ரஷ்யா உடனான வர்த்தகம் குறைப்பு அமெரிக்க எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது இந்தியா!

தீக்கதிர்

ரஷ்யா உடனான வர்த்தகம் குறைப்பு  அமெரிக்க எண்ணெய்  இறக்குமதியை அதிகரித்தது இந்தியா!

அமெரிக்காவின் வரி விதிப்பு நெருக்கடி யைத் தொடர்ந்து, அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்துள்ளது.  உக்ரைன் உடனான போரைக் காரண மாகக் காட்டி, ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட், லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்தார். இதன் மூலம் எந்த ஒரு அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனமும் தடை செய்யப் பட்ட ரஷ்ய நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை செய்ய முடியாது. இதை மீறினால், அபராதம் மற்றும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மிரட்டி னார். ரோஸ் நெப்ட் மற்றும் லுகோயில் சம்பந்தப்பட்ட அனைத்து பரிவர்த்தனை களும் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க கருவூலத் துறையும் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக, அந்நாட்டிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அக் டோபர் மாதத்தில் இந்தியா அதிகரித் துள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்கு மதியில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா வழங்கி வந்தது. இந்த ஆண்டில் சராசரியாக ஒரு நாளைக்கு 17 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இதில்  கிட்டத்தட்ட 12 லட்சம் பீப்பாய்கள் ரோஸ்  நெப்ட் மற்றும் லுகோயிலிலிருந்து நேரடி யாக வந்தது.  ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது  செப்டம்பரில் 17 சதவிகிதம் குறைந்தது. அதேநேரம் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அக்டோபரில் அதிகரித்துள்ளது. 2021 மார்ச்சுக்கு பிறகு, 2025 அக்டோபரில் தான், அமெரிக்காவிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது.  அதாவது, அக்டோபர் அ அமெரிக்காவிடம் நாளொன்றுக்கு 5,93,000 பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியுள்ளது.

தீக்கதிர்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு