நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜீத் மீது காவி கிரிமினல் கூட்டம் கொலைவெறி தாக்குதல்

ஸ்ரீமதி படுகொலையை மூடிமறைக்க துணைப் போகும் திமுக அரசு!

நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜீத் மீது காவி கிரிமினல் கூட்டம் கொலைவெறி தாக்குதல்

மாணவி ஸ்ரீமதியின் படுகொலையை மூடி மறைத்து திசைதிருப்ப சங்பரிவார கும்பலின் அடியாட்படையாக செயல்பட்ட கவுன்சிலர் ராஜசேகர் தலைமையிலான கூலிப்படையும் காவல் உளவுத்துறையும் கூட்டுச் சேர்ந்து பள்ளியில் கலவரத்தை தூண்டிவிட்டு அதை பேசுபொருளாக்கின.

உண்மையை வெளிக் கொண்டுவர பல்வேறு அமைப்புகளும் சில சிறிய ஊடக நிறுவனங்களும் கடுமையாக முயற்சித்தன. ஆங்காங்கே நீதிகேட்டு போராட்டங்களும் நடைபெற்றதையொட்டி ரவிக்குமார் உள்ளிட்ட சக்தி பள்ளி நிர்வாகிகளை கண்துடைப்பிற்காக கைது செய்திருந்தது.

சில நாட்களிலேயே அவர்களை பிணையிலும் விடுவித்தது நீதி மன்றம். அதோடு மட்டுமில்லாமல், விசாரணை முடியாத தறுவாயிலேயே படுகொலையை தற்கொலைதான் என்றுகூறி சங்பரிவார கூட்டத்திற்கு வாலாக மாறியது இந்த அநீதி மன்றம்.

தொடர்ச்சியாக உண்மைக்கு குரல் கொடுத்தவர்களை மிரட்டியும் அவர்கள் மீதும் வழக்குகளும் பதிந்து வருகிறது. ஆனால் இன்று வரை கைதுசெய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்கவில்லை.

சிறப்பு கட்டுரை: ஸ்ரீமதியைப் படுகொலை செய்த கல்வி காவி முதலாளிகளுக்கு வால் பிடிக்கும் திமுக அரசு

இந்த நிலையில் பிணையில் வெளிவந்த ரவிக்குமார் தனது கூலிப்படையை ஏவி நக்கீரன் நிருபர் பிரகாஷ் மீதும் புகைப்படக்காரர் அஜீத் மீதும் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. நக்கீரன் நிருபர் பிரகாஷ் இந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே உண்மையை வெளிக்கொண்டுவருவதில் விடாப்பிடியாக களத்தில் இறங்கி செய்திகள் சேகரித்தும் பேசியும் வந்தார். அதனாலே அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்த தாக்குதலில் இறங்கியுள்ளது இந்த காவி கிரிமினல் கூட்டம்.

ஆளும் திமுக அரசும் இந்த சங்பரிவாரக் கும்பல்களின் அராஜகங்களுக்குத் துணைப்போவதோடு தன் பங்கிற்கு அதுவும் பாசிச அராஜகத்தை ஜனநாயக சக்திகள் மீதும் பத்திரிக்கையாளர்கள் மீதும் ஏவி வருகிறது.  

நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜீத்தை தாக்கிய சக்தி பள்ளி காவி கிரிமினல் கூட்டத்தின் பிணையை நீக்கி விசாரணை முடியும் வரை சிறையிலடைக்க அனைத்து ஊடக நண்பர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். 

- செந்தளம் செய்திப் பிரிவு