ஸ்ரீமதியைப் படுகொலை செய்த கல்வி காவி முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் திமுக அரசு

ஸ்ரீமதியை படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கல்வி முதலாளிகளை - காவிக் காடையர்களை பாதுகாக்கும் திமுக அரசு!

ஸ்ரீமதியைப் படுகொலை செய்த கல்வி காவி முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் திமுக அரசு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளியான சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதியை பலாத்காரம் மற்றும் படுகொலை செய்த பள்ளி முதல்வர், தாளாளர், அவர்களது மகன்கள் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை திமுக அரசு, பாஜக - ஆர்.எஸ்எஸ் கும்பல், அதிமுக மற்றும் நீதிமன்றம் அனைத்தும் கூட்டாக கைக்கோர்த்து காப்பாற்றி வருகின்றன. தேர்தல் கூட்டணிகள் ஏமாற்று எனவும், இதுவே உண்மையான ஆளும் வர்க்க கூட்டணி எனவும் புரட்சிகர அமைப்புகள் சொல்லி வந்ததை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.

சங்பரிவார அமைப்புகளில் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, ஆலய மீட்புக் குழு போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து வரும்  சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியின் உரிமையாளர், தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தை - காவி கிரிமினல் முதலாளிகளை கண்ணின் இமை போல் பாதுகாத்து வரும் திமுக அரசின் "திராவிட மாடல் சமூகநீதிக்கு" அறிவாலயத்தின் செல்லப்பிராணிகளும், ஊடக வேசிகளும் விளக்குப் பிடித்து வருகின்றன. ஸ்ரீமதி மீது நிகழ்த்தப்பட்ட அரசு பயங்கரவாதத்தின் கொடூரமான வன்முறை குறித்துப் பேச வக்கற்ற இந்த அரசியல் வேசிகள், பள்ளி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலை பிரதானப்படுத்தி பேசி வருகின்றனர். வீசப்பட்ட எலும்பு துண்டுகளை கவ்விப் பிடித்துக் கொண்டு, இது திமுக அரசை பலவீனப்படுத்த (De stabilise) பாஜக செய்யும் சதி என்றும் தனியார் பள்ளியில் ஏன் பிள்ளையச் சேர்க்க வேண்டும் எனவும், காதல் பிரச்சினையில் நிகழ்ந்த தற்கொலை என்றும் மானவெட்கமின்றி குரைத்து வருகின்றது இந்த அறிவாலயத்து செல்லப்பிராணி கூட்டம். தங்கள் பிள்ளைக்கு இவ்வாறு நேர்ந்தாலும் இதேப்போன்றுதான் திமுக ஆட்சிக்கு இக்கும்பல் முட்டு கொடுக்குமா?

கடந்த 12-ம் தேதி இரவு ஸ்ரீமதியை படுகொலை செய்துவிட்டு மறுநாள் காலை சுமார் 6 மணிக்கு பெற்றோர்களுக்கு தொலைபேசியில் மாடியில் இருந்து விழுந்ததால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது பள்ளி நிர்வாகம். அன்று இரவு பள்ளி வளாகத்தில் பள்ளி முதல்வரின் பிறந்த நாளையொட்டி நடந்த நள்ளிரவு மதுபான விருந்தில் தாளாளர் மற்றும் முதல்வர் மகன்கள் கலந்துகொண்டுள்ளனர். தாங்கள் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பள்ளி நிர்வாகிகள் மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டதாகவும், சடலமாகத்தான் ஸ்ரீமதி உடல் கொண்டு வரப்பட்டது என  மருத்துவர் கூறியதாகவும் ஸ்ரீமதியின் பெற்றோர் கூறுகின்றனர்.  மேலும் ஸ்ரீமதியின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் மகளின் சடலத்தைப் பார்க்க கூட பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை.    பெண்ணின் மரணத்தில் சந்தேகம் வந்ததால் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்து பெற்றோர் பள்ளி சென்றுள்ளனர். அங்கு முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பிறகு அங்கு கூடிய உற்றார் உறவினர்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர். மாணவி விழுந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் துளியும் இரத்தக்கறை தென்படவில்லை என்கிறார் ஸ்ரீமதியின் தாய். உடற்கூராய்வு பரிசோதனையில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகளின் துணையுடன் அதை தற்கொலையாக மாற்றியது பள்ளி நிர்வாகம். உடற்கூறு பரிசோதனையை அனுபவமிக்க மருத்துவர்களைக் கொண்டு செய்யாமல் அனுபவமில்லாத புதியதாக பணியில் சேர்ந்த மருத்துவரை (Tutor) கொண்டு மாணவி இறந்த 36 மணி நேரம் கழித்து நடத்தியுள்ளது. வலது மார்பில் ஒரு காயம், விலா எலும்பு முறிவு உள்ளிட்ட உடல் காயங்களை மட்டுமே அவர் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

மேலும் படிப்பு - தேர்வுச் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமே பொய்யான கடிதம் ஒன்றை (Suicide Note) தயாரித்து காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டது. ஆனால் அது தனது மகளின் கையெழுத்தே அல்ல எனவும், அதற்கு முந்தைய நாள்தான் (கொலை செய்யப்பட்ட 12.07.2022 அன்று சுமார் 8மணிக்கு) பெண்ணிடம் சகஜமாக பேசியதாகவும், நன்றாக படிக்ககூடிய தைரியமான பெண் எனவும், ஸ்ரீமதியின் தாயார் கூறுகிறார். ஆனால் பெற்றோரின் அழுகுரலை காது கொடுத்து கேட்காமல், வெளிநாட்டிற்கு தாளாளர் மற்றும் முதல்வர் மகன்கள் தப்பி ஓடவும் பள்ளி நிர்வாகம் டெல்லி சென்று மோடி கும்பலின் உதவியை நாடவும் திமுக அரசு ஏற்பாடு செய்துள்ளது. முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் வலது மார்பில் இருந்த நகக்கீறல் (அ) பல் கீறல் மற்றும் பின்புற விலா எலும்புகள் உடைந்ததாக (இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதால் எலும்புகள் உடைந்திருக்கலாம் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்) குறிப்பிடப்பட்டது குறித்தும் காவல்துறை எதையும் வெளிப்படையாக கூறாமல், அக்காயங்கள் தற்கொலையால் உண்டானவை என்று கூறி பள்ளி நிர்வாகத்திற்கு 'மாமா' வேலை பார்த்தது திமுக அரசின் காவல் துறை. இந்த அறிக்கையை கூட மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பரிசோதனையில் மேற்கொள்ள வேண்டிய திசு (Tissue) மாதிரி, குடல் மாதிரி (Viscera), பிறப்புறுப்பு திசு மாதிரி போன்ற எதையும் சேகரிக்காமல் பெயருக்கு ஒரு பரிசோதனையை நடத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். மேலும் மிக முக்கியமாக செய்ய வேண்டிய ஹைமன் பரிசோதனை, பிறப்புறுப்பில் விந்தணு உள்ளது பற்றிய பரிசோதனை போன்றவற்றையும் மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை.  விடுதி  படிக்கட்டுச் சுவரில் உள்ள இரத்தம் தோய்ந்த கைரேகை, சீருடை - உள்ளாடை முழுக்க படிந்த இரத்தம், திருப்பி போடப்பட்ட சுடிதார் பேண்ட், மார்பு காயம், விலா எலும்பு முறிவு போன்றவை ஸ்ரீமதி பலாத்காரம் - படுகொலை செய்யப்பட்டிருப்பதை தெளிவாக நிரூபிக்கின்றன. உண்மைகளை மூடிமறைக்கும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, பள்ளி நிர்வாகத்தின் கூட்டுக் களவானித்தனத்தை புரிந்து கொண்ட பெற்றோரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட துவங்குகின்றனர்.

13-ம் தேதி முதல் 16ம் தேதி வரை போராட்டம் அமைதியான முறையில் நடந்து வந்தது. 4 நாட்கள் ஆகியும் பள்ளி நிர்வாகம், கல்வி அமைச்சர், அரசு கல்வி அதிகாரிகள், காவல் அதிகாரிகள், ஆட்சியர் என எவரும் போராடிவரும் ஸ்ரீமதியின் பெற்றோர், உறவினர், பொதுமக்களை சந்திக்கவும் இல்லை; அவர்களது சந்தேகத்திற்கு விளக்கமும் சொல்லவில்லை. பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றுவதில்தான் திமுக அரசின் முழுகவனமும் இருந்தது. அப்பள்ளி கறாராக கட்டண வசூல் வேட்டை நடத்தி வந்ததாலும், 2005முதல் சுமார் 6 மாணவிகள் இப்பள்ளி நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாலும் அப்பள்ளி மீது பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இதனால், ஸ்ரீமதி படுகொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் முற்றிலும் சட்டை செய்யப்படாத நிலையில் 17-ந்தேதி போராட்டம் தீவிரம் பெற்றது. போராட்டகாரர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தலைமையாசிரியர், முதல்வர், தாளாளர் அறைகளில் உள்ள ஆணுறைகள், பள்ளி மற்றும் விடுதியில் இருந்த படுக்கை அறைகளை வீடியோவாக வெளியிட்டனர். மக்களின் போராட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு முழுமுதற் காரணம் திமுக அரசு மற்றும் சங்பரிவாரத்து கல்வி முதலாளிகளின் அலட்சியப்போக்கும் அதிகாரத் திமிருமே ஆகும்.

இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி பள்ளி நிர்வாகம் திட்டமிட்டு தங்களது சங்பரிவார கூலிப்படையை போராட்டத்திற்குள் ஊடுருவ விட்டு சான்றிதழ் எரிப்பு, வாகன எரிப்பு போன்ற வன்முறைச் செயலில் ஈடுபட்டது. அதை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் கள்ள மௌனத்துடன் அங்கீகரித்தது. ஆட்சி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை பிரிவுகளில் சங்பரிவார காவி கும்பல் நிரம்ப வேரூன்றியுள்ளதை நாம் அறிவோம். இதனால்தான் திட்டமிட்டு அன்று காவலர்கள் குவிக்கப்படவில்லை. மாலை 4மணி வரை காவலர்கள் அங்கு வரவேயில்லை. கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்ற மத்திய உளவுத்துறையின் உத்தரவை மாநில உளவுத்துறை செயல்படுத்தியது. வளாகத்திற்குள் நடந்த கலவரத்தை காவலர்கள் வேடிக்கைப் பார்த்தனர். பாஜகவிற்கு நெருக்கமான யுவராஜ் நடத்தும் தீரன் சின்னமலை பேரவையின் நிர்வாகி ராஜசேகர் தலைமையில் கூலிப்படை வன்முறையில் ஈடுபட்டுள்ளது. இக்கும்பல்தான் பள்ளி வாகனங்களுக்கும், சான்றிதழ்களுக்கும் தீ வைத்துள்ளது. அவர்களுக்காக அனைத்து பள்ளி அறைகளும் திறக்கப்பட்டிருந்தன. அவர்களிடம் போலீசார் "சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு கிளம்புங்கடா" என்று சொன்னதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்தும் முடிந்த பிறகு, யுவராஜ் ஆட்கள் கை நீட்டிய போராட்டக்காரர்களை காவல்துறை சிறையிலடைத்தது. கள்ளக்குறிச்சியில் மகாபாரதி என்ற பள்ளிக்கூடம் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மோகன் பெற்றோரிடம் பேரம் பேசியுள்ளார். பெற்றோர் அதற்கு மறுத்துவிட்டனர். யுவராஜ் கும்பலுக்கு சக்தி பள்ளியின் உரிமையாளரும் மோகனும் லட்சக்கணக்கில் நன்கொடை தந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ்க்கு நெருக்கமான பிரவின் குமார் அபினவ் என்ற அதிகாரிதான் சிறப்பு புலணாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கு மண்டலம் ஆர்.எஸ்.எஸ் பிடியில் உள்ளதை இவை நிரூபிக்கின்றன.

இதன் மூலம் 1) ஏற்கனவே அழிக்கப்பட்ட தடயங்கள் இக்கலவரத்தில் அழிக்கப்பட்டதாக கூறுவது; 2) இந்த கலவர சம்பவத்தை சாக்காக கொண்டு போராட்டத்தை ஒடுக்குவது; 3) பள்ளி மீதான வன்முறையை பிரதான பேசுபொருளாக மாற்றி ஸ்ரீமதி கொலையை திசை திருப்புவது; 4) எரிக்கப்பட்ட பள்ளி வாகனங்களுக்கு காப்பீடு பெறுவது போன்ற ஈனத்தனமான சதிதிட்டங்களை பள்ளி நிர்வாகமும் திமுக அரசும் கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றியுள்ளன. போராடும் மக்கள், ஜனநாயக சக்திகளை வன்முறையாளர்களாக சித்தரித்து அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமான பாசிச அடக்குமுறையை திமுக அரசு ஏவியது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், சிறார்களை வீடுவீடாக தேடிச் சென்று பொய் வழக்கில் கைது செய்துள்ளது. இது தூத்துக்குடியில் எடப்பாடி கும்பல் நிகழ்த்திய நரவேட்டைக்கு ஒப்பானதாகும். திமுக ஆட்சிக்கு வந்தால் மூச்சுவிடலாம் என்று கூறி திமுகவிற்கு வாக்கு கேட்ட மக்கள் அதிகாரம், பெரியார் திராவிட கழகத்தினரின் குரல்வளையை நெரித்துள்ளது திமுக அரசு. ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று போராடியதற்காக இவ்வமைப்பினரை கைது செய்துள்ளது. டிஜிபி சைலேந்திர பாபு பள்ளி நிர்வாகத்தின் ஊது குழலாக மாறி ஸ்ரீமதி தற்கொலையில் பள்ளி நிர்வாகத்தின் மீது தவறில்லை எனவும்; வன்முறையாளர்கள் மீது கடும் அடக்குமுறை ஏவப்படும் எனவும் ரௌடி கும்பலின் தலைவன் போல் மிரட்டினார். போராடியவர்களின் கைகளை முறித்து கழிவறையில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது காவல்துறை. உண்மையில் கலவரம் செய்த சங்பரிவார கூலிப்படைக்கும் கலவரத்தை வேடிக்கைப் பார்த்த காவலர்களுக்கும் கொங்கு திருமண மண்டபத்திலிருந்து பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது. ஸ்ரீமதியை படுகொலை செய்த - கையில் காண்டமுடன் திரியும் கிரிமினல்கள் கல்வி தந்தையாகவும், நீதி கேட்டுப் போராடியவர்கள் வன்முறையாளராகவும் திமுக அரசின் டிஜிபி சைலேந்திரபாபுவிற்கு தெரிகிறது. போராட்டம் வெடித்த பிறகே கண்துடைப்பிற்கு பள்ளி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை பள்ளி உரிமையாளர், முதல்வர், தாளாளர் மற்றும் இவர்களது மகன்கள் விசாரிக்கப்படவே இல்லை. 

திமுக அரசின் - சங்பரிவாரத்தின் ஏவல் மன்றமாக உயர்நீதிமன்றம் மாறி பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்ததே ஒழிய ஸ்ரீமதியின் மரணம் குறித்து கவலைப்படவில்லை. மேலும் உடலை வாங்கும்படி பெற்றோரை ரௌடி போல மிரட்டியது உயர்நீதிமன்றம். இரண்டாவது பிரேதப் பரிசோதனையின் போது எங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை கூட உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பள்ளி உரிமையாளர், மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள் ஆவர். ஆகவேதான், பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடன் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதறியடித்து ஓடி பள்ளி நிர்வாகிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். பள்ளியைத் தொடர்ந்து நடத்த திமுக அரசு உதவி செய்யும் என பள்ளி முதலாளிகளுக்கு வாலாட்டுகிறார். ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோரை அவர் சந்திக்க தயாரில்லை. ஒரு உயிர் போனதற்காக பள்ளியை எவ்வாறு சேதப்படுத்தலாம்? என்றுக் கூறி அதிகாரத் திமிரில் ஆர்எஸ்எஸ் கல்வி விபச்சார முதலாளிக்கு 'மாமா' வேலை பார்க்கிறார். பள்ளியிடமிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களை திரும்ப ஒப்படைக்குமாறு அப்பகுதிகளில் 'தண்டோரா' போடுகிறது திமுக அரசு. ஈனத்தனமாக ஆர்.எஸ்.எஸ் கல்வி முதலாளிகளின் அடிவருடியாக செயல்படுகிறது திராவிட மாடல் அரசு. ஸ்ரீமதி மரணம் பற்றி வாய் திறக்காமல், பள்ளியின் மீது நடந்த தாக்குதலை கண்டித்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கம் அறிக்கை விட்டது. இச்சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் ஆர்.எஸ்.எஸ்க்கு நெருக்கமாக உள்ளனர். சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சாஹா பயிற்சி நடைபெற்று வருகிறது. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, திமுக அரசு பள்ளிகளை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்றப்படும் என்றும் பள்ளியில் ஏற்படும் சேதாரங்களுக்கு இனிமேல் பெற்றோரே பொறுப்பு எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டாவது பிரேதப் பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர்களை அனுமதிக்க வேண்டும் என்று பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்க மறுத்து அவர்களை மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு விரட்டியடித்தது. இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்குமாறு உயர்நீதி மன்றம் பெற்றோரை மிரட்டியது. உடலை வாங்காத பட்சத்தில் அரசே புதைத்துவிடும் எனவும் அச்சுறுத்தியது. இறுதியில் வேறுவழியின்றி இறந்து போன மகளின் முகத்தையாவது கடைசியாக பார்க்கலாம் என்று கருதி பெற்றோரும் உறவினரும் அதற்கு சம்மதித்தனர். தன் நிறுவனத்தில் படிக்க வந்த குழந்தையை பலாத்காரம் மற்றும் படுகொலை செய்து 23.07.2022 அன்று திமுக அரசின் துணையோடு புத்தகங்களோடு புதைத்துவிட்டது பள்ளி நிர்வாகம். இப்பள்ளியின் உரிமையாளர், தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளோடு மட்டுமின்றி எடப்பாடி கும்பலுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகின்றனர். எடப்பாடியும் பள்ளி நிர்வாகிகளும் கவுண்டர் சாதியைச் சார்ந்த முதலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவேதான் எடப்பாடி கும்பல் இது குறித்து வாய் திறக்கவில்லை. லாவண்யா மரணத்தை வைத்து பிணந்தின்னி அரசியல் செய்த அண்ணாமலை, எச்சை ராஜா, வானதி சீனிவாசன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட காவிக் கழிசடை கிரிமினல்  கும்பல் ஸ்ரீமதி படுகொலை குறித்து வாய் திறக்காமல் பள்ளி உரிமையாளர் வீட்டில் எச்சில் இலை பொறுக்குகின்றது. திமுக அரசு, பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் மற்றும் அதிமுக மூன்று கும்பலும் ஒன்று சேர்ந்து நீதி கேட்டு போராடியவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து கொலையை தற்கொலையாக மாற்றிவிட்டன. மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் என்ற பொய் பிரச்சாரத்தை மத்திய உளவுத்துறையும், மாநில உளவுத்துறையும், தமிழ் இந்து போன்ற பாஜக ஊதுகுழல் பத்திரிக்கைகள் மூலம் பரப்பி வருகின்றன. மாணவர்களும் பொதுமக்களும் சாதி கடந்து வர்க்க ரீதியாக போராடினர். ஆனால் அதை கொங்கு வெள்ளாள கவுண்டர் மற்றும் முக்குலத்தோருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்குமிடையில் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் சாதியப் பிரச்சனையாக மாற்றும் அயோக்கியத்தனமான முயற்சியில் பாஜகவும் திமுக அரசும் ஈடுபட்டுள்ளன.

கல்வி நிறுவனப் படுகொலைகள் தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசும், மாநில திமுக அரசும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டே 'தேசபக்தி', 'திராவிட மாடல்எனும் மோசடி வார்த்தைகளில் மக்களை ஏமாற்றுகின்றன. உ.பியில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அரசு பயங்கரவாதத்தையும் பாலியல் வன்முறைகளையும் தற்போது திமுக அரசும் நிகழ்த்துகிறது. அரசு எந்திரம், கல்வி நிறுவனங்களில் ஊடுருவியுள்ள காவி காடையர்களை களையெடுக்க வக்கற்ற அரசாக திமுக அரசு உள்ளது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலுடனான திமுக அரசின் கள்ளக்காதலை இச்சம்பவம் வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளது. ஸ்ரீமதியை மண்ணில் புதைத்த கையோடு மோடி மற்றும் யோகி ஆதித்நாத் கும்பலை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கு வரவேற்கச் சென்று விட்டார் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சிக்கு வந்த மோடியின் பெருந்தன்மை குறித்து வெட்கமின்றி புகழ்கிறார். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் "பெருமைமிக்க இந்திய பிரதமரிடம் பட்டம் வாங்குவதற்கு மாணவர்கள் பெருமைப்பட வேண்டும்" என்று கூறுகிறார். எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது மோடியை பாசிஸ்ட் என்று வாய்ச்சவடால் அடித்த மு.க.ஸ்டாலின் தற்போது மோடிக்கு புகழ்மாலை சூட்டுகிறார்.  ஸ்ரீமதி  படுகொலைக்கு நீதி கேட்ட மஜஇக உள்ளிட்ட அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கிறார். ஸ்ரீமதி படுகொலைக்கு காரணம் திமுக அல்ல; பாஜக மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி (திமுக அரசின் பெயரைக்கூட உச்சரிக்க வக்கில்லை) என்று கூறி, திமுக ஆட்சிக்கு காவடித் தூக்கும் மக்கள் அதிகாரம் (ராஜூ-மருதையன் அணி), தமிழ்தேச மக்கள் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் கூட அனுமதி மறுக்கிறார். சில சிவப்புச் சட்டை உடன்பிறப்புகள் ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராடுவதற்கு கூட திராணியில்லாமல் எலும்புத் துண்டுகளுக்காக அறிவாலயத்தின் வாயிலில் காத்துக் கிடக்கின்றனர்.  ஆனால், பாஜக-திமுகவின் கள்ளக்காதல் அம்பலப்பட்ட பிறகும் கூட இந்த அறிவாலயத்தின் செல்லப் பிராணிகள் திமுக அரசின் கால்களை நக்கும் திருப்பணியை கைவிடத் தயாரில்லை. ஆர்.எஸ்.எஸ் கல்வி முதலாளிகளுக்கு திமுக அரசு மாமா வேலை பார்க்க, இவர்கள் திமுக அரசிற்கு மாமா வேலை பார்க்கின்றனர். மு.க.ஸ்டாலினின் உடல் முழுவதும் படிந்துள்ள ஸ்ரீமதியின் ரத்தத்தை சுத்தம் செய்யும் ஒப்பனையாளர்களாக மாறியுள்ளனர். இச்சம்பவமே திமுக ஆட்சியை கவிழ்க்க பாஜக செய்யும் சதி என்று கூறி திமுகவின் பாஜக அடிவருடித்தனத்திற்கு கரசேவை செய்கின்றனர். தேர்தலுக்கு முன்பு திமுகதான் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்தும்; திமுக சர்க்கார் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி சர்க்காரக விளங்கும் என்று கூறியவர்கள், இன்று காவல்துறை முழுவதிலும் சங்பரிவாரங்கள் ஊடுருவி விட்டன என்றும் திமுக அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் திமுக ஆட்சியை பாசிச பாஜக ஆட்சியிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இவ்வாறு தமிழக மக்களுக்கு அப்பட்டமாக துரோகமிழைக்கின்றனர்.     

சக்தி பள்ளியை அரசே நடத்தக் கோரியும், ஸ்ரீமதியை வன்புணர்ந்து படுகொலை செய்த கும்பலை கைது செய்யக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்க கோரியும், ஸ்ரீமதி கொலையை தற்கொலையாக மாற்றும் திமுக - பாஜக - அதிமுக, நீதிமன்றம்-சிபிசிஐடி போன்றவற்றின் கூட்டுச் சதிகளை அம்பலப்படுத்தவும் மக்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையெனில் இன்று ஸ்ரீமதிக்கு நேர்ந்த கொடுமை நாளை நம் வீட்டு பிள்ளைகளுக்கும் நேரும் என்பது உறுதி.  

சமரன், ஜூன் – ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து