பாஜக அரசின் தொங்குசதையாக செயல்படும் தி.மு.க அரசு
PFI அமைப்பின் மீதான தடையை நீக்க கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தோழர்கள் கைது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அதன் துணை அமைப்புகள் மீதான தடையை நீக்க கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் கீழுள்ள முழக்கங்களின் அடிப்படையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையை நீக்கக் கோரி....
கண்டன ஆர்ப்பாட்டம்
08.10.2022 சனி மாலை 4 மணி
சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் அருகில்
--------------------------------
மோடி அரசே!
* பி.எப்.ஐ., என்.சி.எச்.ஆர்.ஓ உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் மீதான தடையை நீக்கு!
* இஸ்லாமியர்கள் அமைப்பாவதற்கும், போராடுவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் இருக்கும் உரிமையை மறுக்காதே!
* என்.ஐ.ஏ.வை கலைத்திடு! ஊபா சட்டத்தைத் திரும்பப் பெறு!
பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்துவோம்! இடது ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவோம்!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி
இதையொட்டி காவல்துறையை அணுகி அனுமதி கேட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்திற்கான பிரச்சார இயக்கம், மற்றும் சுவரொட்டி இயக்கங்கள் செய்துள்ளனர். இந்த நிலையில் 07.10.2022 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தடை விதித்துள்ளது திமுக அரசு. அத்தடையையும் மீறி நேற்று 50க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்ட களத்திற்கு வநதுள்ளனர். இதை சீரகுலைக்கும் வகையில் காவல்துறை ஒவ்வொரு பேருந்து நிறுத்தம், தேனீர் கடைகளிலும் ஜீப் மற்றும் வேனுடன் தயாராக இருந்து ஆர்ப்பாட்ட களத்திற்கு வருபவர்களை முன்கூட்டியே கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது. ஆங்காங்கே முழக்கம் போட்டு வந்து தோழர்கள் ஒருங்கிணைவதற்கு முன்னரே ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை கலைத்து அனைவரையும் கைது செய்தது. இச்சம்பவம் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்த செய்தி ஊடகங்களின் தகவல்களை கீழுள்ள இணைப்புகளில் பெறலாம்
மேலும், இதையொட்டி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் அங்கமாக விளங்கும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் திமுக அரசின் கரசேவையை கண்டித்து முழக்கங்களை வெளிட்டுள்ளனர் அவை:
பி.எப்.ஐ மீதான தடையை நீக்க கோரும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை ! தோழர்கள் கைது !
தி.மு.க அரசே ! கைது செய்த தோழர்களை உடனடியாக விடுதலை செய் ! கருத்துரிமையை நசுக்காதே !
பி.எப்.ஐ மீதான தடையின் மூலம் இஸ்லாமியர்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் மோடி கும்பலின் பாசிசத்திற்கு
"கர சேவை " செய்யும் தி.மு.க ஆட்சியை வன்மையாக கண்டிக்கின்றோம் !
சிறுபான்மையினர், ஜனநாயக சக்திகளின் குரல்வளையை நசுக்கும் பாஜக அரசின் தொங்குசதையாக செயல்படும் தி.மு.க அரசின் " சமூக நீதி " முகமூடியை தோலுரிப்போம் !
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
தமிழ்நாடு
ஒரு புறம் பாஜக பி.எப்.ஐ அமைப்பையும், அதன் மீதான தடையை நீக்க கோரும் போராட்டங்களையும் நசுக்க விரும்புகிறது. மறு புறம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தமிழகத்தில் பிரம்மாண்டமாக நடத்தி வளர விரும்புகிறது. அதிமுகவில் உள்ள முரண்களை பயன்படுத்தி அக்கட்சியை பலவீனப்படுத்தி தான் வளர பாஜக விரும்புகிறது. இதையேதான் திமுகவும் விரும்புகிறது. அதாவது, பிரதான எதிர் கட்சியான அதிமுகவை வீழ்த்தினால் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க முடியும் என கருதி பாஜகவின் சதிகளுக்கு துணை போகிறது. ஆகவே தி.மு.க அரசு செவ்வனே பாஜகவின் திட்டங்களை நடைமுறைபடுத்துகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிசத்திற்கு கரசேவை செய்கிறது.
- செந்தளம் செய்திப் பிரிவு