கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு காரணமானவர்களை தமிழக அரசு காப்பாற்ற முயற்சிப்பதாக கண்டித்து பிரச்சாரம்
வன்புணர்ந்து கொலை செய்த கும்பலை பாதுகாக்கிறது தமிழக அரசு!
கள்ளக்குறிச்சி அருகிலுள்ள சின்னசேலம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேசன் - தனியார் உறைவிட பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் பள்ளியிலேயே மரணமடைந்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் கொடுத்த புகாரில் அடுத்த சில நாட்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினாலும், இதுபோன்று ஏற்கனவே அந்த பள்ளியின் மீது பல குற்றச்சாட்டுகளின் காரணமாக சுற்று வட்டார மக்கள் கிளர்ந்தெழுந்ததால் பெரும் கலவரமாக வெடித்தது.
இப்பிரச்சனையில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளிகளை தமிழக அரசு கைது செய்யாமல் பாதுகாக்க எத்தனிப்பதாகவும் கூறியுள்ளது.
அப்பள்ளியின் தாளாளர் சங்பரிவார அமைப்பில் இயங்கி வருவதாகவும், இந்த மரணத்தில் தாளாளரையும் அவரது மகனையும் கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அம்மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்து பொய் வழக்குகளை போட்டு திமுக அரசு கைது செய்துள்ளதை வன்மையாக கண்டித்துள்ளது. போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது பாசிச அடக்குமுறையை திமுக அரசு ஏவுவதாகவும் கூறி கைதுசெய்யப்பட்ட மக்களையும், ஜனநாயக சக்திகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும், போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறும் கோரியுள்ளனர்.
உலகமயக் கொள்கையின் தொடர்ச்சியாக தனியார்மயக் கொள்கையின் விளைவாக கல்வியை தனியார்மய, கார்பரேட் மய ஆதிக்கத்தின் விளைவாகவே மாணவர்களின் தொடர் மரணங்கள் என்றும் அதனால் தனியார்மயத்தை ஒழித்து, கல்வி நிலையங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று முழங்கியுள்ளனர்.
மஜஇக முழக்கங்கள் கீழ்வருமாறு
திமுக அரசே!
- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியை வன்புணர்ந்து கொலை செய்த கும்பலை பாதுகாக்காதே! உடனே கைது செய்!
- சங்பரிவார கும்பலைச் சேர்ந்த தாளாளர், அவன் மகன் உள்ளிட்ட அனைத்து கயவர்களையும் கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய் ! சங்பரிவார கும்பலுக்கு வால் பிடிக்காதே!
- கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுதலை செய்! பொய் வழக்கை திரும்பப் பெறு!
- தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கு! தனியார்மயத்தை அமல்படுத்திக் கொண்டே சமூக நீதி நாடகமாடாதே!
- போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது பாசிச அடக்குமுறையை ஏவும் திமுக அரசை கண்டிப்போம்!
- அரசு எந்திரம், கல்வித்துறையில் ஊடுருவியுள்ள சங்பரிவார ஓநாய்களை களையெடுக்க வக்கற்ற திமுக அரசை எதிர்த்துப் போராடுவோம்!
- செந்தளம் செய்திப் பிரிவு