கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராடியவர்கள் கைது

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன அறிக்கை

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை  கண்டித்து போராடியவர்கள் கைது

பத்திரிக்கை செய்தி

அரசியல் தலையீட்டின் காரணமாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் திரு.மனோஜ்முனியன் என்பவரின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக நடைபெறும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

அரசியல் தலையீட்டினைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட ஊழியருக்கு நியாயம் கோரியும் நடந்த இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தமிழக அரசு கைது செய்தமைக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசும், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும் போராடும் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடன் வட்டாட்சியர் இடைநீக்கத்தை ரத்து செய்து சுமூக சூழ்நிலையை உருவாக்கிட கேட்டுக் கொள்கிறோம்.

மாறாக இந்நிலை நீடிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநிலம் தழுவிய அளவில் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

சு.தமிழ்ச்செல்வி, மாநிலத் தலைவர்

ஜெ.லெட்சுமிநாராயணன், பொதுச்செயலாளர்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

- சேரன் வாஞ்சிநாதன் 

( முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு