த.வெ.க அரசிடம் மாஞ்சோலை மக்கள் கோரிக்கை!
செந்தளம் செய்திப்பிரிவு
மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பி.பி.டி.சி நிறுவன குத்தகை கால கெடு இன்னும் சில வருடங்கள் இருக்கும் நிலையில்,பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நலனிலிருந்து மலையிலிருந்து அம்மக்களை வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.ஆட்சியிலிருந்த தி.மு.க அரசும் இந்த விசயத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த முடியாது.மாஞ்சோலை மக்களை வன வாசிகளாக கருத முடியாது என்ற அடிப்படையிலான முந்தைய தமிழக அரசின் வாதத்தின் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புகளும் தொழிலாளர்களுக்கு பாதகமாகவே அமைந்தது.
எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்குரிமையும் பறிக்கப்பட்டு பெரும்பாலான மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் எஞ்சியிருப்போர் தங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முந்தைய தி.மு.க அரசு தங்களை முற்றாக கைகழுவிவிட்ட நிலையில் புதிதாக ஆட்சிபொறுப்பேற்றிருக்கும் த.வெ.க அரசிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாஞ்சோலை தொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்திடவும், தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் உள்ளிட்ட தொழிற்சங்க உரிமையுடன் மாஞ்சோலையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் சொந்த வீடு கட்டி தருவது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கையை த.வெ.க அரசாவது நிறைவேற்றுமா?
- செந்தளம் செய்திப்பிரிவு