மஜஇக மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கார்ப்பரேட் ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக தலைமையிலான சங் பரிவாரங்களை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மஜஇக மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது

தமிழகத்தை கலவர பூமியாகவும்  ரத்தக்காடாகவும்  மாற்ற முயலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தடை செய்யக் கோரியும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரங்களை தடை செய்யக் கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தடுத்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தோழர்களையும் பொதுமக்களையும் திமுக அரசு கைது செய்துள்ளது. அதை கண்டித்து மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் முகநூல் பக்கத்தில் நேரலை வீடியோவும் பதிவும் வெளியிட்டுள்ளனர். 

#மஜஇக_மற்றும்_மக்கள்_அதிகாரம்_தோழர்கள்_கைது

தமிழக மக்களே ! தமிழகத்தை குஜராத்தாக  மாற்றுவதற்கான  ஆர்.எஸ்.எஸ்  ஊர்வலத்தை முறியடிக்க கிளர்ந்தெழுவோம் ! 

இந்து ராஜ்ஜியத்தின் பேரில் கார்ப்பரேட் ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்கும்   ஆர்.எஸ்.எஸ் - பாஜக  தலைமையிலான சங் பரிவாரங்களை தடை செய்யப் போராடுவோம் !

கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்களை திமுக அரசு கைது செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் - பாஜக கும்பலுக்கு கரச்சேவை செய்யும் திமுக அரசு- நீதிமன்றம், போராடும் ஜனநாயக அமைப்புகளின் கருத்துரிமையை பறித்து போலீஸ் ராஜ்ஜியத்தை ஏவுகிறது. ஆர்ப்பாட்டத்தை பார்வையிட்ட பொதுமக்களில் சிலரையும் தாக்குதல் தொடுத்து கைது செய்துள்ளது. காவல்நிலையத்தில் வைத்து மிரட்டியுள்ளது.

திமுக அரசே! காவல்துறையே!

கைது செய்த தோழர்களையும், பொதுமக்களையும் உடனடியாக விடுதலை செய்!

https://www.facebook.com/100004897566109/posts/2248997175273513/?flite=scwspnss&mibextid=XkA9XveD0YXQHGf0

நேரலை இணைப்பு 

https://www.facebook.com/makkaljananayaga.ilaignarkazhagam/videos/3369564263363292/?app=fbl

முகநூல் பக்கத்திற்கு செல்ல மேற்கண்ட இணைப்புகளை சொடுக்கவும்

- செந்தளம் செய்திப் பிரிவு