வரலாற்றுப் பழியில் கட்சி கறைபட்டு அழிய வேண்டுமா...?
சத்திய நாராயணன்
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்திலுள்ள பட்டியலிண மக்கள் வசிக்கிற பகுதியிலுள்ள நீர்தொட்டியில் மலம் கலந்து பிரச்சனையான சூழலில்...
விசாரனையை சிபிசிஐடி போலிஸார் இரண்டு ஆண்டுகளாய் காலம் கடத்திய சூழலில்...
முதல் தகவல் அறிக்கையை சமர்பிக்க உயர்நீதி மன்ற அழுத்தத்தின் காரணமாக சமர்பித்த அறிக்கையில் பாதிப்பை முதலில் கண்டு அதனை புகார் அளித்த நபர்களான பட்டியலின வகுப்பை சார்ந்த முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் என்கிற நபர்களையே குற்றவாளி என அறிக்கை சமர்பித்திருக்கிறது தமிழக காவல் துறை.
விசிக, மார்க்ஸிஸ்ட் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் சிபிஐ விசாரனை தேவை என கோரிய சூழலில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் R Mutharasan சிபிஐ விசாரனை தேவையில்லை என சொல்கிறார்.
தற்போது வெளிவந்துள்ள ஜூவியில் மூவரின் பேட்டி மிக தெளிவாக வெளிவந்துள்ளது.
கட்சியின் மூத்த வழக்குறைஞர் தோழர் Balu Mohan மிக தெளிவாக விகடனுக்கு அளித்த பேட்டியில் வேங்கைவயல் நீர்தொட்டி சிக்கலையும்...
அவ்வூரில் இரட்டை டம்ளர் அமலில் இருந்ததையும்...
ஊராட்சி பிரெசிடண்டுக்கும் பாதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணன் வகையறாவுக்கும் உள்ள அரசியல் மோதலை பற்றியும் பேசியிருக்கிறார்.
அவரது பேட்டியில் குற்றவாளியை முடிவு செய்து வைத்துக் கொண்டு விசாரனையை நகர்த்தி இருக்கிறார்கள் என சொல்கிறார்.
இப்படி இருக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் லாபத்திற்க்காக இந்த சிக்கலை கடந்து போகுமெனில் வரலாற்றில் அழிக்க முடியாத கறையை சுமக்க நேரிடும்.
காலமெல்லாம் பாடுபாட்டு சேர்த்த நற்பெயர் நாறி வீச்சமெடுக்கும்...
பாடுபட்டு உழைத்த தியாகிகளின் தியாகம் மலத்தில் கரைந்து நாறும்.
இந்த சிக்கலில் கட்சியின் அரங்கங்களில் ஒன்றானAll India Dalit Rights moments தேசிய செயலாளர் Lenin Dakshinamurthi அவர்களின் நிலை என்ன..?
தமிழ் நாடு ஒடுக்கப்பட்டோர் சங்க செயலாளர் Veerapandian அவர்களின் நிலை என்ன..?
கட்சி முக்கியஸ்தர்கள்ட்ட ஒரே ஒரு கேள்வி.
========================================
இருபைத்தியைந்து எம்.எல்.ஏ சீட்டு தறோம், ஆறு எம்பி சீட்டு தறோம்...
உங்க கட்சி வாட்டர் டேங்குல கொஞ்சம் "நரகல" கலந்துக்கன்னு சொன்னா நாம ஒத்துக்குவோமா....?
அதற்கு ஒப்பானது தான் நாம் இந்த விசயத்தை தேர்தல் லாபத்திற்க்காக கடந்து போவது.
இதையெல்லாம் சகித்து கொண்டு சட்டமன்றம், நாடாளுமன்றம் போய் என்னத்த சாதிக்க போறோம் நாம்...?
- சத்தியநாராயணன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு