அமெரிக்க ஐரோப்பிய நிதியாதிக்க கும்பல்களுக்கும் அதானி அம்பானிக்கும் தமிழகத்தை காவு கொடுக்கும் திமுக அரசு

செந்தளம் செய்திப் பிரிவு

அமெரிக்க ஐரோப்பிய நிதியாதிக்க கும்பல்களுக்கும் அதானி அம்பானிக்கும்  தமிழகத்தை காவு கொடுக்கும் திமுக அரசு

ஜனவரி 7 ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியுள்ளது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. மத்திய பாஜக அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில், திமுக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. 

அவற்றுள்,

1. ரூ. 177 கோடி மதிப்பில் அமெரிக்க குவால்காம் நிறுவனத்தின் செமிகண்டக்டர் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம்

2. ரூ, 12, 082 கோடி மதிப்பில் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் உடனும் ரூ. 70, 800 கோடிக்கு டாட்டா பவர்ஸ் நிறுவனத்துடனும் 

3. ரூ. 5000 கோடி மதிப்பில் டிவிஎஸ் குழுமத்துடன்

4. ரூ. 1000 கோடியில் பெகட்ரோன் நிறுவனத்துடன் செங்கல்பட்டில் ஆலை அமைக்க ஒப்பந்தம்

5. ரூ. 16,000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்பு ஆலை அமைக்க ஒப்பந்தம்

6. ஹூண்டாய் நிறுவனத்துடன் - ரூ.6000 கோடியில் நீண்ட கால உத்திரவாதங்களுக்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடியுடன்  இணைந்து ஹைட்ரஜன் வள மையம் அமைக்க ரூ.1180 கோடியில் ஒப்பந்தம் மற்றும் ரூ.20000 கோடியில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஒப்பந்தம் 

7. ஏ.பி. மொல்லெர் மேர்ஸ்க் நிறுவனத்துடன் 

8. மிட்சுபிச்சி நிறுவனத்துடன் ரூ.200 கோடியில் கும்மிடிபூண்டியில் ஆலை அமைக்க ஒப்பந்தம்

9. ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனத்துடன் ரூ.12000 கோடியில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உருக்காலை அமைக்க ஒப்பந்தம்

10. கோத்ரேஜ் நிறுவனத்துடன் 515 கோடியில் செங்கல்பட்டில் ஆலை அமைக்க ஒப்பந்தம்

11. ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்துடன் 5600 கோடியில் காஞ்சிபுரத்தில் ஆலை அமைக்க ஒப்பந்தம்

12. அமெரிக்கா, அம்பானி நிறுவனம் மற்றும் கனடாவின் ப்ரூக்ஃபீல்ட் கூட்டில் தொடங்கவிருக்கும் தகவல் மையம் அமைப்பதற்கு 378 கோடியில் ஒப்பந்தம்

13. சில்லறை வர்த்தகத்தில் ரூ.25000 கோடியிலும், டெலிகாம் துறையில் ரூ.35000 கோடியிலும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் 

14. அதானி டோட்டல் ரூ.1,568 கோடிக்கும், அதானி கனெக்ஸ் ரூ.13,200 கோடிக்கும், அம்புஜா சிமெண்ட்ஸ் ரூ.3,500 கோடிக்கும், அதானி கிரீன் எனர்ஜி ரூ.24,500க்கும் ஒப்பந்தம்

என மொத்தம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பில் 630 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாக மாற்றியுள்ளது திமுக அரசு.

தொடர்புடைய கட்டுரை : குஜராத் மாடலும் திராவிட மாடலும் ஒன்றே!

மோடி அரசு அமெரிக்கா தலைமையில் இணைந்துள்ள குவாட் கூட்டமைப்பின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற மோசடி வார்த்தை முலாம் மூலம் சுதேசிய தொழிற் உற்பத்தியை ஒழித்து நாட்டின் வளங்களை நிதியாதிக்க கும்பல் சுரண்டி கொண்டு போக சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. அதற்கு தடையாக இருந்த சட்டங்கள் அனைத்தையும் மோடி கும்பலுடன் சேர்ந்து நிறைவேற்றிவிட்டு கொள்கைப் போராட்டம் நடத்துவதுபோல நாடகமாடுகிறது. கார்ப்பரேட் சேவையில் காவி மாடலுக்கு கருப்பு மாடல் எந்த வகையிலும் சளைத்ததில்லை என்பதை நிரூபித்துள்ளது.  

- செந்தளம் செய்திப் பிரிவு