ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்

ஆளுநர் முறையே ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை!

ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்
ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்திலிருந்து வெளியேற கோரி பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக சனிக்கிழமை காலை 10 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் போராட்டம் நடைப்பெற்றது. இதில் பல ஜனநாயக அமைப்பு தலைவர்களும், அணிகளும் கலந்துகொண்டனர்.

தமிழக ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளராக இருந்து அந்த அமைப்பை தமிழகத்தில் வலுப்படுத்த முயல்வதாகவும், திமுகவிற்கு எதிராகவும் மத்திய அரசு சார்பாகவும் நின்று போட்டி அரசாங்கம் நடத்துவதாகவும், திமுக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் அளிக்காமல் செயல்படுத்த விடாமல் தடுப்பதாகவும், மாணவர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நச்சுக் கொள்கைகளை பரப்புவதாக கண்டித்து முழக்கமிட்டனர்.

ஜி.எஸ்.டி போன்ற வரி விதிப்புகள் மக்களை கடுமையாக பாதித்து வருவதாகவும், பல்வேறு தரப்பு மக்களையும், உழைக்கும் சக்திகளையும் பெரிதும் பாதிப்பதாக கூறியும், இந்திய அரசு மாநில அரசுகளின் வரிக்கொள்கையையும், வரி வருவாயையும் தட்டி பறித்து மாநிலங்களின் உரிமையையும், சுயேட்சை பாத்திரத்தையும் ஒழித்து வருவதாக கூறி கண்டித்து முழங்கினர்.

இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று முழக்கமிட்டனர். பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பாலன் தலைமையில் நடைப்பெற்ற இப்போராட்டத்தில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் அதிகாரம், தமிழக மக்கள் புரட்சி கழகம், தமிழ்தேச மக்கள் முன்னணி போன்ற அமைப்புகளின் அணிகள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.