குதிரை பேரமா? ஒட்டக பேரமா...? - அறிவாலயத்து அட்ராசிட்டியால் பனையூர் பக்கம் வண்டியை திருப்பிய வைகோ காட்டம்!

செந்தளம் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? ஒட்டக பேரமா...? - அறிவாலயத்து அட்ராசிட்டியால் பனையூர் பக்கம் வண்டியை திருப்பிய வைகோ காட்டம்!

காங்கிரசை தொடர்ந்து இரு கம்யூனிஸ்டுகள் மற்றும் iuml,விசிக ஆகியவை த.வெ.க அரசிற்கு ஆதரவளித்து தி.மு.க கூட்டணியை விட்டும் வெளியேறிய நிலையில் தற்போது மதிமுக வும் வெளியேறி உள்ளது.  அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை போல் தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய கேட்டுக் கொண்டார் வைகோ. ஆனால் ஒருவர் ராஜினாமா செய்ய முடியாது என்று தி.மு.கவிலேயே தங்கிவிட்டார். மற்றொருவர் தான் மதிமுகவிலேயே தொடர்வதாகவும் ஆனால் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார்.

தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தனது பேச்சுக்கு மதிப்பளிக்காமல் கல்தா கொடுத்து விட்டதால் வைகோ கடும் கோபமடைந்தார். இந்நிலையில் அவரின் பச்சோந்திதனமான பேச்சையும் கடந்த காலத்திலிருந்து மாறி மாறி கூட்டணி தாவும் அவரது செயலையும் விமர்சித்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். வாரிசு அரசியலை எதிர்த்து மேடைதோறும் முழங்கிய வைகோ தனது தவப்புதல்வன் துரை வைய்யாபுரிக்காக அனைத்தையும் துறப்பதற்கு தயாராகி பம்பரமாக சுழலுவததை எண்ணி மறுமலர்ச்சி திமுகவினர் முகம் சுழித்து வருகின்றனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது எம்.எல்.ஏ.வை தி.மு.க தன் பின்னால் இழுத்துக் கொண்டது குதிரைபேரமா? ஒட்டக பேரமா என்ற கேள்வியை பத்திரைக்கையாளரிடமே கேட்டார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.கவிற்கு ஆதரவளிப்பதாக கூறி முதல் ஆளாக துண்டை போட்டுள்ளார்.

செந்தளம் செய்திப் பிரிவு