ஸ்டாலினே என்னிடம் சொன்னார்.... போட்டு உடைத்த ஐ.யூ.எம்.எல். காதர் மொய்தீன்!

செந்தளம் செய்திப்பிரிவு

ஸ்டாலினே என்னிடம் சொன்னார்....  போட்டு உடைத்த ஐ.யூ.எம்.எல். காதர் மொய்தீன்!

கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்தகட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காத சூழலில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.கவை ஆட்சியமைக்க ஆளுனர் அர்லேக்கர் மறுத்து வந்தார்.ஆட்சியமைப்பதற்கான பெரும்பாண்மை த.வெ.கவிற்கு இல்லை என்று கூறிய ஆளுநர் பா.ஜ.க முன்னெடுப்பில் தி.மு.க அதிமுக ஆட்சியமைக்க இணைந்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததையும் அதற்காகவே த.வெ.க வை ஆட்சியமைக்க அழைக்காதது மட்டுமின்றி அதன் கோரிக்கையையும் நிராகரித்தார் என்பது பின்னர் வெளி வந்த விசயங்களிலிருந்து அறிய முடிந்தது.

ஆனால் பின்னர் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனை தொடர்ந்து வி.சி.க,ஐ.யூ.எம்.எல் என த.வெ.கவிற்கு ஆதரவளித்தமையால் த.வெ.க ஆட்சி அமையப்பெற்றது.திரைமறைவில் தி.மு.க அதிமுக கூட்டு பின்னடைவை சந்தித்தது.

இக்கூட்டினை பற்றி சிபிஎம் அகில இந்திய செயலாளர் பேபி முதன்முதலில் வாய் திறந்தார். இருப்பினும் தி.மு.க அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பது என்ற விசயம் பேசப்பட்டது,கூறப்பட்டது என்ற வகையிலேயே வி.சி.க இருகம்யூனிஸ்ட் கட்சிகள் தருப்பிலிருந்து மழுப்பலாகவே கூறப்பட்டு வந்தது.

தி.மு.க ராசா போன்றவர்கள் எங்கள் கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்களின் விருப்பமாக இருந்திருக்கலாம் என்றெல்லாம் கூறி மறைத்தனர்.இந்த விசயம் கூட்டணிகட்சிகளுக்கு யாரால் அதிகார பூர்வமாக கூறப்பட்டது என்ற விசயம் மறைக்கப்பட்டே வந்தது.இந்நிலையில் தொலைக்காட்சி பேட்டியில் ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொய்தீன் பா.ஜ.கவின் ஆலோசனையின் அடிப்படையில் அதிமுகவின் எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவது அதற்கு தி.மு.க ஆதரவு தருவது என்பதை தன்னிடம் ஸ்டாலினே கூறினார் என்று கூறி தெளிவுப்படுத்தியுள்ளார்.

மொய்தீன் பேட்டியில் மேலும் கூறும் போது இரண்டாம் கட்டமாக திருமாவளவனை முதமைச்சர் ஆக்குவது என்பதும் தன்னிடம் பேசப்பட்டதாகவும் கூறுகிறார்.இந்த பேச்சுவார்த்தை நகர்வுகள் திருமாவளவன் த.வெ.கவிற்கு ஆதரவளிக்கும் காலத்தை தாமதப்படுத்தியதுடன் இணைத்துப்பார்க்க வேண்டி இருக்கிறது.

திரைமறைவில் எவ்வளவு சதுரங்க ஆட்டங்கள் நடந்திருக்கிறது எனும் செய்திகள் ஒவ்வொன்றாக வெளியே வருகிறது!

- செந்தளம் செய்திப்பிரிவு