கிரீன்லாந்தில் புதிய தூதரகம் திறப்பு: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் தந்த ராஜதந்திர பதிலடி

லங்கா ஸ்ரீ நியூஸ்

கிரீன்லாந்தில் புதிய தூதரகம் திறப்பு: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் தந்த ராஜதந்திர பதிலடி

கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை மிரட்டல் விடுவது போன்று இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்கா- கிரீன்லாந்து சர்ச்சை

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா கிரீன்லாந்தை விலை கொடுத்து வாங்கலாம் அல்லது தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என கருத்து தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து பேசி வருவது, இது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதுடன் சில முக்கிய ஐரோப்பிய நாடுகளுடனான ராஜதந்திர மோதலையும் தூண்டியுள்ளது.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்

இந்நிலையில் புதன்கிழமை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கை மிரட்டல் விடுவது போன்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பிரான்ஸின் RTL ஊடகத்துக்கு அளித்த பேட்டியின் போது, ஜீன்-நோயல் பரோட் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், கிரீன்லாந்து விற்பனைக்கானது அல்ல, மேலும் அமெரிக்காவின் மிரட்டல் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கிரீன்லாந்தில் புதிய தூதரகம் திறப்பு: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் தந்த ராஜதந்திர பதிலடி | France Condemns Us Over Greenland Issue

அத்துடன் அமெரிக்காவின் அழுத்தம் ஏற்படுத்தும் கொள்கைக்கும் ஜீன்-நோயல் பரோட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுக்க, எதிர்வரும் 6ம் திகதி கிரீன்லாந்தில் பிரான்ஸ் தனது புதிய தூதரகத்தை திறக்க உள்ளது.

கிரீன்லாந்து மட்டும் இல்லாமல் ஈரானில் 3 வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மக்கள் போராட்டமும், ஈரான் அரசின் வன்முறைக்கும் பிரான்ஸ் அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் கவலை தெரிவித்துள்ளார்.

லங்கா ஸ்ரீ நியூஸ்

https://news.lankasri.com/article/france-condemns-us-over-greenland-issue-1768382339

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு