தரங்கம்பாடி அருகே காதலர்கள் ஆணவப்படுகொலை..?

செந்தளம் செய்திப்பிரிவு

தரங்கம்பாடி அருகே காதலர்கள் ஆணவப்படுகொலை..?

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே , புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த காதல் ஜோடி துாக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுளனர். காதலர்களை பெண் வீட்டார் கொன்று விட்டதாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இரு வேறு சாதிகளை சேர்ந்த காதலர்கள் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்களாவர்.


தன்னை ஜாதியை சொல்லி திட்டி அடித்து விட்டதாக காதலியின் தகப்பனார் உள்ளிட்டோர் மீது தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த காதலன்  பார்த்திபன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்த நிலையில், அதனை தொடரந்து பெண்ணின் தந்தை தனது மகளைக் காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் காதலன் பார்த்திபனின் செல்போன் டவர் லொகேஷனை சோதனை செய்து அங்கு சென்று போலீசார் பார்த்தபோது காதலர்கள் இருவரும் துாக்கிட்ட நிலையில் சடலமாகி தொங்கியுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக இருவரது உடலையும் போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆணவப்படுகொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிவருவதை கண்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் .ஆணவப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

சாதி ஆணவப்படுகொலைக்கான தனிசட்டம் இயற்றாமல் "சமூகநீதி" தி.மு.க அரசு  ஏமாற்றிய நிலையில், ஆணவப்படுகொலைக்கான தனிசட்டம் இயற்றக்கோரி த.வெ.க அரசை நோக்கி கோரிக்கை வேகமாக எழுப்பப்படுகிறது.

செந்தளம் செய்திப்பிரிவு