மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து மஜஇக பிரச்சாரம்
கார்ப்பரேட்டுகள், சங்பரிவாரங்களுக்கு கொத்தடிமைகளையும் கூலிப்படைகளையும் உருவாக்குவதற்கே அக்னிபாதை திட்டம்
கார்ப்பரேட்டுகள், சங்பரிவாரங்களுக்கு கொத்தடிமைகளையும் கூலிப்படைகளையும் உருவாக்குவதற்கே அக்னிபாதை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறி, அதை முறியடிக்க மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கீழ்கண்ட முழக்கங்களை மஜஇக பிரசுரமாக வெளியிட்டுள்ளனர்.
- பாதுகாப்புத் துறையில் நிரந்தரப் பணியை ஒழிப்பதன் மூலம் இராணுவச் செல்வினங்களைக் குறைத்து கார்ப்பரேட் ஆதிக்கத்தை அதிகரிக்கவே அக்னிபத் திட்டம்!
- நாட்டை இராணுவமயமாக்குதல், இராணுவத்தை இந்துத்துவ மயமாக்குதல் எனும் ஆர்.எஸ்.எஸ் திட்டமே அக்னிபத் திட்டம்!
- அமெரிக்க மேலாதிக்க போருக்கும், இஸ்லாமியர்களை படுகொலை செய்வதற்கும் கூலிப் படையை உருவாக்கும் அக்னிபத் திட்டத்தை எதிர்ப்போம்!
- இந்திய இராணுவத்தை அமெரிக்காவின் ஏவல்படையாக மாற்றும் இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களை எதிர்ப்போம்!
- மோடி கும்பலே! குவாட்டிலிருந்து வெளியேறு! ஆக்கஸ் கூட்டமைப்பை ஆதரிக்காதே!
- கார்ப்பரேட்டுகளுக்கு இராணுவத்தை தாரை வார்க்காதே! அமைதி காலங்களில் சுதேசிய உற்பத்தியில் இராணுவத்தை ஈடுபடுத்து!
- மோடி கும்பலின் விதேசிய இராணுவக் கொள்கைகளை எதிர்ப்போம்! அணி சேராக் கொள்கையின் அடிப்படையில் சுதேசிய இராணுவ கொள்கைக்காகப் போராடுவோம்!