பிப்.16-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முடிவு
தின மணி
மத்திய அரசுக்கு எதிராக பிப்.16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.
மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் பிப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம், சென்னை தியாகராயநகரிலுள்ள தொமுச தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் உள்பட 9 சங்கங்கள் சாா்பில் அதன் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில், மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் பிப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தையும், மறியல் போராட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தொழிற்சங்க அமைப்பினா் நடைமுறையில் சாத்தியமான வகையில் வாயில்கூட்டம், மக்கள் கூடுகின்ற இடங்களில் பிரசார இயக்கம் நடத்தி வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தின மணி
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு