தமிழ்தேசியம் திராவிடம் பற்றிய திருமாவளவனின் ஊசலாட்ட கருத்துக்கள்

செந்தளம் செய்திப்பிரிவு

தமிழ்தேசியம் திராவிடம் பற்றிய திருமாவளவனின் ஊசலாட்ட கருத்துக்கள்

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பா.ஜ.க ஆசியுடன் அ.தி.மு.க திமுக கூட்டணி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியமைக்க எடுத்த முயற்சி தோல்வி கண்டு, திருமாவளவனை  முதல்வராக ஏற்றுக்கொண்டு ஆட்சியமைப்பது என்ற நகர்வும் பழனிச்சாமியால் தகர்ந்து போனது.

வேறு வழியின்றி த.வெ.க ஆதரவு நிலையை தி.மு.க கூட்டணி கட்சிகள் எடுத்தன.வி.சி.க அமைச்சரவையில் பங்கேற்ற பின்பும் கூட இன்றுவரை "அமைச்சரவையில் இருக்கிறோம் ஆனால் நாங்கள் கூட்டணியில் இல்லை" என்ற நகைச்சுவை டயலாக்கை திருமா திரும்ப திரும்ப கூறிவருகிறார்.பணையூர் பாபு போன்றவர்களை தங்கள்பின்னால் திமுக இழுத்துக் கொண்டபோதும்.வி.சி.கவினரை மிகக்கேவலமாக தி.மு.க விமர்சித்தாலும் தி.மு.க மீதான அடிமை பாசம் திருமாவிடம் அப்படியே குறையாமால் இருக்கிறது.

தி.மு.க அதிமுக வின் சரிவிற்கு அக்கட்சிகளை சார்ந்தவர்களை விட இவரது கண்ணீர்தான் கரைபுரண்டோடுகிறது.நாளொரு வண்ணம் பொழுதுதொரு மேனியாக இவர் பேசிவரும் பேச்சுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சமிபத்தில் பேசிய திருமாவளவன் "தனித்தமிழ்நாடு கோரிய தமிழரசனின் தமிழ்தேசியத்தை நாம் முன்வைக்கவில்லை.பிரபாகரனின் தமிழீழ தமிழ் தேசியத்தை நாம் முன்வைக்கவில்லை.இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள கோட்பாட்டை உறுதிபாட்டை பாதுகாக்கின்ற இதற்கு உட்பட்டு மொழிவழி தேசிய இறையாண்மை,மாநில சுயாட்சி என்பதை பெற வேண்டும் என்பதைதான் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்மொழிகிறது".

என்று கூறி ஆளும்வர்க்கத்திற்கு தான் என்றும் எதிரானவர் அல்ல.அதன் எல்லைகளை மீறுபவரும் அல்ல,என்பதை தெளிவு படுத்தினார்.இப்படி பேச வேண்டிதன் அவசியம் என்ன என்று எழும் கேள்விக்கு அப்படிபட்ட அவசியம் அவருக்கு எழுந்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இந்திய நாடாளுமன்ற வாத கட்சிகள் எதனாலும் தமிழ் தேசிய  இனத்தின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட எந்த தேசிய இனத்திற்காகவும் போராடி வெற்றி பெற முடியாது என்ற போதிலும் திருமாவளவன், ஆளும் வர்க்கத்தையும் இந்திய ஆட்சிக்கட்டமைப்பையும் தான் என்றும் மீறாதவர் என்பதை உறுதிபடுத்தும் அதே நிலையில்,சீமான் உள்ளிட்டவர்கள் பேசும் தமிழ் தேசியத்தை விமர்சித்து பேசும் திருமாவளவன், தமிழ் தேசியம் என்பது தி.மு.க எதிர்ப்பாக குறுக்கப்பட்டு விட்டதாக அங்கலாய்க்கிறார்.தமிழீழ இன அழிப்புக்கு துணைபோன காங்கிரசு தி.மு.க கூட்டணியில் இன அழிப்பு கட்டத்திலும் துணைநின்றவர் என்பது இவரது வரலாறு.

இவரது அரசியல் சந்தர்ப்பவாதங்களால் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இவரிடமிருந்து விலகி இவரது கட்சி இன்று கரைந்து போயுள்ளது. தி.மு.கவின் ஊதுகுழலாக இருந்ததை பொறுக்காமல் குறிப்பாக இன்று த.வெ.கவில் பலர் இணைந்து விட்டனர்.

தேர்தலுக்கு பின்பாக இவரது பிம்பம் தகர்ந்தாலும் தனது அரசியல் பிழைப்புவாத நலனிலிருந்து பல்வேறு தக்கடி வித்தைகளை செய்து வருகிறார்.

தி.மு.க அதிமுக கூட்டணியில் முதல்வர் கனவு நொறுங்கி போனதால் "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே" என்ற விரக்தியில் வசப்பட்டிருந்தவர்.

இப்போது தி.மு.க சீமான் இருவருக்கும் இடையே பகை மூட்டும் வேலையை செய்து வருவதாக கூறுகிறார்கள்.

அரசியல் களத்தில் தனது இடம்  சீமானிடம் மாறிபோயுள்ளதாக கருதுபவர், சமீப காலமாக சீமானுடன் தி.மு.க காட்டும் நெருக்கம், பொது வேட்பாளராக சீமானை நிறுத்துவதற்கான காய் நகர்த்தல்களால் திரமாவளவன் அப்சட் ஆனதாக கூறப்படும் நிலையில், இப்படிபட்ட நகர்வுகள் நடந்தால் மற்றவர்களுக்கு தனது தேவை இல்லாத நிலை வந்துவிடும் என்பதால் அதை தடுக்கும் வேலையை அவர் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

எனவேதான் நாம் தமிழர் கட்சியை திமுக நெருங்கும் இந்த நேரத்தில், கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன் என்று சீமான் கூறியதை இப்போது பேசி திமுக மற்றும் சீமானுக்கு இடையே உரசலை ஏற்படுத்த நினைக்கிறார்.சீமான் பேசும் தமிழ்தேசியம் திராவிட எதிர்ப்பு கொண்டது, தி.மு.க எதிர்ப்பு கொண்டது என்றெல்லாம் பேசி வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

- செந்தளம் செய்திப்பிரிவு