அரசு தனியார் பங்கேற்பு மாடல்தான் திராவிட மாடல்
தமிழில்: விஜயன்

அரசுத் - தனியார் பங்கேற்பு மாடல் வழியாக நடுத்தரமான, பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் துணிந்துள்ளது
இந்த மாடல் மூலமாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் வெற்றியடைந்திருக்கிறது என்று தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின்(TNIDB) தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருக்கிறார். தமிழகத்திற்கான உள்கட்டமைப்பு திட்ட உருவாக்கத்தின் மையப் புள்ளியாக இந்த வாரியம் செயல்பட்டு வருகிறது.
அரசுத் – தனியார் பங்கேற்பு மாடலின்கீழ் செயல்படுத்தப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை இதற்கு உதாரணமாக கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்த முணையத்தின் அன்றாட நிர்வாகம் உட்பட, பேணிப் பராமரிப்பது வரை அனைத்து பொறுப்புகளும் சலுகைப் பெறுபவராக(concessionaire) அடையாளங் காணப்பட்ட ஒற்றைத் தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) ஒப்படைத்துள்ளது. இதன் மூலமாக CMDA குழுமத்திற்கு 2.4 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் நடுத்தரமான, பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை அரசுத் - தனியார் பங்கேற்பு மாடல் வழியாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் துணிந்துள்ளது. உள்கட்டமைப்பு திட்ட உருவாக்கத்தின் மையப் புள்ளியாக தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் செயல்பட்டு வருகிறது.
“அரசுத்–தனியார் பங்கேற்பு மாடலின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முதல்நிலையிலேயே வெற்றிகரமாக செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது,” என்று TNIDBயின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் பூஜா குல்கர்னி தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து முணையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த முணையத்தின் அன்றாட நிர்வாகம் உட்பட, பேணிப் பராமரிப்பது வரை அனைத்து பொறுப்புகளும் சலுகைப் பெறுபவராக(concessionaire) அடையாளங் காணப்பட்ட ஒற்றைத் தனியார் நிறுவனத்திடம் 15 ஆண்டுகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(CMDA) ஒப்படைத்துள்ளது. இதன் மூலமாக CMDA குழுமத்திற்கு 2.4 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“கரூர், ஈரோடு, ஒசூர் உட்பட மற்ற இடங்களிலிருக்கும் ஐந்து பழைய பேருந்து நிலையங்களை வணிக நோக்கில் மேம்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறோம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வும் மேற்கொள்ளப்படும்..,” என்றார் பூஜா குல்கர்னி.
அவர் கூற்றுப்படி, பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் போன்றவற்றை அமைக்கும் திட்டங்களுக்குகூட அரசுத்–தனியார் பங்கேற்பு மாடல் வழியாக ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பிற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகளை அமைப்பதற்கு, இடங்களை தெரிவுசெய்யும் பணிகளும் நடந்து வருகிறன. தங்குதடையற்ற தண்ணீர் வழங்குவதற்கான திட்டங்களிலும் அரசுத்–தனியார் பங்கேற்பு மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது, கோயம்புத்தூரில், இதுபோன்றதொரு திட்டம் செயல்பட்டு வருகிறது. சேலம் மாநகரத்திலும் இதுபோன்று தண்ணீர் வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி TNIDB திட்டமிட்டு வருகிறது. கட்டண வீதங்கள் நகராட்சி அமைப்புகளால் தீர்மானிக்கப்படுகிற நிலையில், மேம்பாடு, நிர்வாகம், பராமரிப்பு போன்ற பணிகளெல்லாம் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்படும்.
அரசுத்–தனியார் பங்கேற்பு மாடல் வழியாகவே கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தாம்பரம், சேலம் போன்ற பகுதிகளில் உயிரி சிஎன்ஜி ஆலைகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது. இவைத்தவிர, சென்னையில் கழிவுகளிலிருந்து ஆற்றலை உருவாக்கும் திட்டங்களுக்கு ஏலம் விடுவது பற்றி ஆராய்ந்து வருவதோடு, இதே போன்ற திட்டங்கள் பிற நகரங்களிலும் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களையும்கூட அரசுத்–தனியார் பங்கேற்பு மாடல் வழியாகவே கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகிறோம். 4,000 கோடி முதல் 5,000 கோடி அளவில் நீர்மின்தேக்கம் மற்றும் மின்கலம் வழி மின் தேக்கத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு விரைவில் ஏல அறிவிப்பு வெளியிடப்படும், என்றார் பூஜா குல்கர்னி.
20 கோடி மதிப்பிலான உயிரி–சிஎன்ஜி ஆலைகள் அமைத்தல் போன்ற சிறிய திட்டங்களுடன், விமான நிலையங்கள், நீர்மின்சார தேக்க வசதிகள் போன்று பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் அரசுத்–தனியார் பங்கேற்பு மாடல் வழியாக செயல்படுத்துவதென்பது 1 டிரில்லியன் டாலர் தமிழ்நாடு ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்ட செயல்திட்டத்திற்கும், சமீபத்தில் வெளியாகியுள்ள அரசுத்–தனியார் பங்கேற்பு கொள்கைக்கும் சேவை செய்வதாகவே அமைகிறது. “பொதுவான செயல் திட்டமும், திசை வழியையும் உருவாக்குவதற்கு” போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தை தமிழ்நாடு அரசாங்கம் தேர்வு செய்துள்ளது. 1 டிரில்லியன் டாலர் கனவை அடைவதற்கு மிக மிக முக்கியமானதாக இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மாநில பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக இருக்கின்றன என்று 2024ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்கு நவீன, தாங்குதிறன் கொண்ட, வளங்குன்றா உள்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதே முதன்மையானது. பொருளாதார வளர்ச்சிக்கு சேவை செய்யும் வகையில், திட்ட அளவில் பெரிதாகவும், செயல்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கும் உள்கட்டமைப்பு முதலீடுகளை முன்கூட்டியே திட்டமிடுவது இன்றியமையாத விசயம் என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மேலும் துடிப்போடு செயல்பட வைப்பதற்கு, எரிசக்தி, போக்குவரத்து, நீர், சுகாதாரம், வீட்டு வசதி போன்ற துறைகளில் அரசின் தங்குதடையற்ற முதலீடு அவசியமாகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காத எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவது, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது, தாங்குதிறன், கழிவு மேலாண்மை, சிறப்பான நீர் பயன்பாடு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடிய நகர்மய திட்டமிடலுக்கான உத்திகளை பயன்படுத்தலாம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழகத்தின் உள்கட்டமைப்புத் துறையில் தனியார் முதலீடு சொற்ப அளவில்தான் இருந்துள்ளது. மாநில அரசின் அரசுத்–தனியார் பங்கேற்பு கொள்கையின்படி, அரசாங்கத்துடன் நிலையான நீண்ட கால ஒப்பந்தங்கள் செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வலுவான, முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: The Hindu