook.com/story.php?story_fbid=1070843745622421&id=100080904177819&rdid=JRxYJfBOvEW2wDho

============================================================

4

ஒவ்வொரு அரசியல் போராட்டமும் வர்க்க போராட்டமாக இருக்கிறது.

வர்க்கப் போராட்டத்திற்குள் சித்தாந்த போராட்டமும் அடங்கி இருக்கிறது. 

அதன் பலனை அரசியல் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் அடைய வேண்டும். முதலாளித்துவக் கட்சிகளுக்கு பங்கு போடக்கூடாது! தவறவிடக்கூடாது எனும் நோக்கில் சில கருத்துக்களை எழுதுகிறேன்.. 

இது சிலருக்கு எரிச்சல் ஆகிறது. 

அதுவும் நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்தில் நீட் கூட்டாளி காங்கிரசுடன் கைகோர்த்த திமுகவின் வரலாறு நோக்கத்தை சொன்னால் திமுகவின் விட்ட குறை தொட்ட குறை 'புரட்சியாளர்களுக்கு' கோவம் வருகிறது. 

அப்படி ஒரு கேரக்டராக இப்போது மக்கள் அதிகார கழகம் செய்தி தொடர்பாளர் மருது Marudhu அவர்களும் என் பதிவு ஒன்றை டேக் செய்து மையப் பொருளை விட்டு விட்டு அவரது புரிதலுக்கு ஏற்ற மாதிரி விளாசுகிறார்.

நான் தவெக ஆதரவாளர் என நிறுவுவதன் மூலம் அம்பலப்படுத்துகிறாராம். 

தாராளமாக நிறுவுங்கள்.

நீங்கள் சொன்ன பாலன் இல்லத்திலேயே இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் விஜய் கேலிச்சித்திரம் வைத்திருந்தது பற்றி விமர்சித்து எடுக்க சொல்கிறார். அவரும் 

தவெக ஆள்! என்று தைரியமாக அந்த மேடையில் சென்று பேசுங்களேன் பார்ப்போம்!

இடக்கரடக்கல் இடம் பார்த்து ஆள் பார்த்துதானே வருகிறது.

நான் தான் முகநூல் புரட்சியாளர்! 

முக்கிய புரட்சியாளர் போய் எதிர்த்து நிற்க வேண்டாமா?

இன்று போராட்ட இடத்திற்கு அமைச்சர் ராஜ்மோகனே வந்து இன்க்லாப் ஜிந்தாபாத் என்று போடுகிறாரே! புரட்சியாளரே போய் ராஜ்மோகனை தடுக்க வேண்டியதுதானே! புரட்சியாளர் எங்கே போனார்? ஒருவேளை இப்படி ஒரு சூழலில் வாளா இருப்பதால் மருதுவை தவெக ஸ்லீப்பர் செல் என்று சொல்லலாமா? 

என் மீதான தனிநபர் வக்கிரத்தை தவிர இவரிடம் அரசியலாக மண்டையில் ஏதுமில்லை.

அரசியல் சூழலை எவ்வாறு பகுப்பாய்வு செய்ய வேண்டும் என முன்னிறுத்தும் எனது கண்ணோட்டத்தை கருத்து அடிப்படையில் விமர்சிப்பதை விடுத்து இன்னும் அந்த முத்திரை குத்தும் தாசில்தார் அதிகாரி பழக்கம் போகவில்லை அவருக்கு. 

 என்னுடைய அரசியல் நோக்கு நிலை என்ன என்பது அரசியல் புரிதல் உள்ள நபர்களுக்கு விளங்கும். அதற்கு மேல் அடையாள அணிவகுப்புகளாக நீங்கள் அழைத்து வரும் நபர்கள் 

அதிலும் ஏற்றுக்கொண்ட வேலையை செய்வதற்கு உழைக்காத அமைப்பை ஏமாற்றிய பேர்வழிகள் அரசியல் அறிவற்ற சீசனில் இடம்பெயரும் ஜீவன்கள் எல்லாம் அந்தப் பதிவில் வந்து கூட்டு சேர்ந்து கொண்டு தாக்குவது நல்ல செயல் தந்திரம். 

அதுவும் அமைப்பின் வேலையின் சுமையைத் தாங்கிக் கொள்ளாமல் அரசியலற்று ஓடிப் போன நபர்களெல்லாம் ஒரு வேளையில் ஒழுங்குபடுத்தும் கறார்த்தன்மையை பண்ணையார் தனம் என பேசித் திரிகிறது. ஒன்றைக் கற்றுக் கொள்வதில் எந்த உழைப்பும் இல்லாத சோம்பேறிகள் செய்யும் வேலைக்கு பொறுப்பில்லாமல் இருந்துவிட்டு பொய் வேறு. 

அதுவும் முழு நேரமாக கிசுகிசுப்பதையே ரகசிய புரட்சியாளர் வேலைகள் அருமை. தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். 

போராளிகளுக்கான மகிழ்ச்சியில் ஏதோ என்னால் ஆன உதவி. 

நான் எங்கு வருகிறேன் போகிறேன் என்பதை செல்பி எடுத்து புரட்சியாக காட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லாததால் 

நிச்சயம் தங்கள் புரட்சிகர களத்தில் நான் இல்லை. புரட்சி என்பதை பற்றிய அவரது புரிதலிலும் நான் இல்லை.

முகநூல் சமூக ஊடகங்களில் கருத்தாக்கத்தின் தன்மைகளை சமூகம் உணர்ந்து கொள்கிறது. 

நான்தான் முகநூல் புரட்சியாளராக இருக்கிறேன் எதற்கு இவ்வளவு மெனக்கெடு! 

தங்களைப் போல மூணு புரட்சியை முடித்துவிட்டு அடுத்த புரட்சிக்கு அடுத்த தெருவுக்கு போகும் புரட்சியாளராக நான் இல்லை. 

தங்களிடம் நிரூபிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்னும் யாரும் 'வளரவே' இல்லையே.

இன்னும் பிரச்சார கட்டத்தையே யாரும் கடக்காத நிலையில் 

பிறரது கருத்து பிரச்சாரத்தின் மீது இவ்வளவு மேட்டிமை

நகைப்புக்கு உரியது. 

முகநூல்தானே! அதன் தாக்கம் மேடைக்கு வந்துதான் நிறைவு செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை என்பதை உங்கள் எதிர்வினையே காட்டுகிறது. களப்போராளிகள் பலர் அங்கங்கே கிசுகிசுப்பதிலும் அறிய முடிகிறது. 

எந்த வடிவத்தில் ஊடகத்தில் நான் பேச வேண்டும் என்பதை கூட ஐயா உத்தரவின் பேரில்தான் செய்ய வேண்டும் போல.

நீங்கள் போய் களத்தில் நின்ற 

பாலன் இல்லம் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்த கட்சியின் இடம் ஆயிற்றே! அங்கே போய் சிபிஐ தவெக அரசையே ஆதரிப்பது பற்றி அம்பலப்படுத்தி பேச வேண்டியதுதானே புரட்சியாளரே! 

இல்லை மாபெரும் புரட்சியாளர் உங்களுக்கு இந்த காரணத்திற்காகவே புறக்கணித்துவிட்டு போராட இடமா இல்லை.

நிச்சயம் உங்கள் 'புரட்சியில்' நான் இல்லை. களப்போராளியின் வீரநடைக்கு குறுக்கேயும் இல்லை.

உவமைகள் அற்புதம்! 

நான் காலி பெருங்காய டப்பா தான்!

ஆனால் உங்களிடம் 

மூளை கருகிய வாடை வருதே! 

தனிநபர் தாக்குதலை ஊக்குவிக்கும் போது தவிர்க்க இயலாமல் உண்மைகள் வரத்தான் செய்யும்! 

எது கம்யூனிசம் என்று நான் கருதுகிறானோ! அந்த அரசியல் சித்தாந்த உறுதியுடன் 

அதற்கான தோழர்களுடன் 

எனது நடைமுறைகள் தொடரும். 

முகநூல் தொந்தரவும் இருக்கும். 

தங்களது புரட்சிகர அலைச்சல்களுக்கு இடையே எனது பதிவை கண்ணுற்று 

பதிவிட்டு , தங்கள் விசாலமான அறிவை வெளிப்படுத்திக் கொண்டமைக்கும் நன்றி !

https://www.facebook.com/story.php?story_fbid=1070910065615789&id=100080904177819&post_id=100080904177819_1070910065615789&rdid=MvFnOlirAXl2raYv

துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு