அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிபிஐ

தமிழ் தினசரி

அரசு ஊழியர்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிபிஐ

நெருக்கடியான சூழலால் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை - இரா.முத்தரசன் கருத்து

நெருக்கடியான சூழல் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசால் அமல்படுத்த முடியவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநில அரசுக்கு, மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காத காரணத்தால், பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தையும் மாநில அரசே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை பேரிடர் ஏற்படும்போது தமிழகத்தை பார்வையிட குழுவை அனுப்பி வைக்கும் மத்திய அரசு, உரிய நிதி ஒதுக்கீட்டை வழங்குவதில்லை. இது போன்ற நெருக்கடியான சூழல் காரணமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசால் அமல்படுத்த முடியவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சினை எழுகிறது. ஆனால் சம்பவம் நடைபெற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணம் போதுமானதல்ல. ஏக்கருக்கு தமிழக அரசு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- தமிழ் தினசரி

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு