பகத்சிங்..பாதை! தியாகத்தை திருடாதே!

துரை. சண்முகம்.

பகத்சிங்..பாதை!  தியாகத்தை திருடாதே!

பகத்சிங்..பாதை!

தியாகத்தை திருடாதே!

அரசியலை உதறாதே!

கொஞ்சம் 

அனுசரித்து

போயிருக்கலாம்.

சீர்திருத்தவாதிகளைப் 

போல

ஏகாதிபத்தியம் 

நோகாமல்

பிரிட்டிஷ் பெருங்கனவில்

இட ஒதுக்கீடு 

கேட்டிருக்கலாம்.

மக்கள் மீது 

செல்வாக்கு செலுத்திய

காங்கிரசின் 

ஒரு வாலாக

களமாடியிருக்கலாம்.

காந்திதான் பெரும்பான்மை

கைராட்டைதான்

  செயல்தந்திரம், 

என

கை மாற்றி சுற்றி

காலத்தை 

ஓட்டி இருக்கலாம்.

இப்போதைக்கு சாத்தியம்

இரண்டு சீட்டு ..

பார்லிமென்ட்டு

பங்கு வாங்க கூட்டணி

பட்டிமன்ற லாவணி

என்று 

கலக்கியிருக்கலாம்.

இர்வின் பிரபுவை 

எதிர்க்க 

சிறிய சக்தி 

நம்மால் முடியாது!

ஆகவே

திமுகவை விட்டால் 

வேறு கதி ஏது?

போடுங்கம்மா ஓட்டு 

உதய சூரியனை பாத்து!

 என்று 

போய் இருக்கலாம்

"ஸ்டைட்டா புரட்சியெல்லாம்!

நடைமுறைக்கு 

ஒத்துவராது

என்று 

"லைட்டா" பேசி

" கொய்ட்டா"

சைமன் கமிஷன் மாதிரி 

சமூக நீதி கமிஷனில் சங்கமித்திருக்கலாம்!

மொதல்ல..

காங்கிரசுக்கு முட்டுக்கொடு!

அப்புறம்..

பிரிட்டிஷை பத்திவிடு!"

இப்போதும்

இப்படி! 

தந்திரம் படைக்கும்

தத்துவப் பிரிவினர்,

தருணத்தை

சரியாகப் பயன்படுத்தி

தம்மையே கருவியாக்கி

புரட்சிகர அரசியலை

ஒரு படி முன்தள்ளிய

பகத்சிங்..தோழர்களை

பெருமை பேசி

உரிமை கொள்ள நியாயமில்லை!

கார்ப்பரேட்

 கையேந்திகட்சிகளுடன்

 சேர்ந்துகொண்டு

வெறும் தியாக வசனம்

அரசியல் திரிபு.

மதிக்கத்தக்க தியாகம்

மட்டுமல்ல,

எந்த நிலையிலும்

புரட்சிகர அரசியலை

தியாகம் செய்யாத 

உறுதியின்

நோக்கமே 

வரித்துக்கொள்ளப்பட வேண்டியது!

நொறுக்கப்பட வேண்டியது

 காவி.

மறுக்கப்பட வேண்டியது 

கதர்.

தேச விடுதலைக்கு.. 

நீங்கள் 

தெரிவு செய்யும் 

அரசியலுக்கு,

வேலைத்திட்டத்திற்கு

இணங்காதவனிடம் போய்

தாமாக வால்பிடிப்பது

மோசடி அரசியல்.,

தற்கொலை பாதை!

நடைமுறை சாத்தியமென்ற

தொழில்முறை காந்திகளே!

பாசிச பொருளாதார

 அடிப்படைகளைக் கொண்ட

கட்சிகளுக்கு

காவடி தூக்கும் 

உங்களுக்கு

பகத்சிங் தியாகம் எதற்கு?

தொழிலாளர்களிடம்

தொலைந்து

முதலாளிகளிடம்

கரையேறும்

கரையான்களை..

பகத்சிங்.. தோழர்களைப் போல

தோலுரிப்போம்!

புரட்சிகர நடைமுறைகளை

சித்தாந்த போராட்டத்தோடு

ஆதரிப்போம்!

           - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/967099969330133/?rdid=i0w8k3wfXe4nvsgv

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு