கள்ளக்குறிச்சி : பரபரப்பை உண்டாக்கிய மஜஇகவினரின் சுவரொட்டி

திமுக அரசே ! ஸ்ரீமதியை வன்புணர்ந்து படுகொலை செய்த கும்பலை உடனே கைது செய்! என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி

கள்ளக்குறிச்சி : பரபரப்பை உண்டாக்கிய மஜஇகவினரின் சுவரொட்டி

மாணவி ஶ்ரீமதியின் மர்ம மரணத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினரால் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வேப்பூர் பகுதிகளில் ஒட்டபட்டிருந்த சுவரொட்டி அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

திமுக அரசே!

ஸ்ரீமதியை வன்புணர்ந்து படுகொலை செய்த கும்பலை உடனே கைது செய்!

*சங்பரிவாரத்தைச் சேர்ந்த தாளாளர், அவன் மகன் உள்ளிட்ட அனைவரையும் கொலை மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்!! சங்பரிவாரங்களுக்கு வால் பிடிக்காதே!

* போராடும் மக்கள், ஜனநாயக சக்திகள் மீது போலீஸ் ராஜ்ஜியத்தை ஏவாதே!

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்!

* தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசுடமையாக்கு!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்-  தமிழ்நாடு 

என்ற வாசகங்களை அந்த சுவரொட்டிகள் தாங்கியிருந்தன. வேப்பூர் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொதுமக்களின் பார்வையில் காவல்துறையினர் கிழித்தெறிந்தது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

- செந்தளம் செய்திப் பிரிவு