இது பாசிச எதிர்ப்பு கூட்டணியோ ! கொள்கை கூட்டணியோ! அல்ல வெறும் தேர்தல் கூட்டணி

துரை. சண்முகம்

இது பாசிச எதிர்ப்பு கூட்டணியோ ! கொள்கை கூட்டணியோ! அல்ல வெறும் தேர்தல் கூட்டணி

இது பாசிச எதிர்ப்பு கூட்டணியோ ! கொள்கை கூட்டணியோ! அல்ல வெறும் தேர்தல் கூட்டணி என்பதை இறுதி நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. 

தமிழகத்தில் கூட்டணிக்கு திமுக தலைமை. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை. தமிழ்நாட்டில் திமுகவுடன் சிபிஎம் கூட்டணி. புதுச்சேரியில் தனியாக நிற்கிறது. இப்படி தேர்தல் அதிகார சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற வகையிலான உட்கட்சித் திட்டங்களே மேலோங்கி நிற்கிறது.

திமுகவை நிர்பந்தப்படுத்தும் அல்லது ஒப்பந்தப்படுத்தும் எந்தத் திட்டத்தின் அடிப்படையிலும் அணுக முடியாது என்பதை கூடவே கூட்டணியில் இருந்த த.வா.க வேல்முருகன் ஒவ்வொன்றாய்  அறிவிக்கும் செய்திகள் வெளிக்காட்டுகிறது.

சுங்கச்சாவடிகளை கட்டுப்படுத்துவது தமிழர்களுக்கு வேலை தருவது பூரண மதுவிலக்கு என்று திமுக செய்ய விரும்பாததை எல்லாம் கோரிக்கை வைத்து! ஒருவகையில் இது ஒன்றிய அரசோடு ஒத்துப் போகக்கூடிய கட்சி என அம்பலப்படுத்தி வெளியேறி இருக்கிறார் வேல்முருகன். 

ஆனால் இந்த ஐந்து ஆண்டுகளில் இது அவருக்கு தெரியாதா என்ன? தமிழர் நலன் எனும் வாசலின் வழியாக இப்போது வெளியே வந்திருக்கிறார். 

மொத்தத்தில் எந்த முடிவுகளும் பாசிச எதிர்ப்பு கூட்டணி எனும் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

திமுக இப்படி செய்யலாமா? என்பது போல நீதி போதனை வகுப்பெடுப்பவர்கள்தான் மக்களை  ஏமாற்றியவர்கள். திமுக எப்பொழுதுமே தன்னை ஒரு திட்டப்படியிலான பாசிச எதிர்ப்பு மாற்று கூட்டணி எனும் உள்ளடக்கத்தில் கூட்டு முடிவுகள் அடிப்படையில் அமைத்துக் கொண்டதாக சொன்னது இல்லை. ஒப்ந்தப்படியிலான கூட்டணி என்று இல்லாமல் கட்சி பலத்தின் அடிப்படையில் தானே தலைவன் என்பதுதான் அதன் நிலைப்பாடு. 

 தலைமையில் ஒற்றை அதிகாரமாக இருந்து கொண்டு பிற இயக்கங்கள் ஜனநாயக சக்திகளை ஆற்றல்களை உள்வாங்கும் தந்திரத்தை மட்டுமே அது வெளிப்படையாக செய்து வந்தது. 

இதை பாசிச 
 எதிர்ப்பு கூட்டணியாக சித்தரித்துக்கொண்டு தங்களது திமுக ஆதரவை நியாயப்படுத்திக் கொண்டவர்கள் தாங்கள் அரசியலாக அம்பலப்பட்ட நிலைமையை திமுகவின் மீது சாக்கிட்டு தங்களது ஒன் சைடு காதலை புனிதப்படுத்த பார்க்கிறார்கள்! 

உண்மையில் பெரு முதலாளிகள், இயற்கை வள சேவைத்துறை விற்பன்னர்கள் உறவில் திமுக கூட்டணியில் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையை உண்மையாக எதிர்கொள்ள முடியாத பலவீன பாசறைகளாக இடதுசாரிகள் இருப்பதுடன்,
இதற்கு பாசிச எதிர்ப்பு என முட்டும் கொடுப்பதுதான்  பாசிச கட்டமைப்பை ஊக்கப்படுத்தும் சமூக அரசியல் அடிப்படையாக
இருக்கிறது.



துரை. சண்முகம்

https://www.facebook.com/share/1At7Fnvm55/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு