பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கைது

அம்பலமாகும் நீதிமன்றம் - திமுக ஆட்சியின் கூட்டுப்பாசிசம்

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கைது

அறம் இணைய இதழ் ஆசிரியர் பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் கைதுக்கு செந்தளம் வலைதளம் தனது கண்டனங்களை தெரிவிக்கிறது.

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி படுகொலைச் சம்பவத்தின் ஆரம்பத்திலிருந்தே திமுக அரசும் நீதிமன்றங்களும் உண்மையை மூடிமறைக்க சக்திபள்ளி நிர்வாகம் உள்ளிட்ட கல்வி காவி முதலாளிகளை கண்ணின் இமைப்போல பாதுகாத்து வந்தன. கொலை செய்தோருக்கு  துணையாகவும், நீதிக்காக போராடியவர்களை கைது செய்து கடுங்காவலிலும் துன்புறுத்தின. ஶ்ரீமதியின் சடலத்தை பெற்றுக் கொள்ளும்படி ஒரு ரவுடியைப் போல் மிரட்டி பணிய வைத்தது நீதிமன்றமும் திமுக அரசும். 

அனைத்து பிரதான ஊடகங்களும் அரசின்- சங்பரிவார கும்பலின் ஊதுகுழலாக மாறி இந்த கொலையை மூடிமறைத்தன. இந்த நிலையில் சமரன், நக்கீரன் உள்ளிட்ட ஒரு சில பத்திரிக்கைகளும் அறம் ஆன்லைன், தமிழ் குரல், ரெட் பிக்ஸ் உள்ளிட்ட ஒரு சில சிறு ஊடகங்கள் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தன. 

தொடர்புடையவை: போர்ஜரி கடிதம்! பொய்க்கு துணை போகிறதா அரசாங்கம்!

ஸ்ரீமதியைப் படுகொலை செய்த கல்வி காவி முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் திமுக அரசு

உண்மைக்காக இயங்கிய இந்த ஊடகங்களையும் முடக்கும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு ஶ்ரீமதி விசயத்தில் இனி யார் கருத்து கூறினாலும் கைது செய்யப்படுவர் என அராஜகமான கருத்தை தெரிவித்தது. அதை திரும்பப் பெறக் கோரி யூடியூப் சேனல்களின் கூட்டமைப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. 

ஒருபுறம் ஶ்ரீமதியின் கொலை குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஶ்ரீமதியின் பெற்றோர் மீது கொச்சையான அவதூறுகளை சங்பரிவார யூடியூபர்கள் சிலர் பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாலும் நீதிமன்றத்தாலும் பாதுகாக்கப் படுகின்றனர். மறுபுறம் உண்மைக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுப்பவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். 

ஶ்ரீமதியின் கொலையில் ஒரு போர்ஜரியான கடிதத்தை கொண்டு தீர்ப்பு வழங்கியதை கண்டித்து அறம் இணைய இதழில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையும் ஆவணப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. இன்று முற்பகலில் அறம் இணைய இதழின் ஆசிரியர் பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் திமுக அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது திமுக அரசு.

சங்பரிவார கும்பலிடம் செருப்படி வாங்கும் திமுக அரசு, அவர்களின் காலில் விழுந்து வணங்கி சேவை செய்வதோடு; நீதிமன்றத்துடன் இணைந்து கூட்டுப் பாசிசத்தை கட்டியமைக்கிறது. இந்த அராஜக பாசிச செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பது அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமையாகியுள்ளது. 

- செந்தளம் செய்திப் பிரிவு