மா-லெ புரட்சியாளர் தோழர் க.குணாளன் நினைவஞ்சலி!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழக செய்தி
மார்க்சிய லெனினிய புரட்சியாளரும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வேலூர் திருப்பத்தூர் மாவட்ட அமைப்பாளராகவும் செயல்பட்டு மறைந்த தோழர் குணாளன் அவர்களுக்கு ம.ஜ.இ.க தனது செவ்வஞ்சலி செலுத்தி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியினை நாளை நவம்பர் 29 அன்று நடத்துகிறது.
தோழர் குணாளன் அவர்கள் தனது இளமை பருவத்திலிருந்து மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை தத்துவ அரசியலை உள்வாங்கி ஏ.எம்.கே வழியில் செயல்பட்டவராவார்.தனது வாழ்வின் இறுதிவரையில் நாட்டின் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும்,தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவும் ஈழத்தமிழின ஒடுக்கு முறைக்கு எதிராகவும் தாய்மொழிக்கொள்கைக்காகவும் தோழர் ஏ.எம்.கே வழியில் உறுதியாக போராடியவராவார்.
மேலும் ட்ராட்ஸ்கியவாத,கலைப்புவாத, பின்நவீனத்துவ அடையாள அரசியலை எதிர்த்தும் புரட்சியமைப்பை காத்து நின்றவர் தோழர் குணாளனாவார். இப்படிப்பட்ட தோழர் விட்டு சென்ற பணியை அவரைப்போல் சலியாது தொடர்வது நமது பணியாகும்.
இப்படிப்பட்ட தோழர் குணாளனின் நினைவை நெஞ்சிலேந்தி நடைபெறும் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க உழைக்கும் மக்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளை அறைக்கூவி அழைக்கின்றோம்!
நாளை நவம்பர் 28 ல் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வையொட்டி தோழர் குணாளனின் நினைவை போற்றியும் அவரது புரட்சிகர வாழ்வு மற்றும் அவரது நினைவுநாளில் முழங்கப்படும் அரசியல் முழக்கங்களை ம.ஜ.இ.க தோழர்கள் அவர் வாழ்ந்த பகுதியினை சுற்றி மாநில அமைப்பாளர் தோழர் தெய்வசந்திரன் தலைமையில் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
- மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்