அமெரிக்காவின் நம்பகமான புரோக்கர் நான்தான் என்கிறார் ஸ்டாலின்

தமிழில் : விஜயன்

அமெரிக்காவின் நம்பகமான புரோக்கர் நான்தான் என்கிறார் ஸ்டாலின்

அமெரிக்க கம்பனிகளுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை திமுக அரசாங்கம் 100% நடைமுறைக்கு கொண்டுவரும் என்கிறார் ஸ்டாலின்

ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். 7,600 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு கம்பனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க கம்பனிகளுடன் போடப்பட்ட எல்லா ஒப்பந்தங்களையும் தனது ஆட்சி செயல்பாட்டிற்கு கொண்டு வந்து வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார்.

தமிழக அரசு ஈர்த்துள்ள அந்நிய முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட எதிர்கட்சி தலைவர்கள் கோரியிருந்த நிலையில் அமெரிக்க பயணம் துவங்குவதற்கு முன்பு கடந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் எந்தளவிற்கு அந்நிய முதலீடுகள ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை தான் விளக்கமாக கூறியிருப்பதாக ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

“தொழிற்துறை அமைச்சரும் சட்டப் பேரவையில் பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். பழனிச்சாமி இந்த அறிக்கைகளையெல்லாம் படித்திருக்க வேண்டும். அவரும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றவர்தான். ஆனால், அவரது பயணத்தின்போது போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10 சதவீதத்தை கூட அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. வெட்கக்கேடான விசயம் இது,” என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது ஸ்டாலின் கூறினார்.

ஆந்திர பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் 25,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வருகின்ற நிலையில், தமிழ் நாடு அரசு கையெழுத்திட்டுள்ள அந்நிய முதலீடுகளுக்கான அளவு என்பது மிகக் குறைவானது என்று பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ் முன்வைத்துள்ள விமர்சனத்திற்கு, பாமக தலைவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் உடையது என்று ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

Fortune 500 கம்பனிகளுடன் 19 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள முதல்வர், தமிழகத்தில் Ford நிறுவனம் பழையபடி உற்பத்தியை துவக்குவதென்பது பெரும் சாதனைக்குரிய விசயம் என்று வர்ணித்துள்ளார். திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 7,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பாக எழுந்த பிரச்சனையில் அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் குறித்து கேட்ட போது, இந்த பிரச்சனையில் மத்திய நிதியமைச்சர் கேவலமான முறையில் நடந்துகொண்டதாக ஸ்டாலின் கூறினார்.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-chief-minister-stalin-returns-after-us-tour/article68641328.ece