"ரஷ்ய உலகம்" : உலக மேலாதிக்கத்திற்கான புதிய வெளியுறவுக் கொள்கை

தமிழில் : வெண்பா

"ரஷ்ய உலகம்" : உலக மேலாதிக்கத்திற்கான புதிய வெளியுறவுக் கொள்கை

‘ரஷ்ய உலகம்’: புதிய வெளியுறவுக் கொள்கையுடன் இந்தியா, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை புதின் நாடுகிறார்

"ரஷ்ய உலகம்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட விளாடிமிர் புதினின் புதிய வெளியுறவுக் கொள்கை, சீனா மற்றும் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஜனாதிபதி விளாடிமிர் புதின் திங்களன்று "ரஷ்ய உலகம்" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய வெளியுறவுக் கொள்கை கோட்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தார். ரஷ்ய ஆதரவாளர்கள் அதன்  அந்நிய ஆக்கிரமிப்பை  இந்த கருத்தின் மூலம் நியாயப்படுத்துகின்றனர்.

ஆறு மாதங்களுக்கும் மேலாக உக்ரைனில் போர் நடத்தி வரும் சூழலில் வெளியிடப்பட்டிருக்கும் இதன் 31வது  பக்கத்தில்  "மனிதாபிமானக் கொள்கை"எனும் தலைப்பில் "ரஷ்ய உலகின் மரபுகள் மற்றும் இலட்சியங்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் வேண்டும்" என்று கூறுகிறது.

ஒரு  இலகுவான  போர்த்தந்திரமாக இது முன்வைக்கப்பட்டாலும், உக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததை நியாயப்படுத்தவும், கிழக்கில் பிரிந்து சென்ற ரஷ்ய சார்பு அரசுகளுக்கு ஆதரவளிக்கவும் சில வறட்டுவாதிகள் பயன்படுத்திய ரஷ்ய அரசியல் மற்றும் மதம் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையிலுள்ளது.

"ரஷ்ய கூட்டமைப்பு வெளிநாட்டில் வாழும் மாருஷ்ய தேசிய இனத்தின் உரிமைகளை நிறைவேற்றுவதற்கும்,  நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் ரஷ்ய கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் ஆதரவை வழங்குகிறது" என்றும், அவர்களுடனான ரஷ்யாவின் உறவு "சர்வதேச அரங்கில் பல துருவ உலகத்தை உருவாக்க பாடுபடும் ஒரு ஜனநாயக நாடாக தன் பிம்பத்தை வலுப்படுத்த" அனுமதிக்கிறது என்றும் இக்கொள்கை கூறுகிறது.

1991 இல் சோவியத் யூனியன் சரிவுக்கு பின், ​​ரஷ்யாவிற்கு வெளியே பல நாடுகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் சுமார் 25 மில்லியன் மாருஷ்யர்களின் சோகமான நிலையை  எடுத்துக்காட்டி 'புவிசார் அரசியல் பேரழிவு' என்று புதின் அழைக்கிறார்.

பால்டிக்ஸ் முதல் மத்திய ஆசியா வரையிலான முன்னாள் சோவியத் பகுதிகளை ரஷ்யா தனது சட்டபூர்வமான செல்வாக்கு மண்டலமாக தொடர்ந்து கருதுகிறது - இந்த கருத்து பல நாடுகளாலும் மேற்கு நாடுகளாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

ரஷ்யா ஸ்லாவிக் நாடுகள், சீனா மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவுடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் இப்புதிய கொள்கை கூறுகிறது.

2008ல் ஜார்ஜியாவிற்கு எதிரான போருக்குப் பிறகு ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு ஜார்ஜியப் பகுதிகளான அப்காசியா மற்றும் ஒசேஷியாவுடனும் கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் உடனும் ரஷ்யா தனது உறவுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. 

- வெண்பா (தமிழில்)

மூலக்கட்டுரை: India today