Agenda 2030 ன் ஆபத்துகள்
முகிந்தன் துரைசிங்கம்
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளின் அரசாங்கங்களும், சர்வதேச அமைப்புகளும் இணைந்து நமது எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு பெரிய திட்டத்தை மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தி வருவது உங்களுக்குத் தெரியுமா?
இது பார்ப்பதற்கு ஏதோ ஒரு கற்பனைக் கதை அல்லது Conspiracy Theory போல் தோன்றினாலும், நாம் எங்கு வாழ வேண்டும், என்ன சொந்தமாக வைத்திருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், பணத்தை எப்படிப் செலுத்த வேண்டும் என்பது வரை அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் திட்டமாகும்.
அந்த திட்டத்தின் பெயர் Agenda 2030.
இந்தத் திட்டம் புதிதல்ல; இது பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. 1970-களில் உலக மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து, வளரும் நாடுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நகரங்களை நோக்கிப் படையெடுத்தனர். அரசாங்களால் அதற்கு ஏற்ப வீடுகளையோ உள்கட்டமைப்புகளையோ உடனுக்குடன் உருவாக்க முடியவில்லை.
இந்தச் சிக்கலைத் தீர்க்க 1976-ல் ஐக்கிய நாடுகள் சபை 'Habitat’ என்ற மனித குடியிருப்புகளுக்கான மாநாட்டை நடத்தியது. உலகத் தலைவர்கள் ஒன்று கூடி எடுத்த அந்த முடிவுதான் மிகப்பெரிய திருப்புமுனை:
நிலம் ஒரு சாதாரண சொத்து அல்ல "நிலத்தை தனிநபர்கள் தன்னிச்சையாகக் கட்டுப்படுத்தும் ஒரு சாதாரண சொத்தாகப் பார்க்க முடியாது" என்று அந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எழுதப்பட்டது.
நில உரிமை என்பது சமூகத்தில் wealth accumulation-ஐ உருவாக்குவதாகவும், சமூக நீதிக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நிலம் கொண்டுவரப்பட்டால்தான் எதிர்கால வளர்ச்சி சாத்தியமாகும் என்று முடிவு செய்தனர்.
அதாவது, காகிதத்தில் நீங்கள் நிலத்திற்குச் சொந்தக்காரராக இருக்கலாம்; ஆனால் அந்த நிலத்தை என்ன செய்ய வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற இறுதி முடிவு மத்திய திட்டமிடுபவர்களிடமே (Central Planners) இருக்க வேண்டும் என்பதுதான் இதன் உள்நோக்கம்.
இதன் தொடர்ச்சியாகவே UN-Habitat அமைப்பு உருவாக்கப்பட்டதுடன், ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை (1996 துருக்கி, 2016 ஈக்வடார் - New Urban Agenda) மாநாடுகள் நடத்தப்பட்டு இந்தத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
1976-ல் ஒரு தொடக்கக் யோசனையாகத் தொடங்கிய இந்தத் திட்டம், சரியாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1992-ல் 'அஜெண்டா 21' (Agenda for the 21st Century) என்ற பெயரில் முழு வடிவம் பெற்றது. சுமார் 179 நாடுகளின் அரசாங்கங்கள் இதில் கையெழுத்திட்டன.
பலரும் "நிலையான வளர்ச்சி" (Sustainable Development) என்றால் மறுசுழற்சி, இயற்கை பாதுகாப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால், இதன் உண்மையான பின்னணி என்னவென்றால்:
கிராமப்புறங்களில் வாழும் மக்களை அங்கிருந்து காலி செய்து, பெருநகரங்களின் மையப்பகுதிகளில் குவிப்பது.
உணவு, இருப்பிடம், மின்சாரம், குடிநீர் என அனைத்திற்கும் மக்கள் அரசாங்கத்தையே முழுமையாகச் சார்ந்திருக்கும் (Dependent on the state) நிலையை உருவாக்குவது.
உலகத்திலுள்ள அனைத்து வளங்களையும் — அதாவது நிலம், நீர், கனிமங்கள், தாவரங்கள், விலங்குகள், உணவு, ஆற்றல், தகவல் மற்றும் மனிதர்கள் அனைவரையும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டு வந்து கணக்கிட்டுக் கட்டுப்படுத்துவது (Inventory and Control Plan).
அமெரிக்காவில் இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்த, ஜனாதிபதியின் நிர்வாக உத்தரவு மூலம் 'நிலையான வளர்ச்சிக்கான ஜனாதிபதியின் கவுன்சில்' (President's Council on Sustainable Development) உருவாக்கப்பட்டது. வணிகம், அரசு, சுற்றுச்சூழல் இயக்கம், தொழிலாளர் இயக்கம் என பல்வேறு தரப்பினரை இணைத்து கொள்கைகள் உருவாக்கத் தொடங்கின.
ஆனால், போகப் போக இந்தத் திட்டங்களின் உண்மையான நோக்கம் என்னவென்று ரோசா கோரி (Rosa Corey) போன்ற விமர்சகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இயற்கைப் வளங்களை (நீர், காற்று, மண், கனிமங்கள்) வெறும் பொருளாதாரப் பொருளாகப் பார்க்காமல், அவற்றை ஒரு "பொதுச் சொத்தாக" (Global Commons) மாற்றி ஒரு குறிப்பிட்ட உலகளாவிய அமைப்பின் கீழ் நிர்வகிக்க வேண்டும் என்ற கருத்து உலகளாவிய பொருளாதார மன்றங்களில் (World Economic Forum) தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளும் இணைந்து 'அஜெண்டா 2030' (Agenda 2030) என்ற திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. முந்தைய திட்டங்களைப் போலன்றி, இது மிகவும் குறிப்பான இலக்குகளையும், மிகத் தெளிவான காலக்கெடுவையும் (2030-க்குள் முடிக்க வேண்டும்) கொண்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் என்னவெனில்:
இது உலகளாவஇய திட்டம்:இது வளரும் நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் சேர்த்துப் பொருந்தும்.
இத்திட்டத்தில் 17 இலக்குகள் மற்றும் 169 இலக்குக் குறியீடுகள் உள்ளன: அதில் பசி பட்டினி ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், இதன் ஆழமான பக்கங்கள் சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன:
இலக்கு 11 (Goal 11): நிலையான மனித குடியிருப்புகள் என்ற பெயரில் மக்களை குறிப்பிட்ட நகர்ப்புறங்களுக்குள் கொண்டுவருவது.
இலக்கு 12 (Goal 12): மனிதர்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு முறைகளை மாற்றுவது.
இலக்கு 8 (Goal 8): அனைவரையும் முறையான வங்கி மற்றும் நிதி முறைக்குள் கொண்டுவருவது (இது டிஜிட்டல் பணத்திற்கு வழிவகுக்கிறது).
இலக்கு 16, குறி 9 (Goal 16, Target 9): 2030-க்குள் உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் முறையான டிஜிட்டல் அடையாளத்தை ( Digital ID)வழங்குவது.
இலக்கு 17 (Goal 17): அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் பெருநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இதைச் செயல்படுத்துவது.
இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி எல்லா நாடுகளிலும் நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் அமல்படுத்துவது?
இங்குதான் ESG (Environmental, Social, and Governance) மற்றும் நிதி முதலீடுகளின் பங்கு வருகிறது.
2004-ல் ஐநா வெளியிட்ட 'Who Cares Wins' அறிக்கையின்படி, உலகின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனங்கள் (குறிப்பாக $10 டிரில்லியனுக்கும் மேல் நிர்வகிக்கும் பிளாக்ராக் - BlackRock நிறுவனத்தின் தலைவர் Larry Fink போன்றவை) தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் இந்த இலக்குகளைப் பின்பற்ற வேண்டும் என்று மறைமுகமாக நிர்பந்திக்கின்றன.
நிறுவனங்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றிற்கான முதலீடுகள் மற்றும் நிதி உதவிகள் தடைபடும் சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனங்களின் நடத்தைகள் கட்டாயமாக மாற்றப்படுகின்றன.
இது சம்மந்தமாக world Economic Forum 2016 ம் 8 கணிப்புக்களை வெளியிட்டன.
1. "எந்தச் சொத்தும் உங்களிடம் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்": எதையுமே சொந்தமாக வாங்குவதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் வாடகைக்கு எடுக்கும் ஒரு புதிய கலாச்சாரம் உருவாக்கப்படும்.
2. அமெரிக்கா முதன்மை வல்லரசாக இருக்காது: அமெரிக்கா தனது Reserve currency status இழந்து, ஒரு பிராந்திய சக்தியாகச் சுருங்கும்.
3. உறுப்புகள் மற்றும் உணவு உற்பத்தி: ஆய்வகங்களில் உறுப்புகள் மற்றும் ஆய்வக உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும்.
4. இறைச்சி நுகர்வு குறைப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இறைச்சி விற்பனை குறைக்கப்பட்டு, ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் புரத உணவுகள் மற்றும் பூச்சிகளிலிருந்து தயாரிக்கப்படும் மாற்று உணவுகள் ஊக்குவிக்கப்படும்.
5. காலநிலை மாற்ற இடப்பெயர்வுகள்: ஒரு பில்லியன் மக்கள் காலநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர நேரிடும்.
6. Carbon Tax: எலக்ட்ரிக் காரைப் பயன்படுத்தாவிட்டாலும் அல்லது கார்பன் வெளியேற்றத்திற்குத் தகுந்தபடி வரிகள் செலுத்த வேண்டியிருக்கும்.
7. விண்வெளி பயணம்: செவ்வாய்க்கிரகத்திற்கான பயணம் மற்றும் வேற்றுக்கிரக வாழ்க்கை தேடுதல்.
8. மேற்கத்திய பாரம்பரியம் மற்றும் விழுமியங்கள் கடுமையான சோதனையைச் சந்திக்கும்.
இந்த இலக்குகளை அடைய பணப் பரிமாற்றங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
2015-ல், உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் 2030-க்குள் ஒரு சட்டப்பூர்வ டிஜிட்டல் அடையாளம் (Legal Identity) வழங்கப்படும் என்று ஐநா உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.
இதற்கான முதல் படியாக ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank) சமீபத்தில் 'டிஜிட்டல் யூரோ' மற்றும் 'பாண்டஸ்' (Pontes) போன்ற திட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் வங்கிகள் தங்களுடைய பரிவர்த்தனைகளைத் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட டோக்கன்கள் மூலம் மிக விரைவாகச் செய்ய முடிகிறது.
இவையெல்லாம் எங்கு போய் முடியும் என்று கேட்டால், நமது சுதந்திரத்தைக் குறைத்துவிட்டு, நம்மை முழுமையாக ஒரு டிஜிட்டல் மற்றும் அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வழிகள்தாம் இவை.
எல்லாவற்றையும் மையப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வந்தால் மட்டுமே அதை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை விதி.
முகிந்தன் துரைசிங்கம்
https://www.facebook.com/100009971290894/posts/3009997932675887/?rdid=8XvTo8aykAmxcvew
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு