செப்டம்பர் - 12 தியாகிகள் நாள் - மஜஇக நினைவேந்தல் நிகழ்ச்சி
செப்டம்பர் - 12 தியாகிகள் நாள் - மஜஇக நினைவேந்தல் நிகழ்ச்சி
தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டகையில் அமைந்துள்ள தோழர்கள் அப்பு மற்றும் பாலன் சிலைக்கருகில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர்
அப்பு-பாலன் நினைவு நீடூழி வாழ்க!
செப்டம்பர் - 12 தியாகிகள் நாள் - பாசிச எதிர்ப்பு நாள்!!
மோடி ஆட்சியை தூக்கியெறிய போராடுவோம்!!!
என்ற முழக்கத்தின் கீழ் நினைவேநதல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து நேற்று சிறப்பாக நடத்தினர்.
காலை 11மணியளவில் அப்பகுதியில் கழகத்தின் முன்னணி தோழர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் அணிதிரண்டனர்.
1கி.மீ. தொலைவிலிருந்து ஊர்வலமாக அணிவகுத்த தோழர்கள் தியாகிகள்தின சபதமேற்கும்விதமான முழக்கங்களை எழுச்சியுடன் முழங்கினர்.
https://m.facebook.com/story.php?story_fbid=167109806420822&id=100004897566109&mibextid=Nif5oz
அப்பு பாலன் சிலையை அடைந்தவுடன், மாநில அமைப்பாளர் தோழர். மாயகண்ணன் மற்றும் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தோழர். ஆறுமுகம் இருவரும் தியாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர் மாயகண்ணன் தலைமை உரையாற்றினார்.
அதன் பின்னர் சேலம் மாவட்ட அமைப்பாளர் தோழர். சோமு. கழகத்தின் கொடியினை ஏற்றி நினைவேந்தல் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து மஜஇக வழக்கறிஞர் தோழர். சேல்முருகன் நினைவேந்தல் உரையாற்றினார்.
கலைக்குழு தோழர்கள் கழகத்தின் பாடல்களை பாடி எழுச்சியூட்டினர்.
இறுதியாக, தருமபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர். சின்னவன் நன்றியுரை ஆற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.
- செந்தளம் செய்திப்பரிவு
(மேலுள்ள முகநூல் இணைப்புகளில் காணொளிகளை பார்க்கலாம்)