பாசிசச் சட்டங்கள் - ஊபா (UAPA) என்.ஐ.ஏ. (NIA)

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன கருத்தரங்கம் மற்றும் அறிக்கை

பாசிசச் சட்டங்கள் - ஊபா (UAPA) என்.ஐ.ஏ. (NIA)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.!

வழக்கறிஞர்கள் மீதும் ஊபாவின் கீழ் பொய் வழக்கு!

பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ!

பாசிசத்தின் அடக்குமுறைக் கருவியாய் ஊபா!

மோடி அரசின் அரச பங்கரவாதத்தை முறியடிப்போம்!

மதச் சிறுபான்மையினரை 'அந்நியர்' எனச் சொல்லும் ஆர்.எஸ்.எஸ். - பாசகவின் இந்து தேசியத்தை எதிர்த்துப் போராடும் இசுலாமியர்கள் ஒருபக்கம்! 'ஒற்றை தேசியம்' என்ற தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் காசுமீர், அசாம், மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மொழிவழி மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன ஆற்றல்கள் இன்னொரு பக்கம்! ஏகாதிபத்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடியினர் மற்றும் நாடெங்கும் உள்ள உழவர்கள், தொழிலாளர்கள் இன்னொரு பக்கம்! இவர்கள் எல்லோரும் 'தேச விரோதிகள்' என்று முத்திரையிடப்பட்டு பாசிச மோடி அரசால் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

இதில் போராடும் மக்கள் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் வழக்கறிஞர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டு செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்பட வில்லை.

பீமா கோரேகான் வழக்கு, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்ட வழக்கு ஆகிய ஊபா பொய் வழக்குகளின் வரிசையில் பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கிலும் தொடர் கைதுகள் நடந்துவருகின்றன.

கடந்த 2022 செப்டம்பரில் தமிழ்நாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதே வழக்கில் மே 9 அன்று மேலும் ஐவர் என்.ஐ.ஏ. வால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் வழக்கறிஞர்கள் முகமது அப்பாஸ், முகமது யூசுப், பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்யப்படுவதற்கு முன்பு அதன் நிர்வாகியாய் இருந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்டோர் அடங்குவர்.

வழக்கு நடத்திய வழக்கறிஞர்களும் அதே வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்களையும் சனநாயக ஆற்றல்களையும் சீற்றம் கொள்ளச் செய்துள்ளது. இது வழக்கறிஞர்கள் தமது கட்சிக்காரருக்காக வாதாடுவதற்கு இருக்கும் உரிமையை மறுப்பதாகும்.

அன்றாடம் சோதனைகள், அடிக்கடி கைதுகள் என என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் இசுலாமியர்களை வேட்டையாடி வருகின்றது.

பாசிசத்தின் பயங்கர நிறுவனமாக என்.ஐ.ஏ. பயன்படுத்தப்படுகிறது. ஊபா சட்டப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் போடப்படுகிறது. எனவே, பாசிச எதிர்ப்பில் அக்கறைக் கொண்டோர் ஊபா, என்.ஐ.ஏ. வை எதிர்த்துப் போராடாமல் இருக்க முடியாது.

நாம் எழுப்ப வேண்டிய உடனடி மற்றும் நீண்டகாலக் கோரிக்கைகள்

பாசிச பாசக அரசே!

  • பாப்புலர் ஃப்ரண்ட் வழக்கு, பீமா கோரேகான் வழக்கு, குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்ட வழக்கு உள்ளிட்ட அனைத்து ஊபா வழக்குகளிலும் சிறையிலிருப்போரை உடனடியாக விடுதலை செய்!
  • ஊபா பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறு!
  • ஊபா சட்டத்தை திரும்பப் பெறு! என்.ஐ.ஏ. வைக் கலைத்திடு!

திமுக அரசே!

  • ஊபா, என்.ஐ.ஏ. சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டுமென கொள்கை முடிவெடுத்திடு! அம்முடிவை செயல்படுத்த உழைத்திடு!
  • என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்று! என்.ஐ.ஏ. அலுவலகத்தை இழுத்து மூடு!

தமிழக மக்களே!

  • பாசிசச் சட்டங்களை எதிர்த்தும் பாசிச பாசக ஆட்சியை வீழ்த்தவும் அணிதிரள்வோம்!

கண்டனக் கருத்தரங்கம்

நாள்:6.7.2023, வியாழன், மாலை 5 மணி இடம்: நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை

தலைமை:

வழக்கறிஞர். சேல்முருகன்,  மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

கண்டன உரை:

மேனாள் நீதியர். திரு து. அரிபரந்தாமன் சென்னை உயர்நீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர். R.மகாதேவன், ஐதராபாத் உயர்நீதிமன்றம்

மூத்த வழக்கறிஞர். ப.பா.மோகன்

தோழர். நெல்லை முபாரக், மாநிலத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.

தோழர். தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி, சென்னை மாவட்டம்

9941931499, 9443106455, 9003164280, 9025870613

Disclaimer: இது முன்னணியின்  அறிக்கை செய்திக்காகவும் விவாதத்திற்காகவும்  இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு