பாசிச சட்டங்களுக்கு எதிராக மஜஇக பிரச்சாரம்

செந்தளம் செய்திப் பிரிவு

பாசிச சட்டங்களுக்கு எதிராக மஜஇக பிரச்சாரம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் SDPI நிர்வாகிகளை ஊபாவில் கைது செய்திருப்பதை கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் மேலே உள்ள பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள முழக்கங்கள் பின்வருமாறு: 

எஸ்.டி.பி.ஐ, பி.எப்.ஐ. கட்சி அலுவலகங்களில் என்.ஐ.ஏ-வை ஏவி அச்சுறுத்தும் மோடி ஆட்சி ஒழிக!

ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆட்சியை எதிர்க்கும் ஜனநாயக அமைப்புகளை அச்சுறுத்தவும், தடை செய்யவும் சோதனை நடத்தும் என்.ஐ.ஏவை கலைக்கப் போராடுவோம்!

பாஜக கொண்டு வந்த என்.ஐ.ஏ சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரித்த காங்கிரசு திமுகவின் பாஜக எதிர்ப்பு நாடகத்தை அம்பலப்படுத்துவோம்!

'தி.மு.க அரசே! சென்னை என்.ஐ.ஏ. அலுவலகத்தை இழுத்து மூட நடவடிக்கை எடு!

ஊபா, என்.ஐ.ஏ, நீதிமன்ற அவமதிப்பு சட்டம் உள்ளிட்ட பாசிச சட்டங்கள் அனைத்தையும் திரும்பப் பெறப் போராடுவோம்!

அதேப்போல் கடந்தவாரம், நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜீத்   மீதான சக்தி பள்ளி காவிக் குண்டர்களின்  கொலைவெறி தாக்குதலைக் கண்டித்தும் கீழ்கண்ட பிரசுரத்தை வெளியிட்டுள்ளனர் 

நக்கீரன் நிருபர் பிரகாஷ் மற்றும் அஜீத் மீதான சக்தி பள்ளி முதலாளிகளின் கொலைவெறித் தாக்குதலை கண்டிப்போம்!

நக்கீரன் நிருபர்களைத் தாக்கிய ஸ்ரீமதி கொலைக் குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்து கொலை போக்சோ வழக்கில் கைது செய்யப் போராடுவோம்!

கொலையாளிகளை விடுதலை செய்து நீதி கேட்போரை ஒடுக்கும் தி.மு.க அரசு -நீதி மன்றத்தின் கூட்டுப் பாசிசம் ஒழிக!

அடுத்ததாக வரும் அக்டோபர்-2 அன்று தமிழகத்தை ரத்தவெள்ளத்தில் ஆழ்த்தும் முயற்சியாகவும் மற்றொரு குஜராத் கலவரப் பகுதியாக மாற்றும் நோக்கிலும் நடத்தப்படவிருக்கும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஊர்வலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்திருப்பதை கண்டித்து கீழ்கண்ட பிரசுரத்தை வெளியிட்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்

அப்பிரசுரத்தில் கீழ்கண்ட முழக்கங்கள் இடம் பெற்றுள்ளன: 

தமிழக மக்களே ! தமிழகத்தை குஜராத்தாக  மாற்றுவதற்கான  ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலத்தை முறியடிக்க கிளர்ந்தெழுவோம் ! 

காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்  பயங்கரவாத அமைப்பை  ஜனநாயக அமைப்பாக காட்டுவதற்கே   காந்தி ஜெயந்தி   ஊர்வலம் -  அணிவகுப்பு!

ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலின்  இந்துத்துவ பாசிசத்திற்கு களம் அமைத்து கொடுக்கும்  தி.மு.க அரசு - நீதி மன்றத்தின்   "கரசேவையை " முறியடிப்போம் ! 

இரகசிய ஆயுதப் பயிற்சிகள் மூலம் குஜராத் - டெல்லி மாடல்  கலவரங்களை நாடெங்கும்   கட்டியமைக்கும் பாசிச  ஆர்.எஸ்.எஸ்ஐ   ஜன நாயகப்படுத்த முயலும்  மோடி - மு.க.ஸ்டாலின் அரசுகளின் கூட்டுச் சதிகளை  முறியடிப்போம் ! 

இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கார்ப்பரேட் ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கும்   ஆர்.எஸ்.எஸ் - பாஜக  தலைமையிலான சங் பரிவாரங்களை தடை செய்யப் போராடுவோம் !

மேலும் வருகிற 30.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில், மாவட்ட அமைப்பாளர் தோழர். சசிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டுமிட்டுள்ளனர். நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:

தலைமை: 

தோழர் சசிகுமார் - கடலூர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்

கண்டன உரை:

தோழர். மாயகண்ணன், மாநில அமைப்பாளர், மஜஇக

தோழர் சேல்முருகன் வழக்கறிஞர் உ.நீ.ம சென்னை, மஜஇக

தோழர் சோமு சேலம் மாவட்ட அமைப்பாளர், மஜஇக

தோழர் சின்னவன் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர், மஜஇக

தோழர் குணாளன் வேலூர் மாவட்ட அமைப்பாளர், மஜஇக

தோழர். ராமலிங்கம், கடலூர் மாவட்ட இணை செயலாளர், மக்கள் அதிகாரம்

தோழர் மணிவண்ணன் வழக்கறிஞர் சிதம்பரம், மஜஇக

தோழர் சதாசிவம் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர், மஜஇக

தோழர் ஆறுமுகம் ஈரோடு மாவட்ட அமைப்பாளர், மஜஇக

தோழர் சரவணன் சென்னை செங்கை மாவட்ட அமைப்பாளர், மஜஇக

நன்றியுரை: 

தோழர் மணிவேல் தஞ்சை அரியலூர் மாவட்ட அமைப்பாளர், மஜஇக

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தமிழ்நாடு

- செந்தளம் செய்திப் பிரிவு