எளிமை வாதத்தை தனிநபர் கவர்ச்சி வாதத்துக்கு பயன்படுத்தும் தத்துவ தற்குறிகள்

துரை. சண்முகம்

எளிமை வாதத்தை   தனிநபர் கவர்ச்சி வாதத்துக்கு   பயன்படுத்தும் தத்துவ தற்குறிகள்

கம்யூனிஸ்டுகள் எனும் பெயரில் "எளிமை வாதத்தை" 

தனிநபர் கவர்ச்சி வாதத்துக்கு 

பயன்படுத்தும் தத்துவ தற்குறிகள் 

இங்கு ஏராளம். இதை தனது தாக்குதல் சந்தர்ப்பத்திற்கு பயன்படுத்துகிறார் சாமிநாதன்.

இதற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தவர்களே சில கம்யூனிச உபதேசியார்களும்தான்.

அரசியல் ரீதியாக அணுகுவதற்கு தடையில்லாத அரசியல் எளிமை தான் கம்யூனிஸ்டுகளுக்கு அடிப்படையே ஒழிய, எளிமை மேக்கப் இறுதியில் உள்ளடக்கத்தை ஏமாற்றுவதற்கு தான் பயன்படும். 

ஒருமுறை சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று கடையில் முழு நீள ஆளுயர லெனின் பேனர் வைத்திருந்தோம். அங்கு வந்த ஒருவர் பாட்டாளிகளின் தோழர்னு சொல்றீங்க கோட் சூட்  பூட்ஸ் போட்டு ஜம்முன்னு இருக்காரே! என்று கிண்டலாக கிளறினார்.

அவரது அரசியல் பின்னணி வாதத்தில் தெரிந்தது, ஐயா அவர் குளிர்பிரதேத்துக்கு ஏற்ற உடையை மேலும் அவர் வேலைக்கு தேவையான உடையை அணிந்திருக்கிறார். கோட்டை போட்டதால் கம்யூனிசத்தை கோட்டை விட்டாரா? இது கண்ணோட்டத்தை உங்களுக்கு சிந்தித்தது உண்டா?  பிரமத்தை உணர்ந்தவன் பிச்சை எடுத்துதான் வாழ வேண்டும் என்று வேதத்தில் சொல்லி இருக்கு! நேரா நாலு தெரு போய் பிச்சை எடுக்காமல் நியூ ஜெர்சியில் போய் கிறிஸ்தவன் கிட்ட வேலை பாக்கலையா? தேவைக்கு ஏற்ற வகையில் காலம் மாறுதலுக்கு ஏற்ப இருப்பதுதானே சரி என்றேன். இப்படி பல அனுபவங்கள்.

இதற்கான அடிப்படை, தத்துவ ரீதியாகவே கூலி விவசாயிகள் மீது ஆண்டைகள் சுமத்திய பண்பாட்டை கம்யூனிஸ்டுகளின் பண்பாடாக கைக்கொள்ளும் 

அடிப்படையிலிருந்து துவங்குகிறது.

இது பின்னர் விரித்து எழுதப்பட வேண்டியது. சுருக்கமாக சொல்லி இருப்பதால் இதை தவறாக பொருள் கொண்டு பொங்குவதற்கும் இடமுண்டு.

நவீன பாட்டாளி வர்க்கம் மற்றும் இன்றைய கிராமப்புற விவசாயிகள் வர்க்கம் கூட நவீன உற்பத்தி முறை உறவுகளுக்கு ஏற்ற நடை உடை பாவனைகளில் மாறி இருக்கிறது. 

அரசியல் வேலைகள் தேவைகளை ஒட்டி வாகனங்களை பயன்படுத்துவது பயணத்திட்டத்திற்கான விரைவு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது என்பதெல்லாம் எந்த நோக்கத்திற்காக என்பதிலிருந்து தான் மதிப்பிடப்பட வேண்டியதே ஒழிய, உலக முதலாளிகளின் சுரண்டலுக்காக தன்னை தடியும் காவியுமாக எளிமைப்படுத்தி காட்டி கொண்ட முழு நேர மகா பெரியவாள்கள் கம்யூனிஸ்டுகளுக்கு தேவையில்லை! 

நிலையற்ற வாழ்வை ஞானத்தை உலகுக்கு சொல்ல வந்த மடத்துக்கு எதுக்கு சொத்து?

முற்றும் துறந்ததாக சொல்லப்படும் சாமியார்கள் ஏசி காரிலும் ஏரோப்ளேனிலும் பறக்கும் போது

வராத கிண்டல் இதுக்கு மட்டும் எதுக்கு பாஸ்?!

போலி புத்தகங்களை அப்புறப்படுத்தும் சாக்கில் போலி சித்தாந்தத்தை நுழைக்கும் உங்களை விமர்சிப்பது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

நீதிமன்றத்தில் வழக்குக்கு இடையே சம்பந்தமில்லாமல் பேசும் அளவுக்கு நெஞ்சு துடித்திருக்கிறது!

துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=1176500181723443&id=100080904177819&post_id=100080904177819_1176500181723443&rdid=m9WaKWwBXwySQRUa

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு