வழக்குரைஞர்கள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல...

துரை. சண்முகம்

வழக்குரைஞர்கள் சங்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல...

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றி பரபரப்பாக வாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. 

இந்த இடைவெளியில்  பாசிச பாஜகவின் மாநில துணைத்தலைவரும் வழக்கறிஞருமான பால். கனகராஜ் சென்னை என் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். 

செயலாளராக த. வெ.க கட்சியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி அல்லாத பிரிவுகளை ஆதரிப்பவர்களை தற்குறிகள் என்று சொன்னால் இப்போது இவர்களை தேர்ந்தெடுத்த வழக்குரைஞர்களை என்ன சொல்வது?

பாசிச பாஜக எதிர்ப்பில் தான்தான் தலைவன் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவின் அரசியல் செயல்பாடுகள் இதில் என்ன? 
அதன் வழக்கறிஞர் பிரிவு இந்த கோணத்தில் என்ன அரசியல் பிரச்சாரம் செய்தது என்று பார்த்தால் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் பிரச்சினையிலும் ஈழத் தமிழர் ஆதரவு போராட்டமாக இருக்கட்டும், ஒன்றிய பாஜக அரசை எதிர்க்கும் போராட்டமாக இருக்கட்டும், போலீஸ் அடக்கு முறையை எதிர்க்கும் போராட்டமாக இருக்கட்டும் 
அனைத்திலும் முன்னணியில் நின்று இழப்புகளைச் சந்தித்து போராடுபவர்கள் தமிழக வழக்குரைஞர்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி வ.உ.சி, தொழிலாளர்களுக்கு சார்பு அரசியல் பேசிய தோழர் சிங்காரவேலர் போன்றவர்கள் பங்காற்றிய இடம் இது. 

இன்னும் கூட வரலாற்றுத் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் தொழிற்சங்கத்துக்காக கடுமையாக வாதாடி போராடும் 
சிறப்பான வழக்கறிஞர்களைக் கொண்டது தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் சங்கம்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் பாசிச பாஜக பிரிவு அந்த அரங்கை கைப்பற்றி இருக்கிறது என்றால்! இது முற்போக்கு அரசியல் சக்திகளுக்கு ஒரு பின்னடைவு தான். 

சமூக களத்திற்காக எவ்வளவு போராடினாலும் அதற்கான ஒரு சரியான இடதுசாரி சுயேச்சை அரசியல் தலைமையை வரித்துக் கொள்ளாமல், திமுகவை பாசிச எதிர்ப்பின் தலைமையாக கொள்வதும் அதனை சமூக நீதி அரசியல் என்று ஆதரித்துக் கொண்டு தாங்களும் சந்தர்ப்பவாதங்களாக சிதறிய வடிவில் நடந்து கொண்டதும்,
தங்களை நீதிமன்ற அரங்கிலும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக நிறுவிக்கொள்ளும் வாய்ப்புகளை தவறவிட்டதும்
இந்தப் பின்னடைவுக்குஅல்ல காரணம். 

வழக்குரைஞர்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பேசுவது உண்மை அல்ல, 
என்பதை பாசிச பாஜக வழக்கறிஞர் அரங்கையும் கைப்பற்றியுள்ளதன் மூலம் 
வெளிப்படையாக அறிவித்துள்ளது. 

இன்னும் வழக்கறிஞர் சமூகம் ஒரு தனி சமூகம்! அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்டது! என்று சொல்லிக்கொண்டு, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான அரசியல் சக்திகள் உடன் சமரச சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டிருந்தால் 
என்ன ஆகும் என்பதற்கான எச்சரிக்கை இது!

  - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/1GgUNSL4FN/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு