மஜஇக தோழர்கள் கைது: பாஜகவின் மனம் கோணாமல் நடந்து கொள்கிறது திமுக அரசு
செந்தளம் செய்திப்பிரிவு
கடந்த மூன்று நாட்களுக்கு முன்,
பிப்.28 குஜராத் இஸ்லாமிய இனவழிப்பு நாள்!
இஸ்லாமிய இனவழிப்புக் குற்றவாளி மோடியே பதவி விலகு!
2002-ல் குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமியப் படுகொலைகளுக்குக் காரணமான மோடி கும்பலைக் கூண்டிலேற்றுவோம்!
பாசிச பாசக ஆட்சியை வீழ்த்துவோம்!
- பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
என்ற முழக்கங்களை தாங்கிய சுவரொட்டியை தமிழகம் முழுவதும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் ஒட்டி பிரச்சாரம் இயக்கம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தோழர். ஆறுமுகத்தை வீடு புகுந்து அராஜகமாக கைது செய்துள்ளது திமுக அரசின் காவல்துறை. ஏன் எதற்கு என கேட்டதற்கு பாஜக அரசு மற்றும் மோடி கட்சியினரின் மனம் புண்படும் படியாக சுவரொட்டி வாசகம் இருந்ததாம், ஆகையால் திமுக அரசு அந்த மனக்குமுறலை தீர்க்க ஜனநாயக சக்திகள் மீது கூட்டுப் பாசிசத்தை காவல்துறை மூலமாக ஏவி விட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் தோழர். சோமு உள்ளிட்டோர் மீதும் சுவரொட்டி ஒட்டிய காரணத்திற்காக பொய்வழக்குகளை போட்டுள்ளது.
திமுக அரசின் இந்த ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைகளை கண்டித்து மஜஇக வினர் கீழுள்ள முழக்கங்களை வெளியிட்டுள்ளனர்.
மோடியை பதவி விலகுமாறு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் சுவரொட்டி ஒட்டிய மஜஇக தோழர் ஆறுமுகம் வீடு புகுந்து கைது! முன்னணி தோழர்கள் மீது பொய் வழக்கு!
_______________________________________________
* குஜராத் இசுலாமிய இனவழிப்பு குற்றவாளி மோடியை பதவி விலக சொன்னால் மு.க.ஸ்டாலின் அரசுக்கு வலிப்பது ஏன்??
* திமுக அரசே! ஆறுமுகம் உள்ளிட்ட தோழர்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு!
* கருத்துரிமையைப் பறித்து மோடி ஆட்சிக்கு கரசேவை செய்யும் திமுக அரசின் பாசிச அடக்குமுறையை கண்டிப்போம்!
- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
பாஜக மற்றும் திமுக அரசின் கூட்டுப்பாசிசத்தை அம்பலப்படுத்த வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு