தமிழகத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி உதயம்

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த போராட்டத்திற்கு அழைப்பு!

தமிழகத்தில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி உதயம்

தமிழகத்தில் ஜனநாயக சக்திகள் என்ற அடிப்படையில் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி அமைத்து பாஜக அரசின் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைகளை வீழ்த்த  தமிழக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். சுமார் 20க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.

இக்கூட்டமைப்பின் சார்பாக வரும் ஜூலை 16ந் தேதி சனிக்கிழமை காலை  10 மணிக்கு சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளனர்.

கீழ்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் பிரசுரங்களை விநியோகித்து மக்களிடையே பாசிச பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

  • ஆர்.எஸ்.எஸ் ஆளுநர் ஆர்.என்.ரவியே வெளியேறு! போட்டி அரசாங்கத்தை நடத்தாதே!

     ஆளுநர் முறையை ஒழிக்கப் போராடுவோம்!

  • ஒன்றிய அரசே! ஜி.எஸ்.டி வரி முறையை ரத்து செய்! மாநில அரசுகளின் வரி அதிகார உரிமையைப் பறிக்காதே!
  • பாசிச பஜக ஆட்சியை வீழ்த்துவோம்!

இடது, ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவோம்!